கமலின் விசாரணையில் வெளிப்பட்ட ஆரவ்வின் மருத்துவ முத்தம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜூலியானா வெளியேற்றப்பட்டார்

தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக இருந்துவருகிறது. பலவித சர்சைகள் மற்றும் பரபரப்புகளுக்கு மத்தியில் கமல்ஹாசன் இன்று பிக்பாஸ் மேடையேறினார். அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓவியா தற்கொலைக்கு முயன்றது குறித்தும் அவருக்கு பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தினார். அதில் காயத்ரி, ஆரவ் உள்ளிட்டோரிடம் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது காயத்ரியின் நடத்தைகளுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார். அந்த நேரத்தில் கமலின் கேள்விகளுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு இருந்தது. மேலும் ஓவியாவுக்கு ‘மருத்துவ முத்தம் கொடுத்ததாக’ ஆரவ் ஒப்புக்கொண்டார். முன்னதாக ஓவியா, வையாபுரி, ஜூலியானா ஆகியோரது பெயர்கள் எலிமினேஷனுக்கான பெயர்களாக பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில் ஜூலி போதிய வாக்குகள் பெறாத நிலையில் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.


Comments

comments

Related posts