புங்குடுதீவு மாணவி வித்தியாவை கற்பழித்துக் கொன்றது கடற்படையே

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கடற்படையினரே கொன்றனர் என்றும், தம் மீது வீண்பழி சுமத்தி மக்களை நம்பவைத்து விட்டனர் என்றும் வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபரான மகாலிங்கம் சசீந்திரன் சாட்சியமளித்துள்ளார். வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள், யாழ் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில், கடந்த இரண்டு மாத காலமாக நடைபெற்று வருகின்றது. இதில் அரச தரப்பு சாட்சியப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் (திங்கட்கிழமை) எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்போதே எதிரியான சசீந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே புங்குடுதீவில் சாரதாம்பாள் மற்றும் தர்சினி ஆகிய இரு பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் கடற்படையினரே செயற்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டிய சசீந்திரன், வித்தியா கொலைச் சூத்திரதாரிகளும் கடற்படையினரே என்று தெரிவித்துள்ளார். எனினும், அதனை மூடி…

Read More

இலங்கையில் சிறு வயதில் ஆபாச படங்களுக்கு அடிமையான பெண் – 4 திருமண குழறுபடி

சிறு வயதில் இருந்து ஆபாச படங்களை பார்ப்பதற்கு அடிமையான யுவதி ஒருவர் நான்கு முறை திருமணம் செய்து அவை அனைத்தையும் சீர்குழைத்து கொண்ட செய்தி, காலி பிரதேசத்தில் தெரியவந்துள்ளது. 28 வயதான இந்த யுவதி 2005 ஆம் ஆண்டு முதன்முறையாக திருமணம் செய்துள்ளார். பின்னர் குழந்தை ஒன்றையும் பிரசவித்துள்ளார். எனினும் இரண்டும் வருடங்கள் மாத்திரமே திருமண உறவு நீடித்துள்ளது. அவரது கணவர் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில், 2007 ஆம் ஆண்டு அந்த யுவதி வசித்து வந்த பிரதேசத்தில் வேறு ஒரு நபரை இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் குழந்தை பிறக்காததால் அந்த கணவரை அவர் வெறுத்துள்ளார். 3 வருடங்களில் அந்த திருமண உறவும் முறிந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டு முன்றாவது முறையாகவும் திருமணம் செய்துள்ளார் அந்த யுவதி. இதற்கு முன்னர்…

Read More

Update :- யாழ் படகு விபத்து – மாணவரின் சடலம் மீட்பு (படங்கள்) – மாணவர்கள் மது அருந்தி இருந்தனர்

யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு கடற்பகுதிக்கு அப்பால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த உயர் தர மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினேஸ் என்ற மாணவரின் சடலமே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவரின் பிறந்தநாளை கொண்டாடும் முகமாக , இன்றைய உயர்தர பரீட்சை நிறைவடைந்தவுடன் மாணவர்கள் ஏழு பேர் இணைந்து மண்டைத்தீவு கடற்பகுதிக்கு சென்று அங்கு படகு சவாரி செய்துள்ளனர். பகுதியளவில் சேதமடைந்திருந்த படகொன்றிலேயே குறித்த மாணவர்கள் படகு சவாரி செய்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இதன் போது குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் , 5 மாணவர்கள் உயரிழந்த நிலையில் , மேலுமொரு மாணவர் நீந்தி கரை திரும்பியுள்ளார். தினேஸ் என்ற மாணவர் காணாமல் போயிருந்த நிலையில் , அவரின் சடலம் சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி , இந்த படகு விபத்தின் பலி…

Read More

கொழும்பு மக்களுக்கு ஓர் அறிவித்தல்

கொழும்புக்கு அண்மையில் குடிநீர் விநியோகக் குழாய் ஒன்றில் பெரும் வெடிப்பொன்று ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பு தெற்குப் பகுதிக்கு குடிநீரை விநியோகம் செய்வதற்கான பிரதான குழாய் இவ்வாறு வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு தெற்குப் பிரதேசத்தின் மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவை, பன்னிப்பிட்டிய பகுதிகளில் தற்போது குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மேற்குறித்த பிரதேச மக்கள் கையிருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் நாளை மாலை நான்கு மணி வரை அப்பிரதேசங்களுக்கான குழாய் நீர் விநியோகம் தடைப்படும் என்றும் தேசிய நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது.

