11 மற்றும் 8 வயது சிறுமிகளை வன்புணர்வு செய்த 17 வயது சிறுவன்

சிறுமியரை வன்புணர்வு செய்த, கூலி தொழிலாளி மற்றும் 17 வயது சிறுவனை, காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, 40. அதே பகுதியை சேர்ந்தவன், 17 வயது சிறுவன். இவர்கள் இருவரும் கூலி தொழிலாளர்கள்.

இவர்கள், அதே பகுதியை சேர்ந்த, 11 மற்றும் எட்டு வயதுடைய இரண்டு சிறுமியரை, இரண்டு நாட்களுக்கு முன், வன்புணர்வு செய்துள்ளனர்.

மேலும், இதை யாரிடமும் சொல்லக்கூடாது என, மிரட்டியுள்ளனர். இந்நிலையில், சிறுமியருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சிறுமியின் பெற்றோர், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர், சிறுமியர் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறினர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காட்பாடி காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

காவல்துறையினர், கந்தசாமி மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Comments

comments

Related posts