பேச மறுத்த 9ம் வகுப்பு மாணவியின் கையை வெட்டி துண்டாக்கிய கொடூரன்

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள பதேபூர் சைத்ரி மார்க்கெட் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

அங்குள்ள வெல்டிங் கடையில் வேலை செய்து வருபவர் வினோத் சவுராஸ்யா. இவர் அதே பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் 3 மணிக்கு அந்த மாணவி மார்க்கெட்டுக்கு வந்தார். அவரை கண்ட வினோத், அவரிடம் பேச முயன்றான். ஆனால் மாணவி அவரை கண்டு பயந்து ஒதுங்கினார்.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த ஆசாமி, அருகில் இருந்த கத்தியை எடுத்து மாணவியின் கையை வெட்டினான். இதில், அம்மாணவியின் கை துண்டாக கீழே விழுந்தது.

மேலும், அவரது மற்றொரு கையையும் வெட்ட முயன்றார். ஆனால் அங்கிருந்த மக்கள் அவனை மடக்கி பிடித்தனர். அவர்கள் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கையில் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நிலை குணமடைந்து வாக்குமூலம் தந்தால் தான் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Comments

comments

Related posts