தேசிய மட்ட போட்டியில் சாதனை புரிந்துள்ள இந்த இரு வவுனியா மாணவர்கள்

தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் வவுனியா, செட்டிகுளம் கோட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு சேனநாயக்க வித்தியாலயத்தில் தேசிய மட்ட தமிழ் தினப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதன்படி, வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி.ம.ஆர்த்தனா பிரிவு – 5இல் கவிதை ஆக்கத்தில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், வவுனியா, மாணிக்கவாசகர் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன் அ.அனுசாந்த் பிரிவு – 4இல் கவிதை ஆக்கத்தில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்று தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். வவுனியா, செட்டிகுளம் கோட்டத்தில் தேசிய ரீதியில் தனி ஆக்கத்தில் குறித்த நிகழ்வில் தங்கப் பதக்கம் பெறப்பட்டமை இதுவே முதல்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

ஆவா குழு உறுப்பினர்களின் கல்விப் பசி வெளிப்பட்டது

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் சிறைச்சாலையிலிருந்து கொண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் அண்மையில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் நேற்று இவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் கோப்பாயில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள் வெட்டு நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 9ஆம் திகதி கைதான இருவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதானவர்களே இவ்வாறு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இரண்டு பேருமே வணிகப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோவின் பணிப்புரைக்கு அமைய சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை…

Read More

நல்லூர் ஆலயம் சென்ற இளம் பெண்ணை பின் வீதியில் கணவன் முன்னிலையில் துஸ்பரிக்க முயன்ற சம்பவம்

யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்ற இளம் குடும்பப் பெண்ணொருவரைப் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த பெண் நேற்று முன்தினம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றுவிட்டு ஆலயத்தின் பின்பக்கமாகவுள்ள சிவன் ஆலயத்திற்கு வழிபடுவதற்காகச் சென்றுள்ளார். குறித்த பெண்ணுடன் அவரது கணவரும் சென்ற நிலையில் கணவர் மனைவிக்குச் சற்றுத் தொலைவில் நின்ற போது குறித்த பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த ஒருவர் முயன்றுள்ளார். எனினும், குறித்த பெண்மணி அந்த அனர்த்த்தில் சிக்காமல் தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பில் கடமையில் ஈடுபட்டிருந்த யாழ். பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் என பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

Read More

தின பலன் – 13 ஓகஸ்ட் 2017

தின பலன் ராசி மேஷம் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வெளி உணவை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,கிரே ராசி ரிஷபம் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். நண்பர் ஒருவர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்வார். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை,மஞ்சள் ராசி மிதுனம் தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர…

Read More