வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு இது தொடர்பான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

மாவட்ட அடிப்படையில் பயிற்சிக்காகவும் நியமனத்திற்காகவும் குறித்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுய தொழில், தனியார் துறை, அரச சார்பற்ற அல்லது அரசதுறை ஆகிய துறைகளிலும் வேலைவாய்ப்பில்லாத பட்டதாரிகள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்ப படிவங்களை 21 தொடக்கம் 35 வயதிற்கிடைப்பட்ட, வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் செப்டெம்பெர் மாதம் 8ஆம் திகதிக்கு முன்னதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சுக்கு கிடைக்கும் வண்ணம் அனுப்பவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Comments

comments

Related posts