மிதுனம் – ஆவணி மாத ராசி பலன்கள் (17-8-2017 முதல் 16-9-2017 வரை)

கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், தன ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் சில நாட்களுக்கு முன்பு பெயர்ச்சியான ராகு-கேதுக்களின் அமைப்பின் படி பார்க்கும் பொழுது, கேது பகவான் 8-ல் இருப்பதால் தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு கடன் வாங்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு உருவாகலாம்.

அஷ்டமத்து ராகுவால் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும், ஆதாயம் குறையாது. எந்தக் காரியமாக இருந்தாலும், ஒருமுறைக்கு இருமுறை முயற்சி செய்து தான் முடிவடையும். மாதத் தொடக்கத்தில் அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கம் இருக்கிறது. 4-ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்திலும், விரய ஸ்தானத்திலும், தொழில் ஸ்தானத்திலும் பதிவதால் சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்பு உருவாகும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட தூரங்களுக்கு மாறுதல் வந்து சேரும். அது தவிர்க்க முடியாததாகவும் அமையும். வீடு, தோட்டம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் சந்தர்ப்பங்கள் கைகூடி வரலாம்.

சூரியன் சகாய ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிப்பதால், சகோதரர்களிடையே இருந்த பங்கு தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாகும். பங்கு வீட்டை ஒன்று சேர்ந்து பழுது பார்ப்பீர்கள்.

இம்மாதம் நிகழவுள்ள குருப்பெயர்ச்சிக்கு பிறகு, குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதியப் போகிறது. எனவே தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறும். தனவரவு திருப்தி தரும். மிகுந்த யோகங்கள் வந்து சேரப்போகிறது.

விநாயகர் சதுர்த்தியன்று கற்பக கணபதியை உள்ளன்போடு வழிபடுவதோடு, சர்ப்பதோஷம் விலக அனுகூல நாளில் அதற்குரிய ஸ்தலங்களில் பரிகாரங்கள் செய்து நற்பலன்களைப் பெறலாம்.

கடக சுக்ரன்-சிம்ம சுக்ரன்

ஆகஸ்டு 22-ல் கடகத்திலும், செப்டம்பர் 15-ல் சிம்மத்திலும் சுக்ரன் சஞ்சரிக்கப்போகிறார். இதன் விளைவாக பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய பாதை புலப்படும். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கலாம். அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு கிட்டும். சகோதர ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிக்கும் போது, உடன்பிறப்புகள் வழியில் விரயம் உண்டு. அவர்கள் இல்லத்தில் நிகழும் சுபகாரியங் களுக்கு உதவி செய்யும் நிர்ப்பந்தம் உருவாகலாம்.

சிம்மச் செவ்வாய் சஞ்சாரம்!

6,11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், ஆகஸ்டு 28-ந் தேதி சகாய ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே உத்தியோக முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வேலை பார்க்க விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் அது கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். எதிரிகள் விலகுவர். உத்தியோகஸ்தர் களுக்கு எதிர்பார்த்தபடியே இலாகா மாற்றங்கள் வந்து சேரலாம்.

சிம்ம புதன் சஞ்சாரம்

ராசிநாதன் புதன், சிம்மத்தில் சஞ்சரிக்கும் பொழுது தடைகள் அகலும். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். துயரங்களைப் போக்கிக் கொள்ள துணிந்து முடிவெடுப்பீர்கள். அயராது பாடுபட்டமைக்கு உரிய பலன் அதிகமாகவே இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும்.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சி

செப்டம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பூரணமாக பதிவதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். செலவிற்கேற்ப தொகை வந்து கொண்டேயிருக்கும். கல்யாண வாய்ப்புகள் கை கூடலாம். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். பணவரவு திருப்தி தரும். பணியாளர் தொல்லை அகலும். நல்ல வாய்ப்புகள் பலவும் வந்து சேரும் நேரமிது.

பெண்களுக்கான பலன்கள்!

மாதத்தின் முற்பாதியை விட பிற்பாதியில் மகிழ்ச்சி கூடுதலாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். கட்டிடம் கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். தாய் வழியிலும் எதிர்பார்த்த நன்மைகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு கேட்ட இடத்தில் மாறுதல் கிடைக்கும். சம்பள உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. விருப்ப ஓய்வில் வெளிவருவது பற்றி சிந்திப்பீர்கள். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ஆதியந்த பிரபு வழிபாடு அனைத்து நலன்களையும் வழங் கும். நாகசாந்திப் பரிகாரங்களைச் செய்தால் நன்மைகள் அடுக்கடுக்காக வந்து சேரும்.

Comments

comments

Related posts