கேர்ள் ஃப்ரண்ட் இல்லையே என்று கவலைக் கொள்ளும் பாய்ஸா நீங்க?

கனவுகள் என்பதை எல்லாம் கடந்து தனிப்பட்ட விருப்பம் என்பது தான் இதில் மிகவும் முக்கியமானது. எதிர்காலம் காலம் குறித்த திட்டமிடல் பலருக்கும் இருக்கும். எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறுமா? என்பதைப் பற்றியெல்லாம் இங்கு கவலையில்லை நாம் மகிழ்ச்சியாக இருக்க நினைத்தபடியான வாழ்க்கை நமக்கு வந்தாக வேண்டும்.

இன்றைய நவயுக ஆண்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனை. பிரச்சனை என்று சொல்வதை சங்கடங்கள் என்றே சொல்லலாம்.

கவனச் சிதறல் :

என்ன தான் நினைத்தாலும் அதனை நிறைவேற்ற முடியாமல் தவிர்ப்பதற்க்கு காரணம் நமக்கான சில கவனச்சிதறல்கள் தான்.நினைத்ததை அடைய வேண்டுமானால் இதிலும் கவனம் செலுத்த வேண்டும். நம் கவனத்தை சிதறடிப்பது எது? என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் மட்டுமே அதிலிருந்து விலக முடியும்.

பல நேரங்களில் நாம் தோல்வியை தழுவுவதற்கு காரணம், நாம் தயாராகவில்லை என்று அர்த்தமன்று தேவையற்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் நேரம் மேலாண்மையை கடைபிடிக்காது இருப்பதால் தான் நமக்கான வெற்றி தள்ளிப்போகிறது.

இதைச் செய்தால் போதும் :

நீங்கள் வெற்றியாளர் ஆக வேண்டுமெனில் திட்டமிடலும் கடின உழைப்பும் மட்டும் இருந்தால் போதாது. சில தியாகங்களையும் செய்ய வேண்டும். இந்த தியாகம் உங்களின் வெற்றியை இன்னும் அழகாக்கும். சரி,எதை தியாகம் செய்ய வேண்டும்? எப்படி தியாகம் செய்வது… முதலில் உங்களுடைய நேரத்தை அதிகம் திங்கும் விஷயத்தை தியாகம் செய்திடுங்கள். இந்தக் கேள்விக்கு உங்களின் பதிலென்ன என்பதை மனதில் நினைத்துப் பாருங்கள். அந்த பதில் நேர்மையானதாக இருக்க வேண்டும்.

நேர்மையான பதில் :

ஒரு நாளில் எத்தனை பெண் தோழிகளிடம் பேசுவீர்கள்? அவர்களுக்காக, அவர்களின் குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்பவதற்காக என எவ்வளவு மணி நேரம் செலவழிக்கிறீர்கள்? அல்லது அவர்களைப் பற்றிய சிந்தனையிலேயே எவ்வளவு மணி நேரங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள். இப்போது பேசிக்கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கையைப் போலவே சில மாதங்களுக்கு முன்னர் அல்லது சில ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் பேசிய பெண்கள் எவ்வளவு? இப்போதும் குறிப்பிட்ட எண்களை நினைத்திருப்பீர்கள் இந்த இரண்டு எண்களுக்கும் ஏதேனும் வித்யாசங்கள் இருக்கிறதா? . நம் நேரத்தை எப்படி தின்கிறது என்பதை இப்போதாவது புரிந்ததா?

நமக்கான நேரம் :

நமக்கான நேரம் நம் கைகளில் நிறையவே இருக்கிறது. நேரம் இருக்கிறதென்பதாலேயே காதலிக்கலாம் என்று அர்த்தமன்று நேரம் இருப்பதாலேயே பெண் தோழிகளிடம் பேச வேண்டும் என்று அவசியமும் கிடையாது. ஒரு முக்கியமான விஷயத்தை உணருங்கள். நீங்கள் பேசிடும் பெண்களுக்கு நீங்கள் மட்டும் தான் பேசுகிறீர்களா? இல்லை என்று தெரிந்தாலும் அதைப் பற்றிய கவலை உங்களுக்கு இல்லை. காரணம் அந்த இடத்தில் உங்களுடைய சுயத்தை விட்டுத்தர தயாராக இருக்கிறீர்கள். ஒரு பெண்ணுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருக்கிறீர்கள். இதே முன்னுரிமை உங்களின் பெற்றோர் உடன்பிறந்தோருக்கு கொடுக்க மறுக்கிறீர்கள். முக்கியமாக உங்களுக்கே கொடுக்க மறுக்கிறீர்கள்.

