இலங்கையில் பாடசாலை மாணவர்களின் போனுக்கு ஆபாச படம் ஏற்றிக் கொடுத்து பணம் பார்த்த இருவர்

பாணந்துறை – பிங்ஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு காவற்துறை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 200 மில்லி கிராம் கஞ்சா மற்றும் 16 கையடக்க தொலைபேசிகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 மற்றும் 25 வயதான இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பாடாசாலை மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை பதிவேற்றி கொடுப்பதற்காக இந்த தொலைபேசிகளை வைத்திருந்திருக்கலாம் என காவற்துறை சந்தேகிக்கிறது. இந்த கையடக்க தொலைபேசிகள் அனைத்தும் பாடசாலை மாணவர்களுடையதாக இருக்கலாம் எனவும் காவற்துறை சந்தேகிக்கிறது. மேலும் அந்த கையடக்க தொலைபேசிகளில் ஆபாச காணொளிகள் இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசிகளை பாடசாலை மாணவர்களிடமிருந்து பெற்று கொண்டு, அவற்றில் ஆபாச காணொளிகளை பதிவேற்றி பணம் பெற்றுகொள்ளும் மோசடி இடம்பெற்றுள்ளதா என காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Read More

இலங்கையில் முத்தம்கொடுக்க மறுத்த மகனின் மனைவியை தாக்கிய மாமா

தனது மகனின் மனைவியை பலவந்தம் செய்த முயற்சித்ததாக கூறப்படும் அந்தப் பெண்ணின் மாமாவை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். ஒரே வீட்டில் வசிக்கும் 32 வயதான மருமகளை இவ்வாறு பலவந்தம் செய்ய 60 வயதுடைய மாமா முயற்சித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தனது ஆசைக்கு இணங்க மறுப்பு தெரிவித்த மகனின் மனைவியை, வீட்டில் இருந்த கத்தியால் வெட்டி மாமனார் தாக்கியுள்ளதாக காவல்துறைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. வெட்டுக்காயங்களுக்கு இலக்கான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண் திருமணமாகி லுணுவில பிரதேசத்தில் உள்ள தனது கணவனின் வீட்டில் மாமாவுடன் வசித்து வந்துள்ளார். பின்னர், பெண்ணை கைவிட்டு கணவன் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்பின்னர், தனது மாமாவுடன் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மருமகளை கட்டியணைத்து முத்தம்கொடுத்து பலவந்தப்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Read More

இலங்கையில் 10 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 15 வயது மாணவன்

பாடசாலை விடுமுறையில் தனது வீட்டுக்கு வந்த 10 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 15 வயதான பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாணந்துறையை சேர்ந்த சிறுமியின் தாய், களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் இது சம்பந்தமாக முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணை நடத்தி மாணவனை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 10 வயதான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான மாணவன் களுத்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு இரண்டு லட்சம் ரூபா பிணையில், நன்னடத்தை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Read More

பௌத்த தேரர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பது வரவேற்புக்குரியது – SLFP காரைதீவு இனைப்பாளர்

பௌத்த தேரர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன்வந்தமை வரவேற்புக்குரியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவு பிரதேச இணைப்பாளர் வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதேவேளை, தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது ஒரு பௌத்ததேரர் என்ற துர்ப்பாக்கிய நிலை வந்துள்ளது என்பதை நினைக்கும் போது வேதனையாகவுள்ளதாக கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதில் மேலும், காணி விவகாரம் உரிமைப் பிரச்சினை இல்லையா? வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தலைமைகள் எங்கே? இது மக்களின் ஆதங்கம். தமிழ்த் தலைவர்கள் குரல் கொடுக்காமையினால் தான் நான் இறங்கியிருக்கின்றேன் என அந்த தேரரே கூறியிருக்கிறார். அம்பிட்டிய தேரர் தாம் சார்ந்த சமுதாயத்திற்கு குரல் கொடுத்திருந்த அதேவேளை தாம் வாழும் பிரதேசத்தில் அடக்கி ஒடுக்கப்படும் இன்னொரு சிறுபான்மை இனத்திற்காக குரல் கொடுத்திருப்பதை வரவேற்கத்தான் வேண்டும். கண்முன்னே நடக்கும் காணி சுவீகரிப்பு காணி…

Read More

இலங்கையிலேயே அந்த விடயம் பற்றி தெரிந்தவன் நான் மட்டும் தான் – மார் தட்டும் ரோஹித்த ராஜபக்ச

சுப்ரீம் ஜெட் – 1 எனும் செயற்கைக் கோள் குறித்து ஆரம்பம் முதல் தற்போது வரை நடைபெற்ற அனைத்தையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் விபரித்துள்ளதாக ரோஹித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க காலத்தில் சீனாவின் உதவியுடன் 320 மில்லியன் ரூபா செலவில் ஏவப்பட்ட சுப்ரீம் ஜெட் – 1 எனும் செயற்கைக் கோள் தொடர்பில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து வாக்கு மூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதியின் இளைய மகன் ரோஹித்த நேற்றைய தினம் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி இருந்தார். குறித்த விசாரணைகள் முடிந்து வெளியே வரும் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், அனைவரும் என்னிடம் கேட்கின்றார்கள் “எங்கே இந்த செட் லைட் உள்ளது?” என, இவர்களும் என்னிடம் முதலில் இதையே கேட்டார்கள் “செட்லைட் எங்கு…

