இலங்கையில் கள்ள காதலனோடு நெருக்கமாக போட்டோ எடுத்து கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் tag செய்த தாய்

மாற்றாள் கணவருடன் காதல் கொண்டு அவரோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்களை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்க்கும் வண்ணம் பேஸ்புக்கில் பதிவேற்றி தனக்கும் தன் பிள்ளளைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார் என கணவரொருவர் தன் மனைவிக்கு எதிராக மஹரகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, மாற்றாள் கணவரோடு வீட்டை விட்டு சென்றிருக்கும் முறைப்பாட்டாளரின் மனைவி மற்றும் அவரது காதலரை விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, காதல் ஜோடிகள் பொலிஸ் நிலையத்தில் ஆஜரானர். குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய பேஸ்புக் கணக்கை பரிசோதனை செய்த போது, குறித்த பெண் தன் காதலனோடு நெருக்கமாக இருந்து எடுத்த புகைப்படங்களை கணவரினதும் தன் இரு குழந்தைகளினதும் பேஸ்புக் பக்கங்களுக்கு டெக் செய்துள்ளார் என பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது. கணவர் தொடர்ந்து தனக்கும் தன் காதலனுக்கும் தொலைப்பேசி…

Read More

தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து எழுச்சி! – நில ஆக்கிரமிப்பு வேலிகள் பிடுங்கி எறியப்பட்டன

மட்டக்களப்பு – முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான காணியின் ஒரு பகுதியை சட்டவிரோதமான முறையில் சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதன்போது குறித்த காணி வேலியோரம் மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் வேலியை தகர்க்க முற்பட்டுள்ளனர். இந்த நிலையில் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி நீதிமன்றத்தின் தடை உத்தரவுப் பத்திரத்தை வேலியில் ஒட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற தடை உத்தரவை கிழித்தெறிந்த மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் வேலி கம்பை பிடுங்கி எறிந்த நிலையில் அவரோடு வந்த பொதுமக்களும் வேலியை பிடுங்க முற்பட்டுள்ளனர். வேலியை பிடுக்க முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்த நிறுத்த முற்பட்ட போதும் அந்த முயற்சி பலனளிக்காமையால் பொலிஸ் பாதுகாப்பு படையினரால் மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள்…

Read More

உயர்தர பரீட்சை வினாத்தாள் கொண்டு சென்ற வாகனம் விபத்து – வினாத்தாள்களின் நிலை என்ன?

தற்போது நடைபெற்று வரும் கபொத உயர்தர பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. உயர் கல்வி அமைச்சில் இருந்து பதுளை உயர் தொழில்நுட்ப நிறுவனம் நோக்கி வினாத்தாள் கொண்டு செல்லப்பட்ட வாகனமே விபத்துக்குள்ளாகி உள்ளது. உயர் கல்வி அமைச்சிற்கு சொந்தமான வேன் பதுளை – பண்டாரவெல வீதியின் உடுவர 6ஆம் மைல்கல் பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த வாகனம் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மதிலில் மோதுண்டுள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேனில் இருந்த வினாத் தாள்கள் பாதுகாப்பாக உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள பரீட்சை மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையினால் இந்த விபத்து இடம்பெற்றள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் தமிழர்களால் இடைமறிக்கப்பட்டது

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தை வழிமறித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. தாண்டிக்குளம் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களால் பாதுகாப்பான புகையிரதக் கடவை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் தாண்டிக்குளம் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை முன்பாக சுமார் அரைமணிநேரம் வரையில் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக யாழில் இருந்து கொழுப்பு நோக்கிச் சென்ற புகையிரம் 30 நிமிடங்கள் தாமதித்தே பயணத்தை தொடர்ந்தது. இந்த விடயம் தொடர்பில் புகையிரதத் திணைக்களம், மற்றும் மாவட்ட அரச அதிபருக்கும் முன்னர் எழுத்து மூலம் தாம் தெரியப்படுத்தியிருந்ததாக மக்கள் இதன்போது தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்த நிலையில், மாவட்ட அரச அதிபர்…

