சுவிஸிலிருந்து பேஸ்புக் ஊடாக இயக்கப்படும் ஆவா குழு!

வடக்கில் செயற்படும் ஆவா குழு பேஸ்புக் ஊடாக ஒன்று சேர்வதாக பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக மவ்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த குழுவின் தற்போதைய தலைவர் நிஷா விக்டர் உட்பட பிரதான சந்தேக நபர்கள் நான்கு பேர் கொழும்பில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஆவா குழுவை செயற்படுத்திய தலைவர் சன்னா என்பவர் சுவிட்சர்லாந்தில் மறைந்துள்ளார். அங்கிருந்து பேஸ்புக் ஊடாக ஆவா குழுவை இணைத்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கில் வாழும் இளைஞர்களின் மனதில் யுத்தம் சார்ந்த மனநிலையை ஏற்படுத்தி இந்த பேஸ்புக் குழு செயற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

பேஸ்புக் ஊடாக ஆவா குழு உறுப்பினர்கள் பலர் தொடர்பில் தகவல் பெற்றுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பயங்கரவாத விசாரணை பிரிவு, பாதாள குழு தடுப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவுகளின் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Comments

comments

Related posts