இலங்கையில் மாணவனுக்கு ஆபாச படங்களை காட்டி பாலியல் நடவடிக்கைக்கு தூண்டிய ரியூசன் ஆசிரியர்

சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட பகுதி நேர வகுப்பை நடத்தும் ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தேசிய பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

15 வயதான மாணவனுக்கு ஆபாசப் படங்களை காண்பித்து பாலியல் நடவடிக்கைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த ஆசிரியர் தொடர்ந்தும் மேற்கொண்டு வந்த தொந்தரவு தொடர்பில் மாணவன் அவரது குடும்பத்தின் உளவியல் ஆலோசகர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

அவரது வழிக்கட்டலில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்ததாக சிறுவர் பாதுகாப்பு தேசிய அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியரை விசாரணைகள் முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

comments

Related posts