இலங்கையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக புதிய நடவடிக்கை

சாரதிகள் குடிபோதையில் உள்ளனரா என பரிசோதிப்பதற்காக 90 ஆயிரம் சுவாச சோதனை குழாய்களை நாடு பூராகவும் உள்ள காவல் நிலையங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு காவற்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது. அதன்படி , எதிர்வரும் தினங்களில் குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் , அவர்களுக்கு எதிராக உடனடியாக வழக்கு தொடரப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் , குடிபோதையில் வாகனம் செலுத்தம் சாரதிகளின் சாரதி அனுமதிபத்திரத்தை சில காலத்திற்கு ரத்துச்செய்ய நீதிமன்றின் அனுமதியை எதிர்ப்பார்த்துள்ளதாக காவற்துறை தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

புத்தளம் மாணவிகள் இருவரை தொந்தரவு செய்த பொலீஸார் – அதிரடி முடிவெடுத்த மாணவிகள்

பொலிஸாரின் செயற்பாட்டை ஆட்சேபிக்கும் வகையில் பாடசாலை மாணவிகள் இருவர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர். புத்தளம், தும்மலசூரிய பொலிஸ் நிலைய பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற உபத்திரவம் மற்றும் பிரச்சினையை தாங்கி கொள்ள முடியாத பாடசாலை மாணவிகளே இவ்வாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்று மாரவில பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர். தும்மலசூரிய, பிபிலதெனிய பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பாடசாலை மாணவிகளே இவ்வாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர். 12 ஆம் மற்றும் 7 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் இந்த இரண்டு மாணவிகளின் கதையை கேட்ட பலர் சட்டத்தை நிறைவேற்றுமாறு பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். தும்மலசூரிய பொலிஸார் பணத்திற்காகவே செயற்படுவதாகவும், தங்களிடம் வழங்குவதற்கு பணம் இல்லை எனவும், குறித்த மாணவிகள் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட காணி பிணக்கு காரணமாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் பொலிஸார் ஒருதலைபட்சமாக…

Read More

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் – கடகம்

ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம், 17ம் தேதி (02/09/2017) சனிக்கிழமை அன்று காலை 09:32 மணிக்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளார். கடகம் – (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) பார்வையாலேயே மற்றவர்களை பணியவைக்கும் திறமை உடைய கடகராசியினரே நீங்கள் சுறுசுறுப்பானவர். இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு,…

Read More

இலங்கையில் ரயிலில் இளம்பெண்னின் ஆடைக்குள் கையை விட்ட புத்த பிக்கு – படம் இணைப்பு

இளம் பிக்கு ஒருவர் புகையிரதத்தில் பயணம் செய்யும் போது யுவதி ஒருவருடன் சில்மிசத்தில் ஈடுபட்டமை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. எந்த பிரதேசத்திற்குச் செல்லும் புகையிரதமென தகவல்கள் ஏதும் அதில் குறிப்பிடப்படவில்லை. குறித்த இளம் பிக்கு இரு யுவதிகளுக்கிடையில் அமர்ந்திருந்து அதில் ஒரு யுவதியின் கையைப் பிடித்தவாறும், இடையிடையே அப் பெண்ணின் ஆடைக்குள் வயிற்றுப் பகுதியில் கையை விட்டும் சில்மிசத்தில் ஈடுபட்டுள்ளார். பேருந்துகளில் பயணம் செய்யும் போது பிக்குமாருக்கு அருகில் பெண்கள் அமரக் கூடாது. அவ்வாறு தெரியாமல் யாரும் இருந்தால் பேருந்தில் பயணம் செய்பவர்களே எழும்பச் சொல்லி விடுவார்கள். இது இந்த நாட்டின் வழக்கம். இவ்வாறிருக்க இந்த பிக்குவின் செயல் புத்த சாசனத்திற்கே அவமானமென சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் – மிதுனம்

ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம், 17ம் தேதி (02/09/2017) சனிக்கிழமை அன்று காலை 09:32 மணிக்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளார். மிதுனம் – (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) எந்த இக்கட்டான நிலையையும் சமாளிக்கும் திறமை உடைய மிதுனராசி யினரே நீங்கள் பிடிவாத குணமும் உடையவர். இந்த குருப் பெயர்ச்சியில் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும்….

Read More

யாழ்ப்பாணம் வந்து திரும்பிய வவுனியா சிறுவன் மீது 34 வயது நபர் துஸ்பிரயோகம்

வவுனியா நகரில் பிரபல பாசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவன் ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு குறித்த முறைப்பாடு பதிவாகியுள்ளது. விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக பாடசாலை ஆசிரியர்களுடன் யாழ்ப்பாணம் சென்று வந்த வவுனியாவின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் வவுனியா நகருக்கு வருவதற்கு மாலை ஆகிய நிலையில் குறித்த சிறுவனின் வீடு பூவரசன்குளம் பகுதியில் உள்ளமையால் அங்கு செல்ல முடியாது என குறித்த சிறுவனின் உறவினர் வீட்டில் தங்குமாறு கூறிவிட்டு ஆசிரியர்கள் சென்று விட்டனர். இதன்போது குறித்த சிறுவன் வவுனியா நகருக்கு அண்மையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்லாது தனது வீட்டிற்குச் செல்ல பேரூந்து தரிப்பிடத்தில் நின்றுள்ளான். இதன்போது அங்கு வந்த நபரொருவர் தான் கொண்டு சென்று விடுவதாக சிறுவனை அழைத்துக் கொண்டு…

