கொழும்பில் WWE தி கிரேட் காலியும், விராட் கோலியும் சந்திப்பு – படங்கள் இணைப்பு

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர் விராட் கோலியும், மல்யுத்த வீரர் தி கிரேட் காலியும் இலங்கையில் நேற்று சந்தித்துக் கொண்டுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இருவரும் கொழும்பில் சந்தித்து நண்பர்கள் தினத்தை கொண்டாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றியதுடன், “தி கிரேட் காலியுடன் சிறப்பான சந்திப்பு, என்ன ஒரு மனிதர் என கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார்.

குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் WWE எனும் மல்யுத்த போட்டியில் பங்கேற்றவர் தி கிரேட் காலி என்று அழைக்கப்படும் தலீப் சிங் ராணா.

2.16 மீட்டர் உயரமும் 157 கிலோ எடையுடன் மாமிச மலையாக இவர் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts