ஆவா குழு மூத்த தலைவர் இணுவில் நிஷா விக்டருக்கு எதிராக பாயும் பயங்கரவாத தடுப்பு சட்டம்

யாழ். கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன், தொடர்புடையவர் என தெரிவித்து கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ள நிஷா விக்டருக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “நிஷா விக்டர் என்று அழைக்கப்படும் சத்தியவேலி நாதன்” பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் தடுப்பு காவலில் வைத்து தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்துடன், தொடர்புடையவர்கள் என தெரிவித்து யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க யாழ்.நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த மாதம் 30ஆம் திகதி யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்து இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் படுகாயமடைந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை நேற்றைய தினம் யாழ்.நீதவானின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்திய பொலிஸார், தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரியிருந்தனர்.

இந்நிலையில், மூன்று நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

Comments

comments

Related posts