சீனாவில் பயங்கர நிலநடுக்கம் – 100 பேர் வரை பலி – 1000 க்கு மேற்பட்டோர் படுகாயம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் திடீரென இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவாகியுள்ளது.

சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி, 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் ஆடின. மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு சாலைகளுக்கு ஓடி வந்தனர்.

இதனால் வீடுகளில் உள்ள அலங்கார விளக்குகள், பாத்திரங்கள், அலுமாரிகள் என அனைத்தும் தடதடவென ஆடியன.

பீதி அடைந்த மக்கள், வீடுகளில் இருந்து தங்களது குழந்தைகளை தூக்கிக் கொண்டு பதறி அடித்து வெளியே ஓடி வரும் காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், நிலநடுக்கத்தால் சாலையின் தடுப்புச் சுவர்கள் உடைந்துள்ளன. சாலையில் கட்டிட இடிபாடுகள் சிதறிக் கிடக்கின்றன. சாலை பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளன.

இரவு நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

Comments

comments

Related posts