விந்தணுக்களின் திறனை மேம்படுத்தும் அற்புத வைத்தியங்கள்!

பாக்கியங்கள் மிகச்சிறந்த பாக்கியம், குழந்தை பாக்கியம் தான். ஏனென்றால் குழந்தைகள் நமது வருங்காலத்தில் முக்கிய பாதியாக இருக்கிறார்கள். குழந்தையின்மைக்கு பல காரணங்கள் இருந்து வந்தாலும், ஆண்மையின்மையும் ஒரு முக்கிய காரணமாக இருந்துவருகிறது.

விந்தணுக்களின் பலத்தை சில உணவு பொருட்களின் மூலம் அதிகரிக்க முடியும் என்றாலும், நீங்கள் உங்கள் வாழ்க்கைமுறையையும் சற்று மாற்றியமைக்க வேண்டியது முக்கியம். இறுக்கமான உடைகளை அணிவது, நீண்ட நேரம் வாகனத்தில் பயணம் செய்வது, சூடான நீரில் குளிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

1. ஆலமர கொழுந்து

ஆலமரத்தின் கொழுந்தினை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர, தாம்பத்திய உறவில் மனைவிக்கு நல்ல சுகமளிக்க முடியும். ஆலமரத்தின் பழமும் இதற்கு உதவும்.

2. பேரிச்சை

பேரிச்சம் பழம் மற்றும் பாதாம் பருப்பு பத்து என சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் பலம் கூடும். ஆண்மை அதிகரிக்கும். இரும்பு சத்தும் கிடைக்கும்.

3. முருங்கை

முருங்கை கீரை மற்றும் முருங்கை காய் இரண்டுமே நல்ல பலனை கொடுக்கும். இது அனைவரும் அறிந்ததே. உடல் ஆரோக்கியத்திற்கும் முருங்கை மிகச்சிறந்தது.

4. செம்பருத்தி பூ

செம்பருத்திப்பூ ஆண்மையை அதிகரிப்பதில் மிகச்சிறந்தது. இதனை சுத்தம் செய்து நிழலில் உலத்தி பொடி செய்து, தினமும் இதனை ஒரு தேக்கரண்டி சாப்பிட்ட பின்னர் பால் குடித்தால் ஆண்களின் விந்தணுக்களும், தாம்பத்திய சுகமும் அதிகரிக்கும்.

5. பாலும் தேனும்!

முதலிரவு என்றாலே பால் தான்! பாலும் தேனும் கலந்து சாப்பிட்டால் தாம்பத்திய சுகம் அதிகரிக்கும். திராட்சைப்பழம் சாப்பிட்டு வந்தாலும் தாம்பத்திய சுகம் அதிகரிக்கும்.

6. அத்திப்பழம்

தினமும் அத்திப்பழம் காலை, மாலை என ஒன்றொன்று சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

7. கருஞ்சீரகம்

கருஞ்சீரக எண்ணெய்யை வெற்றிலையுடன் தடவி சாப்பிட்டாலும் ஆண்மை அதிகரிக்கும், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். வெற்றிலையை புகையிலைகளுடன் சேர்த்து சாப்பிடுவது தவறானதாகும்.

8. அமுக்கிராங்கிழங்கு

அமுக்கிராங்கிழங்கு பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். இது மிகச்சிறந்த மூலிகைப்பொருளாகும். அமுக்கிராங்கிழங்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடியது.

9. தாமரைப்பூ

தாமரைப்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஒரிதழ் தாமரையை பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து விருத்தியடையும்.

Comments

comments

Related posts