காதலுக்காக ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை தூக்கி எறிந்த இளம்பெண்

தான் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வதற்காக, கோடிக்கணக்கான சொத்துக்களை ஒரு இளம்பெண் தியாகம் செய்த விவகாரம் மலேசியாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் வசிக்கும் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவர் கோ கே பெங்.. இவரின் சொத்து மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி. தொழிலதிபரான இவர், பல்வேறு முக்கிய நட்சத்திர விடுதிகளின் அதிபராகவும், பங்குதாரராகவும் இருக்கிறார். முக்கியமாக, மலேசியன் யூனைடர் தொழில் நிறுவனங்களின் உரிமையாளராக திகழ்கிறார். இவரின் ஒரே மகளான ஏஞ்சலின் பிரான்சிஸ் கோ என்பவர், இங்கிலாந்தில் படிக்கும் போது தனது கல்லூரி நண்பர் ஜடிடிஹா என்பவரை காதலித்துள்ளார். அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். ஆனால், அவரின் காதலை அவரின் தந்தை கோ கே பெங் ஏற்கவில்லை. பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடித்தால் அவருக்கு சொத்துக்கள் எதுவும் கிடைக்காது என்பதை அறிந்தும், சமீபத்தில் எளிமையாக தனது…

Read More

கருகலைப்பு செய்துக்கொண்ட 19 வயது மாணவி அதிர்ச்சி மரணம்

ஹைதராபாத்தில் கருகலைப்பு செய்துக்கொண்ட 19 வயது என்ஜினியரிங் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் என்ஜினியரிங் மாணவி ஒருவர் கருகலைப்பு செய்ய மருத்துவமனைக்கு தனது ஆண் நண்பருடன் சென்றுள்ளார். 5 மாதம் கர்ப்பிணியாக இருந்த அவருக்கு மருத்துவமனையில் கருகலைப்பு செய்யப்பட்டுள்ளது. கருகலைப்பு செய்யப்பட்ட உடனே அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது. இந்நிலையில் அவர் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் உள்ளனர். கருகலைப்பு செய்த மருத்துவர்கள் மற்றும் மாணவியுடன் மருத்துவமனைக்கு சென்ற அவரது நண்பர் ஆகியோரிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது. மேலும் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே என் மகள் உயிரிழ்ந்துவிட்டார் என மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.

Read More

அண்ணனின் காதலுக்கு தூது போன தங்கையை நிர்வாணமாக்கி தெருவில் அழைத்துச் சென்ற கொடுமை

தனது சகோதரரின் காதலுக்கு தூதுபோன ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரம் மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரங்கேறியுள்ளது. மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள சக்லம்பா கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண், தனது சகோதரருக்கும், பக்கத்து கிராமத்த்தில் உள்ள ஒரு சிறுமிக்கும் இடையே காதல் தூதுவராக இருந்துள்ளார். இந்த விவகாரத்தை தெரிந்து கொண்ட அந்த சிறுமியின் வீட்டார், காதலுக்கு உதவியாக இருந்த பெண்ணையும், அவரது கணவரையும் ஊர் மக்கள் முன்பு மன்னிப்பு கேட்க வைத்தனர். அதன் பின்பும் ஆத்திரம் தீராத அப்பெண்ணின் குடும்பத்தினர், கடந்த 4ம் தேதி, அப்பெண்ணின் கணவர் வெளியே சென்றிருந்த நிலையில், அப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அப்பெண்ணை அடித்து உதைத்தனர். மேலும், அவரை நிர்வாணமாக்கி வெளியே அழைத்து வந்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இந்த சம்பவம்…

Read More

தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி – இலங்கை விலை விபரம் இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,257 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த இரண்டு வாரங்களில் பதிவான குறைந்த பட்ச விலை என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க டொலரின் பலவீனமே தங்கத்தின் விலை குறைவுக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்வார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுண். இது 24 கரட் சொக்கத் தங்கம் ஆகும். இலங்கையில் இன்றைய தினத்தில் தங்கத்தின் விலை நிலவரம்.. தங்கம் அவுன்ஸ் – 193,695 ரூபா 24 கரட் ஒரு கிராம் தங்கம் – 6,840 ரூபா 24 கரட் 8 கிராம் தங்கம் (1 Pawn) –…

Read More

35 வயதிற்கு மேற்பட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஓர் அவசர வேண்டுகோள்

முப்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் நாளை முற்பகல்- 9.30 மணிக்கு யாழிலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஒன்று கூடுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. எமது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தின் கோரிக்கைக்கு அமைவாக அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடத்தினை நிரப்புவதற்கான அரச வர்த்தமானி கோரப்பட்டுள்ளது. எனினும், இவ் வர்த்தமானியில் குறித்த நியமனத்திற்கான வயது 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ் வயதெல்லையை 45 வயதாக அதிகரிக்க வேண்டுமெனவும், பட்ட இறுதித் திகதியை உள்வாங்குதல் வேண்டும் எனவும் கோரி வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளன. எனவே, இதனைக் கருத்திற் கொண்டு அனைத்து 35 வயதிற்கும் மேற்பட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளையும் உரிய நேரத்தில் வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுள்ளது.