Read More

தமிழ் மொழிக்கு கூகிள் கொடுத்துள்ள புதிய அங்கீகாரம் இது

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை தமது பேச்சு அங்கீகார விருப்பத்திற்குள் சேர்த்துள்ளதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது விரல்களால் தட்டச்சு செய்வதைக்காட்டிலும் குரலில் கட்டளையிட்டு எழுத்துக்களை அச்சிடச்செய்வது 3 மடங்கு வேகமாக நிகழக்கூடியதாக இருக்கும். இதனை மனதில் கொண்டே தமது நிறுவனம் குரல் தட்டச்சு முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூகிள் நிறுவனம் கூறியுள்ளது. இந்தமுறை தற்போது 30 இற்கும் மேற்பட்ட மொழிகளில் பில்லியனுக்கும் அதிகமாக மக்களுக்கு நன்மை தரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கூகிளின் பேச்சு அங்கீகாரம் என்ரொய்ட் குரல் தேடலின் 119 மொழிகளுடன் இணைந்து செல்கிறது. இந்தநிலையில் அமெரிக்க ஆங்கிலத்தில் எமோஜியுடன் குரல்களை வெளிப்படுத்த முடியும் என்று கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Read More

இறந்த இளம் பெண்ணின் சடலத்தை எரித்த சாம்பலில் கிடைத்த மர்ம பொருள்

ஹரியான மாநிலத்தில் நிர்மலா என்னும 50 வயதுடைய பெண். வயிற்று வலியால் துடித்துள்ளார், அவருடைய குடும்பத்தினர் அந்த பெண்மணியின் வயிற்று வலியை கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரத்தில் அப்பெண்மணி அந்த இடத்திலேயே இறந்து போனார். அப்பெணணை யாரும் மருத்துவமனைக்கு எடுத்து சொல்லாததால் பரிதாபமாக இறந்து போனாள். பிறகு இறுதி சடங்குகள் நடைபெற்று அந்த பெண்மணியை எரித்துள்ளனர். சாம்பலில் பெரிய அளவுடைய கத்திரிக்கோல் ஒன்று தென்பட்டது. பின்பு தான் தெரிந்தது அந்த பெண் கத்திரிக்கோலை விழுங்கியது. இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

யாழ்பாணம் – கொழிம்பு பயணிகளே எச்சரிக்கை! – இந்த கள்ள பஸ்களை அவதானியுங்கள்

யாழிலிருந்து கொழும்பு நோக்கி வழி அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்த, தனியாருக்கு சொந்தமான ஐந்து அதி சொகுசுப் பேருந்துகளும், அரை சொகுசுப் பேருந்து ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்னவின் ஆலோசனையின் கீழ் அவருடைய விசேட குழுவினர் நேற்று ஆணையிறவு முதல் கொக்காவில் வரை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்த ஆறு பேருந்து சாரதிகளுக்கும் எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read More

தமிழர் காணிகளை கைப்பற்றும் முஸ்லீம்கள் – தமிழ், சிங்கள மானவர்கள் ஏன் பள்ளிவாசலில் கற்கவேண்டும்? – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

மட்டக்களப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள தமிழ் இன விழிப்புணர்வுக்கான அமைப்பு தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு நேற்று மங்களராமய விகாரையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழ் மக்களுடைய காணிகளை முஸ்லிம் அமைப்புக்கள் அத்துமீறி கைப்பற்றுவதாக குறிப்பிட்டார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், வாழைச்சேனை மீராவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் அத்துமீறி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உறுதியுடைய காணிகளை முஸ்லிம் அமைப்பு ஒன்று அத்துமீறி புகுந்து அந்த மக்களுக்கு அநீதிகளை இழைத்து வருகின்றது. அப்பாவித் தமிழ் மக்களுடைய காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதேச செயலாளர் வாழைச்சேனை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். முஸ்லிம் அமைப்புக்கள் பொத்துவில் இருந்து மூதூர் வரைக்குமான கரையோரப் பிரதேசம் ஒரே நகரம்…

Read More

தின பலன் – 15 ஆகஸ்டு 2017

தின பலன் ராசி மேஷம் காலை 8.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் வீண் கவலை, டென்ஷன், பயம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்தி தரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன் ராசி ரிஷபம் காலை 8.46 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள்-. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை,வெள்ளை ராசி மிதுனம் எதிர்பார்த்த காரியங்கள்…

Read More