பெண்கள் நினைப்பது தெரியுமா?

உங்களைப்போலவே நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பிடும் பெண்களும் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கான சரியான திட்டமிடல் இருக்கும். தனக்கான ஓர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அதற்குள்ளே கச்சிதமாக தங்களுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்நியமாக அறிமுகமான உங்களுடன் நேரத்தை செலவழிக்க அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். ஆனால் நீங்கள் அந்தப் பெண்ணுடன் பேச வேண்டும், நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விடாமுயற்சியென நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பீர்கள்.

கவனம் தேவை :

இது பிடிபடவே நிறைய காலம் எடுக்கும் இன்னும் சிலருக்கு இறுதிவரையிலும் இது புரியாது. என்ன நினைக்கிறாள் என்று புரியவில்லை ஒன்றை சொல்கிறாள் இன்னொன்றைச் செய்கிறாள் என்று நீங்கள் தான் பொலம்பிக் கொண்டிருக்க வேண்டிவரும். இதன் பின்னால் ஓடி உங்களுக்கா வாய்ப்புகளை, மகிழ்ச்சியான தருணங்களை எல்லாம் இழக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

பெண் எதிரியா? :

உங்களுக்கான மகிழ்ச்சியை, வாய்ப்புகளை இழக்கச் செய்வதால் அவள் உங்களுக்கு எதிரியா? கிடையவே கிடையாது. அவளுடைய வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எது தனக்கு தேவை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறாள். இந்த நேரத்தில் எனக்கு என்ன தேவை? என்று தனியாக பிரித்தரிந்து அதனை கையாளத் தெரிகிறது. உங்கள் மீது மதிப்பு இருந்தால், உங்கள் லட்சியத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் கேரள் பிரண்ட் இல்லையே என்று கவலைக் கொள்வதை விட்டுவிடுங்கள்.

பெண்கள் தேவதைகளா ? :

பெண் என்று சொன்னதுமே அதுவும் எனக்கான பெண் என்று நீங்கள் நினைக்கும் போதே வானத்திலிருந்து வந்து குதித்த தேவதை ஈடு இணையில்லாத அன்பு அவளுக்கு கொடுக்க வேண்டும். என்னைத் ஆரத்தழுவி என்னை தாங்குவாள் என்ற எதிர்ப்பார்ப்பு தான் எல்லாருக்குள்ளும் இருக்கிறது. பெண் என்பவள் உங்களைப் போலவே சாதாரண மனுஷி தான். விருப்பங்களும் வெறுப்புகளும் அவளுக்கும் இருக்கும் உங்களைப் போலவே. திரைப்படங்களில் காண்பிப்பதை நினைத்து, எந்த சூழ்நிலையிலும் கதாநாயகி அந்த கதாநாயகனுக்கு ஆதரவாய் நிற்பதை பார்த்து பழகியதால் தான் இந்தப் பிரச்சனை வருகிறது.

ரிலேஷன்ஷிப் :

பெண்களுடன் நட்பு கூடாது, காதல் கூடாது என்று சொல்லவில்லை. உங்கள் வாழ்க்கையில் ஓர் பெண்ணுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உங்களுக்கு கொடுங்கள். உங்கள் லட்சியத்திற்கு கொடுத்திடுங்கள். உங்கள் நேரத்தை வீணடிக்கும், உங்கள் கவனத்தை திசை திருப்பும் விஷயமாக பெண்ணை அணுகாதீர்கள்.

Comments

comments

Related posts