ஒரு பெண் முதலில் ப்ரபோஸ் செய்தால், ஆண்கள் இப்படி தான் எண்ணுவார்களா?

நமது சமூகத்தில் ஒரு பெண் உறவு சார்ந்து எந்தவிதமான கருத்தை முன் வைத்தாலும் அது அவரது குணாதிசயங்களை, பாத்திரத்தை பாதித்துவிடுகிறது என்பதே உண்மை. ஆண்கள் செக்ஸ் பற்றி தம்பட்டம் அடித்தாலும் கண்டுக் கொள்ளாத இச்சமூகம். பெண் செக்ஸ் என்ற வார்த்தையை மெல்ல கூறினாலே கேடுகெட்டவள் என கூற ஒரு நொடியும் தாமதிப்பதில்லை. இது செக்ஸ்-ல் மட்டுமல்ல… என்பதே பெரும் வருத்தம். ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் காதலை தெரிவிக்கலாம். எத்தனை முறை வேண்டுமானாலும், எத்தனை வித்தியாசமாக வேண்டுமானாலும். ஆனால், அதே ஒரு பெண், தனக்கு பிடித்த ஆணிடம் காதலை தெரிவித்தால்… நண்பர் கூட்டம் டேய் மச்சான் உசாரு, எதுக்கும் யோசி.., அவளே வந்து சொல்றா? சரியாப்படல என நொட்டை பேச்சு பேசுவார்கள். ஒரு ஆண் பெண்ணிடம் ப்ரபோஸ் செய்யும் போது பெண்ணுக்கு ஏற்படும் அச்சத்திற்கும், ஒரு பெண்…

Read More

கறைபடியத் தொடங்கும் நல்லாட்சி அரசாங்கம்

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக இரண்டு சட்டமூலங்களைத் திருத்துவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியிருக்கும் மேலதிக கருத்துகள் வருமாறு: நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்துக்குக் கட்டுப்பட வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையகத்துக்குள்ளது. எனினும், ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு விரோதமாக தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக ஓரிரு சட்டமூலங்களைத் திருத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தி மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டிய தலையாய பொறுப்பு நாடாளுமன்றத்துக்குள்ளது. தனது இஷ்டத்துக்கு தேர்தல்களைத் தள்ளிப் போடுவதன் மூலம் அரசு ஜனநாயகத்தை மட்டுமன்றி பொது மக்களின் அடிப்படை உரிமைகளையும் மீறி வருகிறது. தேர்தலொன்றின் மூலம் தங்களுக்குத் தேவையான அரசொன்றைத் தெரிவு செய்யும் உரிமை மக்களுக்குள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பல்வேறு காரணங்களைக் காட்டி நீண்டகாலமாக இழுத்தடித்து வரும் அரசு இப்போது மாகாண…

Read More

பிரபாகரன் போன்று வர சிறுவர்கள் ஆசைப்படுவதில்லை! சீ.வி.விக்னேஸ்வரன்

சிறுபிள்ளைகளிடம் எதிர்காலத்தில் யாரைப் போல வர வேண்டும் என்று கேள்யெழுப்பினால் காந்தி என்றோ பிரபாகரன் என்றோ அவர்கள் கூற மாட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாறாக தனது அக்கா, அண்ணாவை போன்று வர வேண்டும் என்றே கூறுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வாழ்க்கையில் எமக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். அதனை அடைவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எமது குறுகிய கால குறிக்கோளை அடைந்து விட்டால் போதுமென்று ஓய்ந்து விடாது. அந்நிலையில் இருந்து அடுத்தபடியை நோக்கி முன்னேற முயற்சிக்க வேண்டும். இவ்வாறான தொடர் முயற்சிகள் பல வெற்றிகளை எமக்கு அளிக்கும். யாரைப்போல வர ஆசைப்படுகின்றீர்கள் என்று நான் சிறுபிள்ளைகளிடம் கேட்பதுண்டு….

Read More

26 சிறுமிகளுடன் காம களியாட்டம் போட்டவருக்கு சிறுமி வைத்த ஆப்பு!

சுவிட்சர்லாந்தில் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக 26 சிறுமிகளுடன் காம களியாட்டம் போட்டது ஒரு சிறுமியின் துணிச்சலான நடவடிக்கை மூலம் தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் மேற்கு பகுதியான ரோமண்டியில் வசித்து வரும் அந்த நபர் போலி ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் சிறுமிகளை குறிவைத்து பழகி வந்துள்ளார். பின்னர் அவர்களை தன் வலையில் விழ வைத்து அவர்களின் ஆபாச நிர்வாண புகைப்படங்களை அனுப்ப வலியுறுத்தியுள்ளார். இதன் விளைவுகளை அறியாத சில சிறுமிகள் தங்கள் நிர்வாண புகைப்படங்களை விளையாட்டாக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் அந்த புகைப்படங்களை வைத்து மிரட்டி அந்த சிறுமிகளை நேரலையில் ஆபாசமாக காம லீலையில் ஈடுபட வைத்துள்ளார் அந்த நபர். சில சிறுமிகளை தனது வீட்டிற்கே வரவழைத்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த செயலை அந்த நபர்…

Read More

தமிழருக்கு சிகிச்சை மறுக்கப்பட்ட துயரம்: 7 மணி நேரம் உயிருக்கு போராடிய இளைஞர் பலி!!

