இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபடும் மாணவிகளுக்கு 5000 ரூபா சம்பளம்

பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகளை பயன்படுத்தி மேற்கொண்டுவந்த விபச்சாரத் தொழில் தொடர்பில் கடந்த தினத்தில் சகோதர ஊடகமான ஹிரு சிஐஏ வௌிப்படுத்தியது.

கம்பஹா – தொம்பே பிரதேசத்தை கேந்திரமாக கொண்டு இடம்பெற்றுவந்த இந்த மோசடி வியாபாரம் வலான ஊழல் தடுப்பு பிரிவின் உதவி கண்காணிப்பாளர் ஹெமல் பிரசாந்தவின் தலைமையின் கீழ் சுற்றிவளைக்கப்பட்டது.

பாடசாலை செல்லும் வயதுடைய மாணவிகளை பயன்படுத்தி விபச்சார தொழிலொன்று கம்பஹா -தொம்பே பிரதேசத்தை கேந்திரமாக கொண்ட முன்னெடுக்கப்படுவதாக எமக்கு இரகசிய தகவலொன்று கிடைத்திருந்தது.

பல தினங்களாக குறித்த பகுதியில் நோட்டமிட்ட எமது சிஐஏ குழுவினர் இந்த மோசடி வியாபாரம் தொடர்பில் தகவல்களை சேகரித்திருந்தனர்.

அதன்படி , இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்து.

இந்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் , விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமியும் மீட்கப்பட்டார்.

தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தாம் இந்த தொழிலில் ஈடுபடுவதாக குறித்த சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் தெரிவித்தார்.

தனக்கு இந்த மோசடியாளர்கள் 5000ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அந்த சிறுமி இதன் போது தெரிவித்தார்.

எனினும் , சிறுமி 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ,சிறுமியை அழைத்துச்செல்லும் வழியில் அவரது தாயை சந்தித்த எமது குழு அவரின் மகள் தொடர்வில் அவரிடம் வினவியது.

இதன் போது , தனது மகள் வீட்டில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் , அவரது மகள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதை காவற்துறை தெரிவித்தது.

இந்நிலையில் , இதற்கு முன்னரும் தனது மகள் இவ்வாறு சென்றுள்ளதாகவும் தான் அதை கண்டித்ததாகவும் அவரது தாய் தெரிவித்தார்.

Comments

comments

Related posts