ஒருவருக்கு மரணம் நிகழ போகிறது என சிவ புராணத்தில் கூறப்பட்டிருக்கும் 11 அறிகுறிகள்!

நமது இதிகாசம், புராணங்களில் ஒருவர் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது. எப்படி வாழ்ந்தால் ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும், கர்மா என்றால் என்ன? எதனால் அடுத்த பிறவி எடுக்கிறார்கள், மறுபிறவி என ஒன்று இருக்கிறதா? என பலவன கூறப்பட்டுள்ளன. இவை எல்லாம் உண்மையா? பொய்யா? கட்டுக்கதையா? வெறும் கதையா? என இன்றளவும் பல மேடைகளில் தலைப்பாக கொண்டு பேசப்படுகின்றன. 50:50 இதை உண்மை என்றும் பொய் என்றும் கூறி தான் வருகிறார்கள். மரணம் என்பது யாரும் விரும்பாத ஒன்று. ஆனால், பிறக்கும் போதே மரணம் நிச்சயம் என்பது எழுதப்படாத நியதி. ஆனால், அந்த மரணம் எப்போது வரும் யாராலும் கணிக்க முடியாது. அப்படிப்பட்ட மரணம் நிகழ போகிறது என சிவ புராணத்தில் கூறப்பட்டிருக்கும் 11 அறிகுறிகள் பற்றி பார்க்கலாம். வாய், காது மற்றும் கண்…

Read More

ஆணுறைக்குள் தங்கக் கட்டி – இளைஞனின் தந்திரம்

மலேசியாவில் இருந்து ஆணுறைக்குள் வைத்து 7 தங்க கட்டிகளை விழுங்கி வந்த நபரின் வயிற்றுக்குள் இருந்து 3 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மலேசியா கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வருகை தந்த முகமது சலீம் என்ற நபர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தனது வயிற்றுக்குள் 7 தங்க கட்டிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். 205 கிராம் எடையுள்ள மொத்தம் 7 தங்க கட்டிகளை ஆணுறைக்குள் போட்டு வாழைப்பழத்தில் வைத்து விழுங்கி கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.விழுங்கிய கட்டிகளை வெளியில் எடுப்பதற்காக அதிகாரிகள் அவரை திருச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்துள்ளது. சுமார், 3 நாட்களின் பின்னர் அவரது வயிற்றில் இருந்து தங்க கட்டிகள் எடுக்கப்பட்டதாகவும். அதன் மதிப்பு…

Read More

நாயை கூட விட்டுவைக்காத பாலியல் வெறிகொண்ட காதல் ஜோடி

வீட்டில் வளர்க்கும் நாயுடன் பாலுறுவு கொண்ட ஜோடியினர் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் நியூயோர் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது, அதனை படம்பிடிக்க மற்றுமொரு பெண்ணை பயன்படுத்தியுள்ளனர். அது தொடர்பான காணொளி இணையத்தில் பதிவேற்றப்பட்டதையடுத்து, இது குறித்த விசாரணைகளை அமெரிக்க காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். அதனையடுத்து நாயுடன் பாலுறவு கொண்ட யுவதி, காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, இந்த சம்பத்துடன் அவரது காதலனுக்கு தொடர்பு உள்ளமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, காதலனும் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நாயுடன் உள்ள காணொளியில் சிறுமி ஒருவரும் உள்ளார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த சிறுமி குறித்த நபரின் சிறிய மகள் என தெரியவந்துள்ளது. 38 வயதுடைய காதலன் மற்றும் 18 வயது யுவதி ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர்…

Read More

பரீட்சையில் அதிக மார்க் எடுத்த மாணவி – பொறாமையில் விஷம் கொடுத்த நண்பி

பரீட்சையில் தன்னை விட நண்பி அதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் தண்ணீர் பாட்டிலில் கொசு மருந்து கலந்து கொடுத்துள்ளார் சக மாணவி. இந்நிலையில் பொலிஸார் விசாரணைக்கு பயந்து, மருந்து கலந்த மாணவியும் தனது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்தியா – மத்திய பிரதேசத்தில் உள்ள சத்னா நகரில் தனியார் பாடசாலையில் ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி தன்னை விட நண்பி அதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் நண்பியின் தண்ணீர் பாட்டிலில் கொசு விரட்டும் திரவ மருந்தினை கலந்து கொடுத்துள்ளார். இதனை அறியாத நண்பி அந்த தண்ணீரை குடித்துள்ளார். அதன்பின் அவருக்கு வாந்தி வந்துள்ளது. உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது அவரது நிலைமை சீராக உள்ளது. இதுபற்றி பாடசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து நடந்த விசாரணையில்,…

