மீண்டும் யாழ். வடமராட்சி அல்வாய் பகுதியில் வாள்வெட்டு

யாழ். வடமராட்சி அல்வாய் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த வாள்வெட்டுச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அல்வாய் வடக்கு முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த சின்னத்தம்பி கமல்ராஜ் (வயது-53) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

காதலியை நிர்வாணப்படுத்தி கொலை செய்த பௌத்த துறவி

நிர்வாணப்படுத்தி, தண்ணீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்த முன்னாள் பௌத்த பிக்கு ஒருவருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பன்னிப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வரும் 34 வயதான ஹேனேகம ரத்னசிறி தேரர் என்ற கொடித்துவக்கு ஆராச்சிகே சாரங்க என்ற நபருக்கு இந்த தண்டனை விதித்து நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டை எதிர்நோக்கிய இந்த நபர் கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி தனது காதலியான இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த தோன சுனேத்ரா பிரியதர்ஷனி என்ற பெண்ணை நிர்வாணப்படுத்தி, நாச்சிமலை நீர்தேக்கத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குற்றவாளி துறவறம் பூண்டிருந்த நபர். துறவறத்தை கைவிட்டு 5 ஆண்டுகளாக பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த…

Read More

இன்று முதல் இந்த போக்குவரத்து குற்றங்களுக்கு 25000 தண்டப்பணம் – அமைச்சரவை அனுமதி

போக்குவரத்து தவறுகளுக்காக அறவிடப்படுகின்ற ஆகக்குறைந்த தண்டப்பணத்தை 25,000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பண சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறினார். கீழ்க்காணும் போக்குவரத்து தவறுகளுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கிகரிக்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வாகனம் செலுத்துதல். போக்குவரத்து அனுமதிப்பத்திரம் அற்ற சாரதி ஒருவரை சேவைக்கு அமர்த்துதல். மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்ததன் பின்னர் வாகனம் செலுத்துதல். ரயில் வீதியினுள் முறையற்ற விதத்தில் மோட்டார் வண்டிகளை செலுத்துதல். அங்கிகரிக்கப்பட்ட காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல் அத்துடன், போக்குவரத்து தவறுகளுக்காக தற்போது அறவிடப்படுகின்ற குறைந்த பட்ச தண்டப்பணத்தில்…

Read More

இலங்கையில் தோன்றிய சந்திரகிரகணத்தின் புகைப்படங்கள் வெளியானது

கடந்த 7ஆம் திகதி இரவு வானில் தோன்றிய சந்திரகிரகணம், உலகம் முழுவதும் பல நாடுகளில் அவதானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இலங்கையிலும் சில பகுதிகளில் மக்களால் சந்திரகிரகணம் அவதானிக்க முடிந்துள்ளது. அம்பாறை பிரதேசத்திலுள்ள மக்களுக்கு சந்திரகிரகணம் அவதானிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் சந்திரனின் பகுதி ஒன்று மறைந்து செல்லும் காட்சியினை தெளிவாக காண முடிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Read More

சுவிஸிலிருந்து பேஸ்புக் ஊடாக இயக்கப்படும் ஆவா குழு!

வடக்கில் செயற்படும் ஆவா குழு பேஸ்புக் ஊடாக ஒன்று சேர்வதாக பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக மவ்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த குழுவின் தற்போதைய தலைவர் நிஷா விக்டர் உட்பட பிரதான சந்தேக நபர்கள் நான்கு பேர் கொழும்பில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆவா குழுவை செயற்படுத்திய தலைவர் சன்னா என்பவர் சுவிட்சர்லாந்தில் மறைந்துள்ளார். அங்கிருந்து பேஸ்புக் ஊடாக ஆவா குழுவை இணைத்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கில் வாழும் இளைஞர்களின் மனதில் யுத்தம் சார்ந்த மனநிலையை ஏற்படுத்தி இந்த பேஸ்புக் குழு செயற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. பேஸ்புக் ஊடாக ஆவா குழு உறுப்பினர்கள் பலர் தொடர்பில் தகவல் பெற்றுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

Read More

உங்களது பெயர் வாக்காளர் டாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? – பரிசோதித்துக் கொள்ளலாம் வாருங்கள்

