யாழ்ப்பாணம் உரும்பிராயில் இளைஞன் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு! அதிரடி படை குவிப்பு – பரபரப்பு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இச் சம்பவத்தால் விசேட அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, உரும்பிராய் சந்திப்பகுதியில் இருக்கும் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் இளைஞன் ஒருவ்ர் பணியாற்றிவந்த நிலையில் அங்கு திடீரென வந்த வாள்வெட்டு ரவுடிகள் அவ் இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு மேற்கொண்டனர். அதை அடுத்து பதைபதைபதைத்து ஓடிய அவ் இளைஞனை துரத்தி துரத்தி தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டனர்.

அவ் இளைஞன் வேலைபார்த்துவந்த சலூன் கடைக்கு பின்னால் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய கட்டட தொகுதிக்குள் ஓடிய அவ் இளைஞனை, விடாது துரத்தி சென்ற அவ் வாள்வெட்டு கும்பல், அங்கும் தாக்குதலை மேற்கொண்டது. இதனால் அக் கடைத் தொகுதிக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவத்தை அடுத்து அங்கு விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தை அடுத்து உரும்பிராய் சந்திப் பகுதியில் கடைகள் பலவும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Comments

comments

Related posts