கேரளாவில் விபத்தில் சிக்கிய தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிகிச்சையளிக்காமால் அலைகழித்த சம்பவத்தால், அவர் 7 மணி நேரம் உயிருக்கு போராடி பின் இறந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொல்லம் பகுதியில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் சாலை விபத்து ஒன்றில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் பலத்த காயமடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு பார்வையாளர்கள் யாரும் இல்லை என கூறி சிகிச்சை அளிக்க மறுத்தனர். பின்னர் வேறு ஒரு தனியார் மருத்துவமனையை அனுகியபோதும் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அங்கு சுவாச குழாய் வசதி இல்லை என கூறி திரும்பி அனுப்பினர். இதன் காரணமாக சுமார் 7 மணி நேரம்…

Read More

ஆவா குழுவின் god father கோத்தபாய ராஜபக்ச வாம்!!!

ஆவா குழு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து, விசாரணை மேற்கொள்ளுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் வலியுறுத்தியுள்ளார். ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விடயம் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே இதனை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஆவா குழு தொடர்பான பிரச்சினை தலைதூக்கிய போது, ஆவா குழுவின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவே உள்ளதாகவும், ஆவா குழுவை அவரே உருவாக்கியதாகவும், ஆயுதங்கள் மற்றும் பணம் கொடுத்ததாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நாம் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துமாறு வலியுறுத்தியிருந்தோம். இந்த நிலையில்…

Read More

கொழும்பில் WWE தி கிரேட் காலியும், விராட் கோலியும் சந்திப்பு – படங்கள் இணைப்பு

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர் விராட் கோலியும், மல்யுத்த வீரர் தி கிரேட் காலியும் இலங்கையில் நேற்று சந்தித்துக் கொண்டுள்ளனர். உலகளாவிய ரீதியில் நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இருவரும் கொழும்பில் சந்தித்து நண்பர்கள் தினத்தை கொண்டாடியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றியதுடன், “தி கிரேட் காலியுடன் சிறப்பான சந்திப்பு, என்ன ஒரு மனிதர் என கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அமெரிக்காவில் நடைபெற்று வரும் WWE எனும் மல்யுத்த போட்டியில் பங்கேற்றவர் தி கிரேட் காலி என்று அழைக்கப்படும் தலீப் சிங் ராணா. 2.16 மீட்டர் உயரமும் 157 கிலோ எடையுடன் மாமிச மலையாக இவர் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

வடமாகாணத்தில் திருடப்பட்டுள்ள ஆசிரியர்களின் 3 வருட சேவைக் காலம் – நியாயம் கிடைக்குமா?

வடமாகாணத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்று, யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதி ஆசிரியர்களது சேவைக் காலத்தை 2016 ஆம் ஆண்டு நியமனம் பெற்றவர்களாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு கணித்துள்ளமையால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களது 3 வருட சேவைக் காலம் கருத்திற்கொள்ளப்படாது விடப்பட்டுள்ளதாகக் விசனம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 01.07.2013 அன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதாகக் கூறிக்கொண்டு ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனம் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சால் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பயிற்சிகளை முடித்த பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-1(ஆ) ற்குள்…

Read More

கிளிநொச்சி வாள்வெட்டுக்கு காரணம் மனைவியின் கள்ள தொடர்பாம்

நேற்று பிற்பகல் கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த வாள்வெட்டுச் சம்பவம் , தவறான உறவு காரணமாக இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. குறித்த பெண் , தனது அயல்வீட்டில் இருந்த நபரொருவருடன் தவறான உறவை பேணி வந்துள்ள நிலையில் , இதனை அறிந்த அவரின் கணவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர் , மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய குறித்த பெண்ணின் கணவரை பார்க்க வந்த அவரின் நண்பர்கள் அயல் விட்டிற்கு சென்று கள்ளக்காதலரை தாக்கியுள்ளனர். இதன் போது , பிரதேசவாசிகள் இணைந்து குறித்த நபர்களை தாக்கியுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது. இதன் போது , கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட மூன்று பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , கள்ளக்காதலரின் தந்தை…

Read More

மட்டக்களப்பில் அம்மன் சிலையை உடைத்து ஆற்றில் வீசிய கொடூரம் – சிங்கள அமைப்புக்கள் கண்டனம்

மட்டக்களப்பு – பட்டிருப்பு பாலத்தடியில் உள்ள மாரியம்மன் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு, ஆற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பட்டிருப்பு பாலத்தின் மறு முனையில் உள்ள மக்களால் குறித்த சிலை கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் சிலை உடைக்கப்பட்டு பட்டிருப்பு ஆற்றில் தூக்கி வீசப்பட்டு பின்னர் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு சமூகமளித்திருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை சிலையை பார்த்துள்ளதுடன், அங்கு நின்றவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இங்கு நடைபெற்ற சம்பவமானது ஒரு மதத்தினை மலினப்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகும். இதனை யார் செய்திருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு சிலையினை உடைத்து அதனை தூக்கி ஆற்றில் வீசி விட்டு செல்வதென்பது ஒட்டு…

Read More