Read More

அதிரடிப்படையை யாழ்ப்பாணத்தில் தேட விட்டுவிட்டு கொழும்பில் ஓய்வெடுக்கும் ஆவா குழு

யாழ். குடாநாட்டில் செயற்பட்டு வரும் ஆவா குழுவின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் தென்னிலங்கையை நோக்கி தப்பியோடியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள இடங்களில் இவர்கள் தலைமறைவாக இருப்பதாக பொலிஸாரை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ள தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குடாநாட்டில் செயற்பட்டு வந்த ஆவா குழுவின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் தென்னிலைங்கையை நோக்கி தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, நேற்றைய தினம் ஆவா குழுவின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வர் கொழும்பு புறக்கோட்டை மற்றும் மட்டக்குளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த சில நாட்களாக யாழ்….

Read More

இலங்கை அரச வேலைவாய்ப்புக்கள் (1 -7 ஓகஸ்ட் 2017 காலத்தில் வெளியிடப்பட்டவை)

இந்த வாரம் வெளியான அரச, வங்கி மற்றும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்களின் தொகுப்பு குறிப்பு: இப் பகுதியில் ஏதாவது தெளிவின்மை காணப்படுமாயின் எங்களுடன் பேஸ்புக் மெசேஸ் மூலம் இணைந்து தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளவும். கீழே வேலைவாய்ப்பு செய்திகளின் இடையிடையே நேர்முகப் பரீட்சையில் சிறப்பாக செயற்படுவதற்குரிய ஆலோசனைகள் தரப்பட்டுள்ளது. படித்துப் பயன்பெறுங்கள் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற ‘வெற்றி முக்கோணத்தின்’ மூன்று கூறுகளாகிய அறிவு, திறன் மற்றும் குணநலன்கள் ஆகியவற்றில் மூன்றாவதும், மிகவும் நேர்முகத்தேர்வில் மட்டுமல்லாது வாழ்விலும் வெற்றி பெற இன்றியமையாததான சில குணநலன்கள் குறித்துத் தெரிந்து கொள்வோம். ஒரு மனிதன் பொறுப்புள்ளவனா? சொன்ன சொல் தவறாதவனா? கொடுத்த வேலையைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் கச்சிதமாக முடிக்கக் கூடியவனா என்றெல்லாம் உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்ய இயலாது.ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் நீங்கள் நேரம்தவறாமையைக் கடைப்பிடிப்பவரா…

Read More

வெளியான அதிர்ச்சி செய்தி – பாதிக்கப்பட்ட தமிழ் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரும் அதிகாரிகள்

வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் போது பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளின் அதிகாரிகளினால் பெண்களிடம் பாலியல் லஞ்சம் பெற்றுக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, வடக்கில் செயற்படும் தன்னார்வ அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கணவனை இழந்த பெண்களே அதிகம் உள்ளனர். வீடு வழங்குதல் , சுய தொழில் வாய்ப்புகள் வழங்குதல், ஆடு மற்றும் கோழி வளர்ப்பு உள்ளிட்ட வாழ்வாதார உதவிகளை வழங்கும் போது, பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரிகள் பாலியல் லஞ்சம் கோருகின்ற போதிலும் இது தொடர்பில் இதுவரையில் 5 முறைப்பாடுகள் மாத்திரமே கிடைத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள், தமிழ் கலாச்சாரம் மற்றும்…

Read More

மகிந்தவும் நானும் இணைந்து தமிழ் சிங்கள உரிமைகளை வென்றெடுத்து ஆட்சி செய்வோம் – சம்பந்தன்

எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர் . இந்த நாடு என்றும் பிளவுபடவும் கூடாது. எமது பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். எனவே அதனை புரிந்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சிபுரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் வினைச்சொற்கள் விபரித்தல் என்ற தலைப்பில் ஜுலம்பிட்டியே மங்கள தேரரினால் இன்று மேல்மாகாண காலாசார சதுக்கத்தில் இடம்பெற்றது இந்நிழ்வில் விசேட விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வினைச்சொற்கள் விபரித்தல் என்ற பெயரில் ஜுலம்பிடியே தேரரினால் வெளியிடப்பட்டுள்ள புத்தகம் இந்நாட்டின் தமிழ். சிங்கள மக்களுக்கான உறவுப்பாலமாக அமையும். பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு தமிழ் சிங்கள மக்களுக்கும் இடையில் இந்த புத்தகம் ஒரு உறவை…

Read More