2017ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் கணக்கெடுப்பின் ஆரம்ப படிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அதற்கான ஆவணங்கள் இன்று(10) தொடக்கம் செப்டெம்பர் ஆறாம் திகதிவரை காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாக்காளராக பதிவுசெய்யப்பட்டுள்ளீர்களா என்பதை அதில் பரிசீலிக்கலாம். பதிவு செய்யப்படவில்லையாயின் உரிமை கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் வழங்கியுள்ளது. ஒருவர் தனது பெயர் பதிவுசெய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச செயலகம், உள்ளுராட்சி மன்றம் மற்றும் கிராம அலுவலர் பணிமனைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வாக்காளர் தேருநர் இடாப்பிலிருந்து பார்த்து பரீசீலிக்கமுடியும் என தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் பெயர் இல்லாவிடின் தனது கோரிக்கை படிவத்தை மேற்குறிப்பிட்ட இடங்களில் பெற்று எதிர்வரும் செப்டெம்பர் ஆறாம் திகதிக்கு முன் உரிய மாவட்ட செயலகத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு http://eservices.elections.gov.lk/myVoterRegistration.aspx என்ற இணையத்தளத்தைப் பார்வையிட்டு…

Read More

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு இது தொடர்பான விண்ணப்பங்களை கோரியுள்ளது. மாவட்ட அடிப்படையில் பயிற்சிக்காகவும் நியமனத்திற்காகவும் குறித்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுய தொழில், தனியார் துறை, அரச சார்பற்ற அல்லது அரசதுறை ஆகிய துறைகளிலும் வேலைவாய்ப்பில்லாத பட்டதாரிகள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்ப படிவங்களை 21 தொடக்கம் 35 வயதிற்கிடைப்பட்ட, வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் செப்டெம்பெர் மாதம் 8ஆம் திகதிக்கு முன்னதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சுக்கு கிடைக்கும் வண்ணம் அனுப்பவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Read More

குட்டைப் பாவாடைக்கு கீழிருந்து புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக போராடும் இளம்பெண்

ஜினா மார்ட்டின் லண்டனில் நடந்த இசைத் திருவிழாவினை ரசித்துக்கொண்டிருந்த போது, ஒரு நபர் ஜினாவின் குட்டைப் பாவாடையின் கீழே மொபைலை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அறிந்த அவர், நேரடியாக காவல்துறைக்கு சென்று புகார் கொடுத்தார். காவல்துறையினர் இந்த வழக்கை மூடிய நிலையில், வழக்கு விசாரணையை மீண்டும் தொடர ஜினா மனு ஒன்றினை போட்டுள்ளார். இதற்காகத் தான் நடத்திய போராட்டத்தினை விளக்குகிறார் ஜினா. ஜூலை 8, 2017-ம் ஆண்டு லண்டனின் ஹைட் பார்க்கில் நடந்த இசை திருவிழாற்கு நானும் எனது சகோதரியும் சென்றிருந்தோம். பெரும் கூட்டத்திற்கு நடுவில், இசை கொண்டாட்டத்திற்காக காத்திருந்தோம். எங்களது அருகில் வந்த இரண்டு நபர்கள், எங்களிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தனர். அதில், கருமை நிற முடி கொண்ட ஒருவன் என்னை மேலும் கீழுமாக பார்த்ததுடன், என்னைப் பற்றி அவனது நண்பனிடம் கூறி நகைத்தான்….

Read More

சற்றுமுன் வெளியானது ஆவா குழு தலைவன் விக்டரின் வாக்கு மூலம்! விபரம் இதோ

ஆவா குழுவில் இருந்து என்னுடன் முரண்பட்டுக்கொண்டு வேறு குழுவை உருவாக்கச் சென்ற ‘ தனு ரொக்’ என்பவரை வெட்டவே நாம் சென்றோம். அவரது வீட்டில் அவர் இருக்கவில்லை. இதனால் நாம் மீள திரும்ப முட்பட்ட போது, பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் வருவதை அவதானித்தோம். அவர்கள் எம்மை மடக்கிப் பிடிக்கவே வருவதாக எண்ணியே அவர்களை பின் தொடர்ந்து திரத்திச் சென்று வெட்டினோம். நானும் மனோஜும் சேர்ந்தே அவர்களை தொடர்ச்சியாக வெட்டினோம்’ என பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் ஆவா பாதாள உலகக் குழுவின் தலைவன் நிஷா விக்டர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளான். வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் நேரடி மேற்பார்வையில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ணான்டோ, சிரேஷ்ட…

Read More

வித்தியா கொலை வழக்கு – திருப்பத்தை ஏற்படுத்துமா விஜயகலா மகேஷ்வரனின் வாக்குமூலம்?

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. வித்தியா கொலை வழங்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை காவல்துறையில் பெறுப்பளிக்காது தப்பவிட்டமை தொடர்பில் விஜயகலாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்டநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார். யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் சிவலோக நாதன் வித்தியா படுகொலை தொடர்பில் பிரதான சந்தேகத்திற்குரியவரான சுவிஸ் குமார், பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு மின்கம்பத்தில் கட்டிவைத்திருந்த நிலையில், அவரை தப்பவிடுவதற்கு விஜயகலா மகேஸ்வரன் உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவல்துறை நீதவான் இரகசிய காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதன்படியே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read More