யாழ்ப்பாணம் உரும்பிராயில் இளைஞன் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு! அதிரடி படை குவிப்பு – பரபரப்பு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இச் சம்பவத்தால் விசேட அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, உரும்பிராய் சந்திப்பகுதியில் இருக்கும் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் இளைஞன் ஒருவ்ர் பணியாற்றிவந்த நிலையில் அங்கு திடீரென வந்த வாள்வெட்டு ரவுடிகள் அவ் இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு மேற்கொண்டனர். அதை அடுத்து பதைபதைபதைத்து ஓடிய அவ் இளைஞனை துரத்தி துரத்தி தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டனர். அவ் இளைஞன் வேலைபார்த்துவந்த சலூன் கடைக்கு பின்னால் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய கட்டட தொகுதிக்குள் ஓடிய அவ் இளைஞனை, விடாது துரத்தி சென்ற அவ் வாள்வெட்டு கும்பல், அங்கும் தாக்குதலை மேற்கொண்டது. இதனால் அக் கடைத் தொகுதிக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்தை அடுத்து அங்கு விசேட அதிரடிப் படையினர்…

Read More

முஸ்லீம் பாடசாலைகளில் கற்பிக்க முடியாது – சிங்கள ஆசிரியர்கள் கலகம்

அரச முஸ்லிம் பாடசாலையின் விடுமுறையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தினால், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் பாடசாலைகளில் சேவையில் ஈடுபட்டுள்ள சிங்கள ஆசிரியர்கள் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த 18 ஆம் திகதி விடுமுறை வழங்குவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கல்வி அமைச்சு திடீரென 17 ஆம் திகதி விசேட சுற்று நிருபம் ஒன்றின் மூலம் அந்த விடுமுறை தினத்தில் மாற்றமொன்றை மேற்கொண்டுள்ளதாக அறிவித்திருந்தது. முஸ்லிம் சமய அமைப்பொன்றின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம் பாடசாலைகளில் சேவை புரியும் சிங்கள ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஏற்கனவே திட்டமிட்ட பிரகாரம் விடுமுறையில் மாற்றங்களைச் செய்வதானால், தங்களை அரச சிங்களப் பாடசாலைகளுக்கே இடமாற்றம் செய்யுமாறும் அவ்வாசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோளுடன் சிங்கள ஆசிரியர்களின் கையொப்பத்துடனான மகஜரொன்று கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கும் தங்களது…

Read More

யாழ்ப்பாணத்தில் தண்டவாளத்தில் அரை நிர்வாணமாக இருந்த பிக்கு

மொனராகலையில் உள்ள பிக்கு ஒருவர் மனநிலை குழம்பிய நிலையில் யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் அரை நிர்வாண நிலையில் இருந்து மீண்டு பின்னர் யாழ் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். குறித்த 17 வயதுடைய பிக்கு மொனராகலையில் உள்ள ஒரு பௌத்த பீடத்தில் கற்று வருவதாகவும் நேற்று முன்தினம் தான் திடீரென நினைவிழந்து காணப்பட்டதாகவும். பின்னர் நேற்றைய தினம் காலை யாழ் ரயில் நிலையத்துக்கு இருகில் இருந்த தண்டவாளத்தில் ஆடைகள் அற்ற நிலையில் இருந்தததை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் தான் அருகில் உள்ள வீட்டுக்கு சென்று ஆடை ஒன்றை பெற்று அணிந்து கெண்டதாகவும் அங்கிருந்து யாழ் பொலிஸ் நிலையத்தில் தன்னை கொண்டு சென் சேர்த்து விடுமாறு கோரிய போது அவரை யாழ் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து சிலர் விட்டு விட்டு சென்றுள்ளனர் என்றும் தான்…

Read More

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டு வழக்கின் தற்போதைய நிலை

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சரணடைந்த செல்வராசா ஜெயந்தன் கடந்த 8 ஆம் திகதி யாழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார். கடந்த மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் 39 வயதான செல்வராசா ஜெயந்தன் என்ற சந்தேகநபர் சரணடைந்திருந்தார். குறித்த சந்தேகநபர் புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியிருந்தனர். கடந்த மாதம் 22 ஆம் திகதி நல்லூர் ஆலய பின்வீதியில் நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் சாஜனான சரத் ஹேமச்சந்திர என்ற மெய்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்…

Read More

பெண்ணாக மாறிய சுகன்யாவுக்கும், ஆணாக மாறிய திருநம்பிக்கும் திருமணம்

கேரளாவைச் சேர்ந்தவர் திருநம்பி ஆரவ் அப்புகுட்டன். 46 வயதான ஆரவ் அப்புகுட்டனின் இயற்பெயர், பிந்து. சிறுவயதில் இவருடைய உடம்பில் ஆணுக்கான அறிகுறிகள் தோன்றியதையடுத்து ஆணாக மாறிவிட்டார். அதேபோன்று பெங்களூரைச் சேர்ந்த 22 வயது திருநங்கை சுகென்யா கிருஷ்ணனும் சந்துவாக இருந்து, சுகென்யா கிருஷ்ணனாக மாறியவர். சுகென்யாவின் வீட்டில் இவரை ஒதுக்கிவைத்துவிட, இவரை ஒரு வளர்ப்புத் தந்தை வளர்த்து ஆளாக்கினார். இவர், தனது வளர்ப்புத் தந்தையின் உதவியுடன் சத்திர சிகிச்சைக்காக மும்பை சென்றுள்ளார். ஆனால் 18 வயதுக்குப் பின்னர் தான் சத்திர சிகிச்சை செய்துகொள்ள முடியும் என மருத்துவர் கூறியதால், பெங்களூருக்கு வந்து அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வந்துள்ளார். ஆரவ் அப்புகுட்டன் சத்திர சிகிச்சைக்காக மும்பை செல்ல, அங்குள்ள மருத்துவர் சுகென்யாவைப் பற்றிக் தெரிவித்துள்ளனர். உடனே ஆரவ், சுகென்யாவைப் பார்க்க பெங்களூரு சென்றுள்ளார். இருவருக்கிடையே நட்பு…

Read More

இன்று கதிர்காம ஆலயத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு யார் காரணம்?