Read More

இலங்கையில் ஞானசாரதேரருக்கு என தனியாக சட்டம்

ஞானசார தேரருக்கு இந்த நாட்டில் விஷேட சட்டம் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில், ஞானசார தேரர் நீதிமன்ற அனுமதியின்றி ஜப்பான் சென்றுள்ளமை தொடர்பில் பிரமுகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் போது, “கூட்டு எதிரணியினர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் ஆயிரம் முறை நீதிமன்றத்திற்கு ஏறி இறங்க வேண்டும், ஆனால் ஞானசார தேரருக்கு இந்த நாட்டில் விஷேட சட்டம் உள்ளது. இந்த அரசாங்கத்தில் ஞானசார தேரருக்கு இராஜதந்திர அந்தஸ்து பெற்றுக் கொடுத்துள்ளதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் அங்கு விசனம் வெளியிட்டுள்ளார்.

Read More

முதன்முறையாக யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நிகழ்ந்த பாலைவன சம்பவம்

இயற்கைக்கு மாற்றீடாக யாழ்ப்பாணத்தில் பேரீச்சை மரம் வெற்றிகரமாக வளர்ந்து பயன்கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது. பாலைவனப் பகுதியில் விளையக் கூடிய பேரீச்சை மரம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் விளைந்துள்ளது. 30 வருடங்களாக சாவகச்சேரியில் பேரீச்சை மரம் பாராமரித்து வந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களாக அதன் பலாபலன்களை தொடர்ச்சியாக பெறுகின்றனர். அத்துடன் இந்த மரங்கள் பூத்து காய்த்து நல்ல பழங்கள் கிடைப்பதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை மரம் யாழ் மண்ணில் விளைந்தமை அபூர்வமான விடயமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மிகவும் குளிரான பகுதியான நுவரெலியாவிலும் பேரீச்சை மரம் வளர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மைத்திரி அரசுக்கு நெருக்கடி ஒன்றை கொடுத்துள்ள வடக்கு முதல்வர்

அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலத்திற்கு வடமாகாண சபை ஆதரவளிக்காது என முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாண சபை வளாகத்தில் வைத்து இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரசியலமைப்பு திருத்தமானது நாடாளுமன்றத்துடன் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டது என முதல்வர் விளக்கினார். இந்நிலையில், அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாட வேண்டும். அதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் ஊவா மாகாணத்தில் இன்றைய தினம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மைத்திரி, ரணில் தலைமையிலான மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இன்று மாலை யாழ்ப்பாணத்தில் அடை மழை பொழியும்

கிழக்கு, ஊவா, வட மத்திய மாகாணம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று மாலை வேலைகளில் குறித்த பகுதிகளில் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் வலுவான காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு, பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு, சப்ரகமுவ, வட மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் மேற்கு கரையோரப் பகுதிகள் சுமார் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்படுகின்றது. மின்னல் காரணமாக ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு…

Read More

இளஞ்செழியனை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு – பிரதான சந்தேகநபரின் மன பிரச்சினை

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று யாழ். நீதவான் நீதிமன்றில் மேலதிக நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த சந்தேகநபர் தமது நிலைப்பாட்டை மன்றில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், “என்னை தனி அறையில் அடைத்து வைத்திருப்பதால் மனுஅழுத்தம் ஏற்பட்டுள்ளது. தயவு செய்து என்னை வேறு அறைக்கு மாற்றுங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான ஜெயந்தன் என்பவரே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். எனினும் குறித்த கோரிக்கையை நிராகரித்த யாழ். நீதவான் நீதிமன்று இவருடைய விளக்கமறியலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரை நீடித்து…

Read More

இலங்கையில் மாணவனுக்கு ஆபாச படங்களை காட்டி பாலியல் நடவடிக்கைக்கு தூண்டிய ரியூசன் ஆசிரியர்

சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட பகுதி நேர வகுப்பை நடத்தும் ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தேசிய பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 15 வயதான மாணவனுக்கு ஆபாசப் படங்களை காண்பித்து பாலியல் நடவடிக்கைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த ஆசிரியர் தொடர்ந்தும் மேற்கொண்டு வந்த தொந்தரவு தொடர்பில் மாணவன் அவரது குடும்பத்தின் உளவியல் ஆலோசகர் ஒருவரிடம் கூறியுள்ளார். அவரது வழிக்கட்டலில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்ததாக சிறுவர் பாதுகாப்பு தேசிய அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆசிரியரை விசாரணைகள் முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More