Read More

யாழ்ப்பாணம் தென்மராட்சியில் சீதனக் கொடுமையால் சிதைந்த 29 வயது ஆசிரியை

சீதனக் கொடுமையால் இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்த சம்பவம் யாழ். மாவட்டம், தென்மராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் சீதனத்தை அதிகரித்துத் தரும்படி கேட்டதால் மனமுடைந்த பெண் தன் உயிரை மாய்த்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். 29 வயதான முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் வாழ்க்கையையே சீதனக் கொடுமை சிதைத்துள்ளது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெறும் நிலையில், சீதனம் போதாது சீதனத்தை அதிகரித்துத் தர வேண்டும் என்றும், அதிகரித்துத் தராவிட்டால் திருமணம் இடம்பெறாது என்றும் மணமகனின் உறவுகள் திடீரென நேற்று மணமகள் வீட்டாருக்குக் கூறினர் என்று மணமகளின் உறவினர்கள் தெரிவித்தனர். உயிரை மாய்த்த பெண்ணின் பெற்றோர் இறந்து விட்டனர். அவர் கொழும்பில் வாழ்கிறார். அவரது சகோதரி தென்மராட்சியில் வசிக்கிறார். சகோதரியே இந்தத்…

Read More

யாழ்ப்பாணத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம் – 6 மாணவர்கள் பரிதாப பலி – 2ம் இணைப்பு

யாழ். மண்டைதீவு, சிறுதீவு கடற் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. முன்னதாக ஐவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவரை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் காணாமல் போயிருந்த மாணவனும் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இரண்டாம் இணைப்பு யாழ். மண்டைதீவு, சிறுதீவு கடற் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் மாணவர்கள் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாகவும், காணாமல் போன ஒருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த அனைவரும், இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. மண்டைதீவுக்கு அருகில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகில் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் நல்லூர், கொக்குவில் மற்றும்…

Read More

ஆசிய ஆணழகன் போட்டியில் வென்ற தமிழன் புஸ்பராஜ் – படங்கள் இணைப்பு

ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தமிழர் லூசியன் புஷ்பராஜ் வெற்றி! இலங்கை வரலாற்றில் ஆசிய ஆணழகன் போட்டியில் முதல் தடவையாக முதலிடம் தென் கொரியாவின் சோல் நகரில் இடம்பெற்ற 51ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜ் மிஸ்டர் ஏசியா (Mr.ASIA) மகுடத்தை வென்றுள்ளார். ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையொருவர் வெற்றிப் பெற்றது இதுவே முதன்முறையாகும். மிஸ்டர் ஏசியா போட்டி பட்டத்தை வென்றதுடன் முன்னதாக நடத்தப்பட்ட 100 கிலோ எடைப்பிரிவிலும் லூசியன் புஷ்பராஜ் வெற்றிப்பெற்றுள்ளார். ஆசிய ஆணழகர் போட்டிகளில் 26 நாடுகளைச் சேர்ந்த 350இற்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள்

Read More

காதலி சிறுமி உட்பட 3 சிறுமிகளுடன் சிலாபம் கடற்கரையில் உல்லாசம் அனுபவித்த இளைஞன்

மூன்று சிறுமிகளை மோட்டார் வாகனத்தில் ஏற்றி சிலாபத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படும் 25 வயதான நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குளியாபிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று அவரை ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர், குளியாபிட்டிய பிரதேசத்திற்கு மேலதிக வகுப்பிற்கு வந்த 3 சிறுமிகளை இவ்வாறு மோட்டார் வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் குளியாபிட்டிய – பல்லேவெல பிரதேசத்தில் உந்துருளி திருத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை காலை மேலதிக வகுப்பிற்காக வந்த இந்த சிறுமிகளில் ஒருவர், தனக்கு வீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறி வீட்டை விட்டு செல்ல வேண்டும் என ஏனைய சிறுமிகளிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இதில் ஒரு சிறுமியுடன் காதலில் ஈடுபட்டிருந்த குறித்த இளைஞன், இது தொடர்பில் அறிந்து, அந்த…

Read More

இலங்கை அரச வேலைவாய்ப்புக்கள் (21 -27 ஓகஸ்ட் 2017 காலத்தில் வெளியிடப்பட்டவை)

இந்த வாரம் வெளியான அரச, வங்கி மற்றும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்களின் தொகுப்பு குறிப்பு: இப் பகுதியில் ஏதாவது தெளிவின்மை காணப்படுமாயின் எங்களுடன் பேஸ்புக் மெசேஸ் மூலம் இணைந்து தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

Read More

இலங்கையில் தெருநாயின் மருத்துவத்துக்கு 80000 செலவிட்ட இளைஞன்

நோயினால் பாதிக்கப்பட்ட தெரு நாய் ஒன்றை காப்பாற்றுவதற்கு இளைஞர் ஒருவர் 80 ஆயிரம் ரூபா பணம் செலவிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த கிஹான் தினுஷ்க என்ற இளைஞரே இந்த சேவையை செய்துள்ளார். அந்த நாயின் வாய் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாயினை காப்பாற்றுவதற்காக 80 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் இணைந்து இந்த நாயை காப்பாற்றியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் கிஹான் தினுஷ்க பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். நாயை சிகிச்சைக்காக கண்டிக்கு கொண்டு சென்ற போது வைத்தியர்கள் விடுமுறை என்று கூறினார்கள். குருணாகலில் தற்போது அதனை காப்பாற்றுவது கடினம் என்று கூறினார்கள். கொழும்பில் கொலை செய்வதற்கு தடுப்பூசி வழங்குவதாக கூறினார்கள். தெரு நாய் ஒன்றுக்கு சிலர் 80 ஆயிரம் ரூபா செலவிட பைத்தியமா என கேட்டார்கள்….

Read More