காதலியை நிர்வாணப்படுத்தி கொலை செய்த பௌத்த துறவி

நிர்வாணப்படுத்தி, தண்ணீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்த முன்னாள் பௌத்த பிக்கு ஒருவருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பன்னிப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வரும் 34 வயதான ஹேனேகம ரத்னசிறி தேரர் என்ற கொடித்துவக்கு ஆராச்சிகே சாரங்க என்ற நபருக்கு இந்த தண்டனை விதித்து நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க உத்தரவிட்டுள்ளார்.

குற்றச்சாட்டை எதிர்நோக்கிய இந்த நபர் கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி தனது காதலியான இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த தோன சுனேத்ரா பிரியதர்ஷனி என்ற பெண்ணை நிர்வாணப்படுத்தி, நாச்சிமலை நீர்தேக்கத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குற்றவாளி துறவறம் பூண்டிருந்த நபர். துறவறத்தை கைவிட்டு 5 ஆண்டுகளாக பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார்.

பின்னர் அந்த பெண்ணிடம் பணத்தை பெற்றுக்கொண்டு காதலை முறித்து விட்டு கொரியாவுக்கு தப்பிச் சென்று இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கை வந்த அவர் காதலை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு, யுவதியை திருமணம் செய்து கொள்வதாக பெற்றோரிடம் உறுதியளித்துள்ளார்.

திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக கூறி யுவதியை கொழும்புக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் மறுநாள் யுவதியின் சடலத்தை இங்கிரிய நாச்சிமலை நீர்தேக்கத்தில் இருந்து பொலிஸார் மீட்டுள்ள்னர்.

இந்த சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி நடந்துள்ளது என நீதிபதி கூறியுள்ளார்.

Comments

comments

Related posts