கல்யாணமே கட்டிக்காது தாம்பத்தியம்? ஓர் விசித்திர கிராமம்!

கல்யாணம் செய்துக் கொள்ளாமல் வாழும் உறவை லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பார்கள். இது மேற்கத்திய நாடுகளில் இருந்து உலகம் முழுதும் பரவியதாக தான் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், இந்தியாவில் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்த முறையை கடைப்பிடித்து திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வரும் ஒரு கிராமம் இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா? இருக்கிறது! ராஜஸ்தானில் இருக்கும் கரசியா எனும் பழங்குடி மக்கள் ஆயிரம் ஆண்டுகளாக இப்படி தான் வாழ்ந்து வருகிறார்கள். இதை தங்கள் மூதாதையர்களிடம் இருந்து கற்று, பின்பற்றி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். லிவ்-இன் என்றால், இது மேற்கத்தியத்திற்கே சவால் விடும் அளவு இருக்கிறது. 70 வயது மூதாட்டி, தனது மகன் முன்னாள் தனது லிவ்-இன் பார்ட்னரை திருமணம் செய்துக் கொள்கிறார். இது பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. கடந்த ஆயிரம் வருடங்களாக கரசியா பண்பாட்டில் அவர்கள்…

Read More

வழுக்கைத் தலையின் ஆரம்ப நிலையா? அப்போ இத ட்ரை பண்ணுங்க

இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியிருக்கும் மாதுளம்பழத்தை நம் அழகுக்காக எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். மாதுளம் எண்ணெய் : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி மாதுளம்பழத்தை போடுங்கள் சிறிது நேரத்தில் பூச்சி அரித்த, சொத்தையான மற்றும் அழுகிய மாதுளம் வித்துக்கள் இருந்தால் அது மேலே வந்து நிற்கும். அதனை தண்ணீரோ அப்படியே கீழே கொட்டிவிடுங்கள். இப்போது பாத்திரத்தின் அடிப்பகுதியில் நல்ல மாதுளம் முத்துக்களை ஒரு காட்டன் துணியில் பரப்பி, காற்றில் உலர்த்தவும். இதனை ஒரு கனமான கண்ணாடி பாட்டிலில் சேமித்துக்கொள்ளவும். 50 மில்லி பாதாம் எண்ணெயைக் காய்ச்சி, பாட்டிலில் உள்ள மாதுளம் முத்துக்களின் மீது சூடாக ஊற்றவும். எண்ணெய் ஆறியவுடன் பாட்டிலை நன்கு மூடி, வெயில்படாத அறையில் வைக்கவும். 10, 15 நாட்களுக்குப் பிறகு பாட்டிலில்…

Read More

சமைக்க மறுத்த அப்பாவி காதலனை குத்திக் கொலை செய்த அன்புக் காதலி

காதலர்களுக்கு இடையே யார் சமைப்பது என்ற சண்டையில, பெண் தனது காதலரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவை சேர்ந்த எல்வி உஜூம்மா என்பவர் டெல்லியில் தனது காதலர் ஈசுவுடன் வசித்து வந்தார். ஈசு மதியம் வீடிற்கு வந்தவுடன் யார் சமைப்பது என்று இருவருடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி இருவரிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஈசு முதலில் எல்வியை தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த எல்வி கத்தியால் தனது காதலரை குத்தியுள்ளார். ஈசு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் எல்வியை கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

எச்சரிக்கை! – இலங்கையில் திடீரென பழுதடையும் மின்சார உபகரணங்கள்

கொட்டகலை பாத்தியாபுர கிராமப் பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரத்தில் அதிக மின் வலுகொண்ட மின்சாரம் பாய்ந்ததால் அக் கிராமத்திலுள்ள 25 வீடுகளில் மின்சார உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தீடீரென ஏற்பட்ட மின்வலு அதிகரிப்பினால் இந்த மின்சார உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் ஒவ்வொரு வீடுகளிலும் பெறுமதியான மின்சார உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. குறிப்பாக தொலைக்காட்சிப் பெட்டி, கணனி, குளிர்சாதனப் பெட்டி, வானொலிப் பெட்டி ஆகியன செயலிழந்துள்ளன. இதற்கென பாரிய தொகையினை செலவு செய்து திருத்தி கொள்ள வேண்டும் எனவும், இதனால் தாம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

18 வயது திருகோணமலை இளைஞன் தற்கொலை செய்துகொண்டது ஏன்

திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனையாவெளிப்பிரதேசம் யாட் அடைவீதியில் இன்று முற்பகல் இளைஞரொருவர் தற்கொலை செய்து கொண்டள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவிலேயே இவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 18 வயதுடைய ரேமன சரோன் குயின்டன் என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் மகன் வேலைக்கு செல்லாததால் தான் கண்டித்ததாகவும் கோயிலுக்கு சென்று திரும்பி வந்து மகனை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதாகவும் தற்கொலை செய்துகொண்டவரின் தாயார் தெரிவித்தார். மேலும் 10 மணிதொடக்கம் 10.30 வரையிலான காலப்பகுதில் தற்கொலை செய்துகொண்ட நபர், அவசரமாக போன் காட் ஒன்றை கொள்வனவு செய்து போனதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இறந்தவரின் தொலைபேசி லொக் செய்யப்பட்டிருப்பதனால் தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணத்தை அறிவதில் சிரமம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

