உயிரிழந்த தம்பியின் சடலத்திற்கு கண்ணீருடன் ராக்கி கட்டிய சகோதரி

ஆந்திர மாநிலத்தில் நண்பர்கள் தினத்தை கொண்டாடச் சென்ற இளைஞர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மறுநாள் ரக்க்ஷா பந்தன் தினத்தன்று இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. சடலத்திற்கு கண்ணீருடன் ராக்கி கயிறு கட்டி கதறி அழுதாள் அவரது சகோதரி. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்தது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், திருப்பூரு பகுதியை சேர்ந்த இளைஞர் வினோத் (22). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினத்தை உற்சாகமாகக் கொண்டாட தனது நண்பர்களுடன் காரில் பேத்தபல்லி ஏரிக்கு சென்றார். நண்பர்களுடன் ஏரியில் குளித்தார் வினோத். குளித்துவிட்டு நண்பர்கள் கரை ஏறியபோது வினோத்தை மட்டும் காணவில்லை.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாரும் கிராம மக்களும் ஏரியில் பல மணி நேரமாக தேடியும் சடலம் கிடைக்கவில்லை. மறுநாளும் தேடிய அவர்கள் சடலத்தை மீட்டனர். இது குறித்து வினோத்தின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அறிந்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வினோத்தின் சடலம் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு குடும்பத்தினர் விரைந்தனர். சடலத்தை பார்த்து துக்கம் தாங்காமல் கதறி அழுதனர்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ரக்க்ஷா பந்தன் தினத்தன்று வினோத்துக்கு அவரது சகோதரி சிரிஷா ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். வினோத்தின் சடலத்துக்கு சகோதரி சிரிஷா கண்ணீருடன் ராக்கி கயிறு கட்டி கதறி அழுதார். இது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.

Comments

comments

Related posts