Read More

ப்ளூ வேல் அட்மின் 5000 பேர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தற்போது உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் விளையாட்டு ‘ப்ளூ வேல்’. ரஷ்யாவில் அறிமுகமான இந்த விளையாட்டு உலக நாடுகளில் பல இளைஞர்களின் உயிரை எடுத்துவிட்டது. கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கால் பதித்துள்ள நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ‘ப்ளூ வேல் அட்மின்’ கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி 5000க்கும் மேற்பட்டோர் ‘ப்ளூ வேல்’ அட்மினாக செயல்படுகின்றனர் என கூறியுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட 50 நாட்களில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதே இதன் இறுதி முடிவு. ஆனால் அவ்வாறு தற்கொலை செய்ய தயங்கியவர்களே இந்த அட்மின்கள். இவர்கள் தற்கொலைக்கு பயந்து கெஞ்சி கூத்தாடி அட்மினாக செயல்படுகிறேன் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த தகவல் அனைத்தும், தென்கிழக்கு ரஷ்யாவில் உள்ள கபாராவ்ஸ்க் ராய் என்ற பகுதியில் கைதான 17 வயது…

Read More

புளூவேல் விளையாட்டிற்கு பின் இருக்கும் மர்மம் – இளம் பெண் பிரியாவின் தகவல்களை திருடிண அட்மின்

புதுச்சேரியில் புளுவேல் விளையாட்டில் சிக்கி மீட்கப்பட்ட இளம் பெண் வங்கி ஊழியர் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. லேப்டாப்பில் உள்ள தகவல்களை திருடி மிரட்டியதால் உடலில் 10 இடங்களில் குண்டூசியால் எப் -45 என்று கிழித்து கொள்ளும் சைகோ நிலைக்கு தள்ளப்பட்ட பரிதாப சம்பவத்தின் பின்னணி குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. புளூவேல் என்ற பிளாக்மெயில் விளையாட்டில் சிக்கி இருந்த புதுச்சேரி உப்பளத்தை சேர்ந்த பிரியா என்ற வங்கி ஊழியர் ஞாயிற்றுகிழமை அதிகாலையில் கடலில் இறங்கி செல்பி எடுத்த போது மீட்கப்பட்டார்..! அப்போது ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பெண்காவலர்களின் உதவியுடன் மீட்டனர். உறவினர்கள் வந்து அவரை அழைத்துச்செல்ல முயன்றபோது சைகோ மனநிலையில் காணப்பட்ட பிரியா அங்கிருந்து செல்லமறுத்து அடம்பிடித்தார் அவரை மீட்ட காவல்துறையினரை பாராட்டிய, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, ரொக்கப்பரிசும் சான்றிதழும் வழங்கினார்….

Read More

இந்துத் திருமணத்தில் குங்குமம் எடுத்து கொடுத்த நாமல் ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அவருடைய நண்பனின் திருமண வீட்டிற்கு சென்றுள்ளார். இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட நாமல் மணமக்களுக்கு அருகில் சென்று மணமகனுக்கு குங்குமம் எடுத்து கொடுத்துள்ளார். இந்து முறைப்படி திருமண வீட்டில் தாலி கட்டி முடிந்தவுடன் மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமம் வைத்து விடுவது வழக்கம். அந்த வகையில் நாமலின் நண்பனான மணமகன், மணமகளுக்கு தாலி கட்டியதும் குங்குமம் வைக்கும் கிண்ணத்தை எடுத்து அவருடைய கைகளால் கொடுத்துள்ளார். மேலும், தனது நண்பன் கீத் திருமண பந்தத்தில் இணைவதையிட்டு தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க

Read More

யாழ்ப்பாணத்தின் கேவலம் – மாப்பிள்ளைகளின் இன்றைய விலை நிலவரம்

ஆண்களை வலிமையாய் படைத்தது பெண்ணைக் காக்கவே என்பது மறைந்து, இன்று பெண் கன்னி கழியவும் சீதன சந்தையில் தகப்பன் காசு கொடுக்க வேண்டிய செயலை எப்படி நாம் விபரிக்க? ஆண் என்பவன் யார்? அவனது வலு என்ன? அவன் எவ்வாறு செயற்பட வேண்டும்? உழைத்து ஒரு பெண்ணுக்குச் சாப்பாடு போட்டு அவளின் வாழ்க்கையைப் பொறுப்பெடுக்காத எந்த ஒரு ஆணும் தன்னை ஒரு குடும்பத் தலைவன் என்று கூறிக்கொள்ள முடியுமா? மாப்பிள்ளைகளின் இன்றைய விலை நிலவரம் இன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் கல்யாணச் சந்தையில் மாப்பிள்ளைக்கான ‘ரேட்’டைத் தெரிந்து கொள்வது பயனுடையது. 1. வேலை வெட்டியில்லாத மாப்பிள்ளை – 8 லட்சம் பணம், நகை 15பவுண், வீடு 1 2. கூலி வேலை மாப்பிள்ளை – 10 லட்சம் பணம் , நகை 15 பவுண், வீடு 1 3….

Read More