கிளிநொச்சி வாள்வெட்டுக்கு காரணம் மனைவியின் கள்ள தொடர்பாம்

நேற்று பிற்பகல் கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த வாள்வெட்டுச் சம்பவம் , தவறான உறவு காரணமாக இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பெண் , தனது அயல்வீட்டில் இருந்த நபரொருவருடன் தவறான உறவை பேணி வந்துள்ள நிலையில் , இதனை அறிந்த அவரின் கணவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

பின்னர் , மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய குறித்த பெண்ணின் கணவரை பார்க்க வந்த அவரின் நண்பர்கள் அயல் விட்டிற்கு சென்று கள்ளக்காதலரை தாக்கியுள்ளனர்.

இதன் போது , பிரதேசவாசிகள் இணைந்து குறித்த நபர்களை தாக்கியுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

இதன் போது , கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட மூன்று பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , கள்ளக்காதலரின் தந்தை தடியொன்றால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments

comments

Related posts