உரும்பிராய் வாள்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

நேற்றைய தினம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே அழுத்தவும் தாக்குதலுக்குள்ளான நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உரும்பிராய் சந்தியிலுள்ள முடி வெட்டும் நிலையத்தில் பணியாற்றும் 24 வயதுடைய சுரேஸ்வரன் கனிஸ்டன் என்ற இளைஞரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த இந்த இளைஞனின் முதுகு பக்கத்தில் 10 தையல் போடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த தாக்குதல் மேற்கொண்டது யார் என இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. இது குறித்து யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பிரதேசவாசிகள், இரு இளைஞர்கள் தலைமுடி வெட்ட குறித்த சலூன் கடைக்கு வந்ததாகவும், அங்கு தொழில் புரிந்த கனிஸ்டன் உடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு முறுகிச்…

Read More

இலங்கையில் சிம் அட்டை பெறுவதற்கு புதிய கட்டாய கட்டுப்பாடு

கையடக்க தொலைபேசி சிம் அட்டைகளை விநியோகிக்கும் போது புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. சிம் அட்டைகளை பெற்றுக் கொள்ளும் போது அதன் உரிமையாளரின் சரியான தகவல்கள் வழங்கப்படாத அதிகளவான இலக்கங்கள் காணப்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. சிம் அட்டைகளில் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் சமாதானத்தை பாதுகாப்பதற்காகவும், அடையாளத்தை உறுதி செய்யக் கூடிய தகவல்களுடன் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றங்கள் மற்றும் மோசடி செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய உரிய முறையில் முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பம் மற்றும் சிம் அட்டையை பயன்படுத்தும் நபரின் தேசிய அடையாள அட்டையின் பிரதி உட்பட அவசியமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றுமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த யோசனை…

Read More

இன்றுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் மூடப்படுகிறது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவரொருவர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் 9 மாணவர்கள் டெங்கு நோயினால் பீடிக்கப் பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக விஞ்ஞான பீடத்தை எதிர்வரும் மாதம் செப்டம்பர் மாதம் 04ம் திகதி வரை மூட யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பிரிவின் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் வவுனியா – மதவயின்குளம் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய விஜயரட்ணம் வின்துஷன் என்ற மாணவரே இவ்வாறு மரணமாகியுள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கொன்டாவில் தங்குமிட விடுதியில் மூன்று நாட்களாக டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிந்த நிலையில் கடந்த 20 ம் திகதி யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் விஞ்ஞானப்பீடத்தை சேர்ந்த 09 மாணவர்கள் டெங்கு தொற்று காரணமாக…

Read More

இலங்கையில் வரும் முதலாம் திகதி முதல் NIC புகைப்படத்தில் மாற்றம்

எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் விண்ணப்பிக்கப்படும் தேசிய அடையாள அட்டைகளுக்கு சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் தரத்துக்குட்பட்ட புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் பீ. வியானி குணதிலக தெரிவித்துள்ளார். ஆட்பதிவு திணைக்களத்தினால் பதிவுசெய்யப்பட்ட புகைப்பட பிடிப்பு நிலையங்களில் மட்டுமே இந்த புகைப்படங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அந்த புகைப்படம் 35 மில்லிமீற்றர் நீளமும், 45 மில்லிமீற்றர் அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். ஆட்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கான சர்வதேச ரீதியான தரநியமங்களை சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பே மேற்கொள்ளும். இந்த நிலையில், இதற்கமைய புகைப்படங்களை எடுப்பதற்காக நாடாளாவிய ரீதியில் சுமார் ஆயிரத்து 700 புகைப்பட நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, செப்டம்பர் முதலாம் திகதியின் பின்னர் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிப்பவர்கள், இந்த அறிவித்தலுக்கு…

Read More

வித்தியா படுகொலை – அமைச்சர் விஜயகலா மீது சுமத்தப்பட்ட குற்றத்தின் உண்மைத்தன்மை பகீரங்கமானது

யாழ். புங்குடுதீவை சேர்ந்த மாணவியான கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான, சுவிஸ்குமார் என, அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை தப்பிக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேக நபரான சுவிஸ் குமாரை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்திருந்தபோது, அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்ததாக, குற்றம் சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பிலும் மன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, நீதிமன்ற உத்தரவுக்கமைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தை குற்றப் புலனாய்வு பிரிவினர் மன்றில் சமர்ப்பித்தனர். சுவிஸ் குமாரை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்திருந்தபோது, சந்தேக நபரை கைது செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், காவல்துறையினரிடம் தெரிவித்ததாக, குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மன்றில்…

Read More

ரணிலின் கோரிக்கையை அடுத்து அமைச்சர் விடயத்தில் மைத்திரியின் அதிரடி முடிவு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி அளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் விஜயதாசவுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். நீதியமைச்சர் பதவியில் இருந்து விஜயதாச ராஜபக்ஷவை நீக்குமாறு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில்விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் நேற்று கோரி இருந்தார். அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி செயற்பட்டதாக விஜயதாச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், அவர் அமைச்சரவைப் பொறுப்புக்களை வகிக்க தகுதியற்றவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி அவர் வகிக்கும் அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் அவரை நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரி இருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி தனது தீர்மானத்தை இன்று அறிவித்துள்ளார்.

Read More

களுவாஞ்சிகுடியில் கோர விபத்தில் 22 வயது இளைஞன் பரிதாப பலி – படங்கள் இணைப்பு

மட்டக்களப்பு – களுதாவளை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்றைய தினம் (23) காலை இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த இளைஞர், முன்னே சென்ற பிக்கப் ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் எதிர்கொண்டு வந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்தவர் களுதாவளையைச் சேர்ந்த 22 வயதுடைய ம.இதயராஜ் என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கள்ளக்காதல் வயப்பட்ட 25 வயது இந்து வின் காம வெறிச்செயல் இது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலன் உதவியுடன் கொலை செய்து புதைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் நீலகரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் (30) இவர் மனைவி இந்து (25) இவர்களுக்கு ஜியோன் என்ற 2½ வயது மகன் உள்ளான். ஜஸ்டின் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்த ஜஸ்டின் மனைவியை அழைத்து ஓசூருக்கு வந்து வாடகை வீடு எடுத்து தங்கினார். இதனிடையே கடந்த 20-ஆம் திகதி ஜஸ்டின் மாயமானார். மேலும் அவரது வீடு முழுவதும் ரத்தக்கறைகள் படிந்திருந்தன. இது குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிசில் புகார் அளித்தனர். பொலிசார் இந்துவிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரே நேற்று பொலிசில் சரணடைந்தார். தனது கணவரை கள்ளக்காதலன் லிண்டோ (30) உதவியுடன் கொலை…

Read More

கல்கிசையில் மசாச் செய்த இரு பெண்கள் கைது

கல்கிசை பிரதேசத்தில் நடத்தி செல்லப்பட்ட உல்லாச விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் உல்லாச விடுதி நடத்திச் செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபரான ஆண் குறித்த உல்லாச நடவடிக்கைகளுக்கு முகாமைத்துவம் மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். 38 வயதான பொரளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காலி வீதிக்கு அருகில் அமைந்துள்ள கட்டடத்தில் இவர்கள் ஆயுர்வேத மசாஜ் நிலையமாக இதனை நடத்தி சென்றுள்ளனர். விபச்சார தொழில் ஈடுப்பட்டமை தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கல்கிசை மற்றும் பெத்தர பிரதேசத்தை சேர்ந்த 27 மற்றும் 34 வயதுடைய பெண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இரண்டு பெண்களும் இன்று…

Read More