பிக்குகளின் மோசமான செயற்பாடு! சினத்தில் மைத்திரி

இளம் பிக்குமார்கள் சிலர் நடந்துகொள்ளும் விதத்தால் பிக்குகள் தொடர்பில் மக்களிடம் ஏற்படக்கூடிய தவறான எண்ணங்களைத் தவிர்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாத்தறை வெஹெரஹேன பூர்வாராம ரஜமகா விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சில இளம் பிக்குமார்கள் நடந்துகொள்ளும் விதம் ஊடகங்களினூடாக உலகம் முழுவதும் காண்பிக்கப்படுவதனால் பிக்குகள் தொடர்பாக மக்களிடம் ஏற்படக்கூடிய தவறான எண்ணங்களைத் தவிர்க்க முடியாது.

எனவே, உன்னதமான பிக்குகள் சமூகத்தின் கௌரவத்தையும், நன்மதிப்பையும் பாதுகாக்கும் வகையில் பிக்குகள் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோரியுள்ளார்.

Comments

comments

Related posts