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தில் இன்று குழப்பநிலையொன்று ஏற்பட்டுள்ளது குறித்த ஆலயத்தின் கதவுக்கான திறப்பு, பஸ்நாயக்க நிலமேயிடம் இருந்த நிலையில், அதனை அவர் உரிய நேரத்தில் ஆலயத்துக்கு கொண்டு வராத காரணத்தினால் ஆலயத்தின் அதிகாலைப் பூஜை இன்று காலை நடைபெறவில்லை என்று பூஜகர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தாம் திறப்பை கொண்டுச் சென்ற போதும், பூஜகர்கள் கதவைத் திறக்க விடாமல் தடுத்ததாக, பஸ்நாயக்க நிலமே குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் இரண்டு தரப்பிலும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கதிர்காமம் ஆலயத்தின் அதிகாலைப் பூஜை நடைபெறாத சம்பவங்கள் வரலாற்றில் மிகவும் அரிதாகவே பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகலைப் பூஜைக்காக கூடி இருந்த பக்தர்கள் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், இந்த சம்பவம் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமானது – படங்கள் இணைப்பு

மன்னதானக் கந்தன் என பார் போற்றும் தொண்டமண்ஆறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமானது. பெருமளவிலான பக்த அடியார்கள் இந் நிகழ்வில் கலந்து கந்தன் அருள் பெற்றார்கள்.

Read More

உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்க 10 வழிகள்

மனித வாழ்வில் உடல் உறவு என்பது அத்தியாவசியமான அதேசமயம் தவிர்க்க முடியாத ஒன்று. படுக்கையில், பெரும்பாலான ஆண்களுக்கு பொதுவான பிரச்சனையாக கருதப்படுவது , உடல் உறவின் போது விந்து விரைவில் வெளியாவதுதான். இதுபற்றிய போதுமான தெளிவு பெரும்பாலான ஆண்களுக்கு இல்லை. அதனால்தான், இரவு நேரங்களில், தனியார் தொலைக்காட்சிகளில் பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு செல்லும் மருத்துவர்களிடம் பலர் இந்த பிரச்சனையை முன் வைக்கிறார்கள். பொதுவாக எல்லா ஆண்களும், படுக்கையைறையில், அதிக நேரம் உடல் உறவில் ஈடுபடவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். ஆனால் பலருக்கு விந்து விரைவில் வெளியாகிவிடுவதால் முழுதிருப்தி கிடைக்காமல் போகிறது. ஆனால், விந்து வெளியாவதை சில எளிய பயிற்சிகள் மூலம் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். அவற்றை பற்றி இங்கு காண்போம். உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பின், அதாவது பெண் உறுப்பில் ஆண் உறுப்பு நுழைந்தவுடன் விந்து…

Read More

மீனம் – ஆவணி மாத ராசி பலன்கள் (17-8-2017 முதல் 16-9-2017 வரை)

நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் மீன ராசி அன்பர்களே! ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தின் தொடக்கத்தில் 5-ல் ராகுவும், 11-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். குருவின் நேர் பார்வை செப்டம்பர் 1-ந் தேதி வரை உங்கள் ராசியில் பதிவாகிறது. அதன்பிறகு அஷ்டமத்தில் குரு அடியெடுத்து வைக்கிறார். 8-ல் குரு வரும்பொழுது இடர்பாடுகள் அதிகரிக்கும். ஆரோக்கிய தொல்லை வரலாம். எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் உண்டாகும். உறவினர் பகை ஏற்படும். ஊர்மாற்றங்களும், இடமாற்றங்களும் திருப்தி தருமா? என்பது சந்தேகம் தான். மாதத்தின் பிற்பகுதியில் எதையும் யோசித்துச் செய்வதன் மூலமே யோகங்கள் ஏற்படும். பஞ்சம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால், பிள்ளைகள் மூலம் விரயங்கள் ஏற்படலாம். 5-ம் இடத்தில் செவ்வாய், புதன் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு 2,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பஞ்சம…

Read More

கும்பம் – ஆவணி மாத ராசி பலன்கள் (17-8-2017 முதல் 16-9-2017 வரை)

அனுபவம் தான் சிறந்த வழிகாட்டி என்று கூறும் கும்ப ராசி அன்பர்களே! ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி 10-ம் இடத்தில் பலம் பெற்று விளங்குகிறார். எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வழிகாட்டும் விதத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருக்கின்றன. மாதத் தொடக்கத்தில் சூரிய பலம் நன்றாக இருக்கிறது. சுக்ரனும் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராகு-கேதுக்களின் பெயர்ச்சியும், உங்களுக்கு மிகுந்த நன்மை தருவதாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் இதுவரை இருந்த கேது விலகியதால், மனக்குழப்பம் அகலும். விலகிச் சென்ற ராகு-கேதுக்களை நீங்கள் விரும்பிச் சென்று வழிபட வேண்டியது அவசியமாகும். முறையான சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வதோடு, அஷ்டமத்தில் குரு சஞ்சரிப்பதால் அதற்குரிய குரு பிரீதியும் செய்வது…

Read More