டம்மி மம்மி ஆன சின்ன மம்மி – இணைந்தன அதிமுக வின் இரு அணிகள்

நல்ல நாளில் ஒன்றாக இணைந்துள்ளோம். நாம் அனைவரும் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள். எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசிய ஓபிஎஸ் கூறியுள்ளார். கடந்த 6 மாதமாக பிளவுபட்டிருந்த அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இன்று ஒன்றாக இணைந்துள்ளன. 6 மாதம் கழித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஒருவருக்கொருவர் கை குலுக்கி இணைந்தனர். இணைப்புக்குப் பிறகு நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் தொண்டர்கள் மத்தியில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், இந்த நல்ல நாளில் அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம் என்றார். பிரிந்தவர்கள் இன்று ஒன்றாக இணைந்திருக்கிறோம். நாம் அனைவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். அம்மாவின் ஆன்மாதான் நம்மை ஒன்றாக இணைத்துள்ளது அசைக்க முடியாத எஃகுக் கோட்டை அதிமுக. சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும் அதை…

Read More

வார பலன் – (21 – 28 ஆகஸ்டு 2017) – ஜோதிடர் வித்தியாதரன்

அதிமேதாவியாக இருந்தாலும் அமைதியாக காய் நகர்த்துபவர்களே! உங்களின் தனாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு வாங்க லோன் கிடைக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நவீன ரக வாகனம், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட காலமாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். 4-ம் இடத்தில் ராகு, செவ்வாய் நிற்பதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு, நெஞ்சு எரிச்சல், சிறுசிறு நெருப்புகள் காயங்கள் வரக்கூடும். கடந்த கால கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதர வகையில் அலைச்சல் அதிகரிக்கும். அரசாங்க விஷயம் தள்ளிப் போய் முடிவடையும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அஷ்டமத்துச் சனியும்,…

Read More

இலங்கையில் இன்னொருவனுக்கு மனைவியாக வாழ்ந்த நிலையில் 15 வயது மாணவி

தனியார் மேலதிக வகுப்பிற்கு சென்ற இடைநடுவே காணாமல் போனதாக கூறப்படும் அநுராதபுரம் – பாலாடிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி 14 நாட்களுக்கு பின்னர் களுத்துறை தெற்கு – ஹம்பேகெதர பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகளால் அவர் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 ஆம் திகதி இந்த சிறுமி காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவி தனது தாயிற்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து வீட்டை விட்டு சென்றுள்ளதாக காவற்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் தனது மகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்துள்ள தாய், குறித்த கடிதம் தொடர்பில் காவற்துறையிடம் மறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்த மாணவி களுத்துறை – தெற்கு ஹம்பேகெதர பிரதேசத்தில் உள்ள அவரது காதலன் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அந்த மாணவி பயன்படுத்திய…

Read More

உயர்தர இரசாயணவியல் பரீட்சை தாளை முன்கூட்டியே அச்சிட்டு விநியோகித்த தந்தையும், மகனும்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகித்தமை தொடர்பில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரின் தந்தையும் அவரது சகோதரரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இரசாயனவியல் பரீட்சை வினாத்தாள்களை கையேடு வடிவில் அச்சிட்டு விநியோகித்தமை தொடர்பிலேயே குறித்த இருவரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் கம்பஹாவிலுள்ள ரத்னவலி மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்ட இருவரும் மேலதிக வகுப்பு நடத்தி வந்தவர்கள் எனவும் இராசாயனவியல் வினாப்பத்திரத்தில் இடம்பெற்ற சில வினாக்களை கொண்ட கையேடுகளை விநியோகித்ததாக இவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

இலங்கையில் தந்தையின் சடலத்தின் முன் ஆசி கேட்டு கொலர்சிப் பரீட்சை எழுதச் சென்ற சிறுமி : மனதை உருக்கும் சம்பவம்

இறந்த தனது தந்தையின் சடலம் வீட்டில் இருக்க சடலத்தின் முன்நின்று ஆசிகேட்டு சிறுமியொரு வர் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதச் சென்ற சோகமயமான சம்பவமொன்று நேற்று எம்பிலிப்பிட் டிய விகாரகல பகுதியில் இடம்பெற்றுள்ளது. புற்று நோய் காரணமாக சிறுமியின் தந்தை கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். சிறுமியின் தந்தை இறந்து இரண்டு நாளாகையால் நேற்றும் உறவினர்கள் கிராம மக்களின் அஞ்சலிக்காக சடலம் வீட்டில் வைக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் காலை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றதுடன் இப்பரீட்சையை இச்சிறுமி எழுத வேண்டியிருந்தது. உரிய நேரம் வந்ததும் பரீட்சைக்கு செல்ல தாயாரான சிறுமி தனது தாயின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிபெற்றுக்கொண்டார். அதன் பின் தந்தையின் சடலத்துக்கு அருகில் சென்ற சிறுமி “தந்தையே சென்று வருகிறேன்” எனக் கூறி கண்ணீருடன் ஆசி…

Read More