Read More

உனக்கு தொப்பை அதிகம், நாங்கள் ஆட்சியை பிடித்து உனது வயிற்றை குறைப்போம் – நாமலிடம் சிக்கிய பொலீஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக, அந்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யவுள்ளனர். ”உனக்கு தொப்பை அதிகம், நாங்கள் ஆட்சியை பிடிப்போம். அதற்கு பின்னர் உனது வயிற்றை குறைப்போம்” என நாமல் ராஜபக்ச அச்சுறுத்தியுள்ளார். அச்சுறுத்தலுக்கு உள்ளான பொலிஸ் பரிசோதகர் சாந்த லலித், அது உயர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள கிறிஸ் என்ற இந்திய நிர்மாணத் திட்டம் ஒன்றுக்கு 4.3 ஏக்கர் காணியை குத்தகைக்கு வழங்கிய போது நடந்துள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து இந்த அதிகாரியே விசாரணைகளை நடத்தி வருகிறார். இதற்கு முன்னர் நாமல் ராஜபக்ச, “ இவனை புகைப்படம் எடு” என்று கூறி தன்னை அவமானப்படுத்தியதாக சாந்த லலித் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு…

Read More

ஆவா குழுவின் கடல் கடந்த தலைவனை பிடிக்க இன்டர்போல்!

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் ‘ஆவா’ குழுவின் முக்கிய புள்ளியை கைதுசெய்ய, இலங்கை அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவா குழுவின் முக்கிய புள்ளிகள், வெளிநாட்டில் இருந்தவாறு குற்றச்செயல்களை நெறிப்படுத்துவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகளை நேற்றைய தினம் சந்தித்த வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் ஜேர்மனியில் உள்ளார் என தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வழங்கிய இத் தகவலின் பிரகாரம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ள இலங்கை அரசாங்கம், குறித்த சந்தேகநபரை நாடுகடத்த ஜேர்மனியிடம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் அண்மைய காலமாக இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் பின்னணியில் ஆவா குழு உறுப்பினர்கள் செயற்படுவதாக குறிப்பிடப்படும் நிலையில், இதுவரை சுமார் 15 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர். நேற்றைய…

Read More

2017 – 2019 ராகு-கேது பெயர்ச்சி – பிறந்த தேதிக்கான பலன்கள்

1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கானது 27.7.2017 முதல் 13.2.2019 வரை ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை அதிபதியாகக் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே, நீங்கள், சூரியன் எப்படி உலகிற்கு பிரம்ம ஆதாரமாக விளங்கி ஒளி தருகிறதோ, அதுபோல பலருக்கும் நன்மை செய்து வாழ்வீர்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள். அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்திருந்தாலும் அமைதி தோற்றம் கொண்டிருப்பீர்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். நியாயத்தை மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவீர்கள். தீர்மானமான கருத்துகளைக் கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும் இருப்பீர்கள். ராஜதந்திரம் அதிகம் உடையவர்கள். உயர்பதவியில் இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பீர்கள். இந்த ராகுகேது பெயர்ச்சியால் கடந்த 1½ வருடங்களாக இருந்து வந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள்….

Read More

வார பலன் – (14 – 21 ஓகஸ்ட் 2017) – ஜோதிடர் வித்தியாதரன்

எதிர்நீச்சல் போடுபவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, தளம் கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பர். அவருக்கு புது வேலையும் அமையும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். புதிய அணுகுமுறையால் சொத்துப் பிரச்னை தீரும். வழக்கு சாதகமாகும். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும் என்றாலும் ராகு 4-ல் நிற்பதால் பல், காது வலி, தொண்டை புகைச்சல் வந்துப் போகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. அஷ்டமத்துச் சனி தொடர்வதால் சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். நம்பிக்கையின்மை, வீண் செலவு, அசதி, சோர்வு வந்து நீங்கும். கன்னிப்…

Read More

சிங்கள அரச படிவங்களால் சினமடைகிறீர்களா – இனி அந்த பிரச்சினை இல்லை

நாடு முழுவதும் , சிங்களமும், தமிழும் அரச கரும மொழிகள் ஆகும். ஆங்கில மொழி இணைமொழி. தேசிய பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு அவசியம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதேவேளை மொழிக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தினால் தேசிய பிரச்சினையில் நூற்றில் 50க்கு மேற்பட்ட தீர்வு காணப்படும் என தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் பொதுமக்களின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் அரசாங்க படிவங்களை மும்மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் அவரது அமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வின் போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், மும்மொழிகளிலும் அரசாங்க படிவங்கள் அமைப்பது குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதிலும் அது இடம்பெறவில்லை. விசேடமாக தமிழ்மொழிக்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லை என்பதும்…

Read More