வார பலன் – (21 – 28 ஆகஸ்டு 2017) – ஜோதிடர் வித்தியாதரன்

அதிமேதாவியாக இருந்தாலும் அமைதியாக காய் நகர்த்துபவர்களே! உங்களின் தனாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு வாங்க லோன் கிடைக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நவீன ரக வாகனம், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட காலமாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். 4-ம் இடத்தில் ராகு, செவ்வாய் நிற்பதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு, நெஞ்சு எரிச்சல், சிறுசிறு நெருப்புகள் காயங்கள் வரக்கூடும். கடந்த கால கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதர வகையில் அலைச்சல் அதிகரிக்கும். அரசாங்க விஷயம் தள்ளிப் போய் முடிவடையும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அஷ்டமத்துச் சனியும், சகட குருவும் தொடர்வதால் நீங்கள் எதை செய்தாலும் தோல்வியில் முடிவதையும், எதை சொன்னாலும் தவறாக சிலர் புரிந்துக் கொள்வதையும் நினைத்து ஆதங்கப்படுவீர்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள். உத்யோகத்தில் உங்கள் திறமைக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். கலைத்துறையினரே! பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். வளைந்துக் கொடுத்து முன்னேற வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 24, 26, 27 அதிஷ்ட எண்கள்: 3, 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம் அதிஷ்ட திசை: கிழக்கு

பனி, மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்களே! ராகு, சூரியன் மற்றும் குரு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். துணிச்சல் வரும். வி. ஐ. பிகளின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். வழக்கு சாதகமாகும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பயணங்களால் பலனடைவீர்கள். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலர் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். என்றாலும் வீண் அலைச்சல், செலவுகள், டென்ஷன், அசதி, சோர்வு வந்துப் போகும். கண்டகச் சனி தொடர்ந்துக் கொண்டிருப்பதால் மனைவிக்கு இடுப்பு வலி, யூரினரி இன்பெக்ஷன், மாதவிடாய்க் கோளாறு வரக்கூடும். மற்றவர்களின் சொந்த விஷயங்களில் அநாவசியமாக மூக்கை நுழைக்காதீர்கள். கேதுவால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள், தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே! கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சமயோஜித புத்தியால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 21, 23, 27 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, ஆரஞ்சு அதிஷ்ட திசை: வடக்கு

உதவும் கரங்கள் உடையவர்களே! சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தொழிலதிபர்களின் தொடர்புக் கிடைக்கும். அரைக்குறையாக நின்ற வீடு பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவிக் கிட்டும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மகனுக்கு வேலைக் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மாற்றுமொழிப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். சூரியன் 3-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் வெற்றிப் பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ராகு, கேது மற்றும் குரு உங்களுக்கு சாதகமாக இல்லாததால் வீண் விரையம், ஏமாற்றம், கண் எரிச்சல், பேச்சால் பிரச்னைகள் வந்துப் போகும். கெட்ட நண்பர்களின் சகவாசங்களை அறவே ஒதுக்கித் தள்ளுங்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சிக்கலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருந்தாலும் சக ஊழியர்களால் இடையூறுகள் வந்துப் போகும். கலைத்துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். கடின உழைப்பால் கரையேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 21, 22, 23 அதிஷ்ட எண்கள்: 1, 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை அதிஷ்ட திசை: தென் மேற்கு

உள்ளத்தில் அழுதாலும், உதட்டால் சிரிப்பவர்களே! சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் போராட்டங்களை சளைக்காமல் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். ஒரு பிரச்னை முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சுவிடும் நேரத்தில் புதிதாக வேறு ஒரு சிக்கல் தலைத்தூக்கும். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சுபச் செலவுகளும் அதிகமாகும். உறவினர்களால் அன்புத்தொல்லைகள் உண்டு. நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்களின் யோகாதிபதியான செவ்வாய் ராசிக்குள் அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் வசதி, வாய்ப்புகள் உயரும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்றுவீர்கள். கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சிலருக்கு புது வேலை அமையும். ராகு, கேது, சனி மற்றும் குரு உங்களுக்கு எதிராக இருப்பதால் முன்கோபத்தால் பகை உண்டாகும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே காய்கறி, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். முடிவுகளெடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புத் திறன் அதிகரிக்கும். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 23, 24, 27 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, வைலெட் அதிஷ்ட திசை: தென்கிழக்கு

தன்னை எதிர்ப்பவர்களுக்கும் நல்லதே செய்பவர்களே! ராசிநாதன் சூரியன் உங்களது ராசியிலேயே ஆட்சிப் பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் அறிமுகம் கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். ஷேர் லாபம் தரும். செவ்வாய் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். மற்றவர்களுக்காக சாட்சி கையப்பமிடாதீர்கள். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் பழுது வந்து நீங்கும். தாயாருடன் மோதல்கள் வரக்கூடும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவுகளெல்லாம் நனவாகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு பரிசு, பாராட்டுக் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றிப் பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26, 27 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன் அதிஷ்ட திசை: வடமேற்கு

விழுவதெல்லாம் எழுவதற்கே என நினைப்பவர்களே! ராகுவும், சனியும் சாதகமாக இருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். வேற்றுமதம், மொழியினரால் உதவிகள் உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பயணங்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சகோதரங்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். பழுதான டி. வி. , ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். சங்கம், இயக்கத்தில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். சூரியன் 12-ம் இடத்தில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட சுகமான அனுபவம், சாதனைகளை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசால் ஆதாயமடைவீர்கள். ஜென்ம குரு தொடர்வதால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அடுத்தவர்களைக் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய பலவீனங்களையெல்லாம் சரி செய்யப் பாருங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். புது வாடிக்கையாளர்களும் வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும். யதார்த்தமான பேச்சால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 21, 24, 27 அதிஷ்ட எண்கள்: 3, 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை அதிஷ்ட திசை: தெற்கு

