உயிரிழந்த தம்பியின் சடலத்திற்கு கண்ணீருடன் ராக்கி கட்டிய சகோதரி

ஆந்திர மாநிலத்தில் நண்பர்கள் தினத்தை கொண்டாடச் சென்ற இளைஞர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மறுநாள் ரக்க்ஷா பந்தன் தினத்தன்று இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. சடலத்திற்கு கண்ணீருடன் ராக்கி கயிறு கட்டி கதறி அழுதாள் அவரது சகோதரி. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்தது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், திருப்பூரு பகுதியை சேர்ந்த இளைஞர் வினோத் (22). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினத்தை உற்சாகமாகக் கொண்டாட தனது நண்பர்களுடன் காரில் பேத்தபல்லி ஏரிக்கு சென்றார். நண்பர்களுடன் ஏரியில் குளித்தார் வினோத். குளித்துவிட்டு நண்பர்கள் கரை ஏறியபோது வினோத்தை மட்டும் காணவில்லை. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாரும் கிராம மக்களும் ஏரியில் பல மணி நேரமாக தேடியும் சடலம் கிடைக்கவில்லை. மறுநாளும் தேடிய அவர்கள் சடலத்தை…

Read More

இலங்கையில் பாடசாலை சிறுமிகளை வைத்து இயங்கிய விபச்சார கும்பல் முற்றுகை – படங்கள் இணைப்பு

பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்தும் இரகசிய மோசடி வியாபாரமொன்று கம்பஹா – தொம்பே பிரதேசத்தை கேந்திரமாக கொண்டு இடம்பெறுவதை சகோதர மொழி ஊடகமான ஹிரு வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. பல நாட்களாக குறித்த பகுதியில் நோட்டமிட்ட ஹரு சிஐஏ குழுவினர் இந்த மோசடி வியாபாரம் தொடர்பில் தகவல்களை சேகரித்தனர். அதன்படி , சிறுமிகளை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தும் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்ட எமது குழுவினர் தொலைப்பேசி அழைப்பின் மூலம் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டனர். சிறுமிகளை பார்வையிடுவதற்காக குறித்த மோசடியாளர்கள் எம்மை மல்வானை பிரதேசத்திற்கு அழைத்தனர். அதன்படி , பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவின் உதவி காவற்துறை கண்காணிப்பாளர் ஹெமல் பிரசாந்தவின் தலைமையில் இந்த மோசடி வியாபாரம் சுற்றிவளைக்கப்பட்டது. இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட விதம் நாளை ஹிரு சிஐஏவில் ஔிபரப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழ் மண்ணுக்காக போராடிய வடமாகாண பெண்கள் அடிமைகளாக கடத்தப்படும் கொடூரம்

வட மாகாணத்திலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்காக சென்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் எண்ணிக்கை ஆரம்ப காலத்தில் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த 2015 ஆம் மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான வடக்குப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றிருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் கணவனை இழந்த பெண்கள், தமது குடும்பங்களுக்கு தலைமையேற்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, அவர்கள் தமது குடும்பங்களின் வாழ்வாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்காக செல்லும் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில், வடக்கில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்கள் அடிமைகளாக கடத்தப்படுவதாக, யாழ்ப்பாணத்தில் இயங்கும் சமூக சேவைகள் அமைப்பொன்றினதும், மத்திய வங்கியினதும் தரவுகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ்…

Read More

மன்னாரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளம் தாயின் மரணம்

மன்னார் மடு தேவாலய பகுதியில் இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய இளம் பெண்ணே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் உடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மடு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நீதிபதி இளஞ்செழியனுக்கு ஜனாதிபதி பாராட்டு கடிதம்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி அனுப்பி வைத்த குறித்த கடிதம் நேற்று காலை நீதிபதிக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் திகதி யாழ். நல்லூர் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலும், இதில் படுகாயமடைந்த இரு மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். இதற்கு ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கையெழுத்திட்டு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். “அன்றைய தினம் இடம்பெற்ற துன்பகரமான சம்பவத்தின் போது நீதிபதியாகிய நீங்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பாக ஜனாதிபதி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.” என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கையில் 49 வயது பெண்ணுக்கும் 31 வயது ஆணுக்கும் பஸ்ஸில் மலர்ந்த காதல் – ஓட்டல் அறையில் முடிந்தது

49 வயதான பெண் ஒருவருக்கும், 31 வயதான ஆண் ஒருவருக்கும் பஸ்ஸில் ஏற்பட்ட காதல் விபரீதமாக முடிந்துள்ளது. வரகாபொல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளம் தோற்றமுடைய 49 வயதான பெண் ஒருவர், 31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். கொழும்பு தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி வரும் பெண், அனுராதபுரத்தில் அமைந்துள்ள தமது வீட்டுக்கு செல்வதற்காக பஸ்ஸில் ஏறியுள்ளார். அருகாமையில் அமர்ந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தாம் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிறுவனமொன்றில் கடமையாற்றி வருவதாக குறித்த நபர் தம்மை அடையாளப்படுத்தியுள்ளார். ஒன்றரை லட்சம் ரூபா சம்பளம் பெற்றுக்கொள்ளக்கூடிய வெளிநாட்டு தொழில் வாய்ப்பு வழங்க முடியும் என அவர் பெண்ணிடம் கூறியுள்ளார். இருவரும் தொலைபேசி இலக்கங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். அதன் பின்னர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு…

Read More

பாடசாலை விடுமுறையில் இன்பச் சுற்றுலா செல்ல விசேட ரயில்கள்

பாடசாலை விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள் ஆரம்பமாவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று 9 ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை பொதுவான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக விசேட ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்கள அதிகாரி பி.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்தார். இதேவேளை கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி வரை சேவையில் ஈடுபடும் இலக்கம் 1033 என்ற நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இம்மாதம் 27 ஆம் திகதி வரை அதன் சேவை தொடர்பான நேர அட்டவணையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சீனாவில் பயங்கர நிலநடுக்கம் – 100 பேர் வரை பலி – 1000 க்கு மேற்பட்டோர் படுகாயம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் திடீரென இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி, 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் ஆடின. மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு சாலைகளுக்கு ஓடி வந்தனர். இதனால் வீடுகளில் உள்ள அலங்கார விளக்குகள், பாத்திரங்கள், அலுமாரிகள் என அனைத்தும் தடதடவென…

Read More

இலங்கை அரச வைத்தியசாலை ஒன்றில் பெண்கள் கழிவறையில் கமெரா பொருத்திய வைத்தியர்

அரசாங்க வைத்தியசாலை ஒன்றின் கழிப்பறைக்குள் சீ.சீ.டீ.வி கமரா பொருத்தியதாக வைத்தியர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த வைத்தியருக்கு எதிராக அனுராதபுரம் தலைமை பொலிஸார், அந்தப் பகுதி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளதாக, சட்ட மா அதிபருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள வைத்தியரை எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண்கள் கழிப்பறையில் இவ்வாறு சீ.சீ.டீ.வி பொருத்தப்பட்டதாக வைத்தியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தின பலன் – 9 ஆகஸ்டு 2017

தின பலன் ராசி மேஷம் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதகரிக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு ராசி ரிஷபம் உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள் ராசி மிதுனம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில்…

Read More