கலங்கி வருபவர்களின் கண்ணீரை துடைப்பவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. வி. ஐ. பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வீடு, வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் பழைய காலி மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வாகனப் பழுதை சரி செய்வீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ராஜ கிரகங்களான குரு, சனி மற்றும் சர்ப்ப கிரகங்களான ராகு, கேது ஆகிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். சின்ன சின்ன உடற்பயிற்சி மேற்கொள்ளப்பாருங்கள். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களால் உங்கள் பிரச்னைகள் பாதியாகக் குறையும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரி உங்களைப் புரிந்துக் கொள்ளமாட்டார். கலைத்துறையினரே! பழைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 21, 23, 26 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன் அதிஷ்ட திசை: கிழக்கு

இதயத்திலிருந்து பேசுபவர்களே! குருவும், சூரியனும் சாதகமாக இருப்பதால் நினைத்தது நிறைவேறும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள் அடங்கும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வழக்குகள் சாதகமாகும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். சொத்துப் பிரச்னை சுமூகமாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஜென்மச் சனி தொடர்வதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். முன்கோபத்தை குறையுங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் கமிஷன், உணவு வகைகளால் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சவால்களில் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 23, 24, 26 அதிஷ்ட எண்கள்: 4, 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை அதிஷ்ட திசை: தென்மேற்கு

எதிலும் நடுநிலைத் தவறாதவர்களே! உங்களின் பாக்யாதிபதியான சூரியன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் பாதியில் நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். அவரின் ஆதரவுப் பெருகும். போட்டி, நேர்முகத் தேர்வுகளில் வெற்றி உண்டு. சி. எம். டி. ஏ. , எம். எம். டி. ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வழக்கில் திருப்பம் ஏற்படும். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். புது பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். ராஜ கிரகங்களான குரு, சனி மற்றும் நிழல் கிரகங்களான ராகு, கேது உங்களுக்கு எதிராக இருப்பதால் பணவிஷயத்தில் குறுக்கே நிற்காதீர்கள். தூக்கம் குறையும். எதிர்பாராத திடீர் செலவுகளைக் கண்டு அஞ்சுவீர்கள். சுற்றியிருக்கும் எல்லோரும் உங்களை ஏமாற்றுவதாக நினைப்பீர்கள். சில நேரங்களில் வெறுமையை உணர்வீர்கள். சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே! உத்யோகம் அமையும். காதல் விவகாரத்தில் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் கூடுதல் நேரம் உழைக்க வேண்டி வரும். கலைத்துறையினரே! வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தடைகளையும் தாண்டி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26, 27 அதிஷ்ட எண்கள்: 5, 6 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, கிரே அதிஷ்ட திசை: வடகிழக்கு

ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளதை உள்ளபடி பேசுபவர்களே! குரு சாதகமாக இருப்பதால் பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரபலங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சூரியன் 8-ம் இடத்தில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் திடீர் பயணங்கள் உண்டு. தள்ளிப் போன அரசாங்க விஷயம் முடியும். வழக்கில் திருப்பம் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். சுக்ரன் உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். சொந்த-பந்தங்களின் அன்புத் தொல்லை குறையும். ராகு, கேது சாதகமாக இல்லாததால் மனக்குழப்பம், வீண் விரையம், ஒருவித வெறுப்புணர்வு, படபடப்பு, நெஞ்சு வலி, தலைச்சுற்றல், சுளுக்கு, யூரினரி இன்பெக்ஷனெல்லாம் வந்துப் போகும். மனைவிக்கு கர்பப்பையில் கட்டி, முதுகுத் தண்டில் வலி, இரத்த அழுத்தம் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். கலைத்துறையினரே! விமர்சனங்களிலிருந்து விடுபடுவீர்கள். வளைந்து நிமிரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 22, 26, 27 அதிஷ்ட எண்கள்: 2, 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ் அதிஷ்ட திசை: மேற்கு

தன்னலம் கருதாமல் பிறர் நலம் பேணுபவர்களே! ராகு உங்களுடைய ராசிக்கு சாதகமாக இருப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாயும் சாதகமாக இருப்பதால் சகோதரங்களால் பயனடைவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சூரியன் ஆட்சிப் பெற்று 7-ல் அமர்ந்திருப்பதால் அரசு காரியங்களில் இருந்த இழுபறி நிலை மாறும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். என்றாலும் சுக்ரன் 6-ல் மறைவதால் சின்ன சின்ன விவாதங்கள் வரக்கூடும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறவீர்கள். புதனும் 6-ல் மறைந்துக் கிடப்பதால் உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போவது நல்லது. கன்னிப் பெண்களே! உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். எதிர்நீச்சல் போட வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 21, 23, 24 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே அதிஷ்ட திசை: வடக்கு

அருகிலிருப்பவர்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவர்களே! ராசிநாதன் குருபகவான் சாதகமாக இருப்பதால் சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சி பலிதமாகும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். மழலை பாக்யம் கிடைக்கும். உங்களது ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். சூரியன் ஆட்சிப் பெற்று 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டு. உடன்பிறந்தவர்கள் மதிப்பார்கள். ராகு 5-ல் அமர்ந்திருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட கால ஆசைகளெல்லாம் நிறைவேறும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுடைய முன்னுரிமைத் தருவார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பாராட்டி பேசப்படும். வசதி, வாய்ப்புகள் பெருகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 22, 23, 25 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம் அதிஷ்ட திசை: தென்கிழக்கு

Comments

comments

Related posts