தனுசு – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017

குறி விலகாத அம்பைப் போல் குறிக்கோள் தவறாதவர்களே. எவ்வளவு சம்பாதித்தாலும் அலட்டிக் கொள்ளாதவர்களே. உயர்ரக வாகனம், விமானம் என மாறி மாறிப் பயணித்தாலும், பழைய மிதிவண்டி பயணத்தை மறக்காதவர்களே. மதம் மீறிய மனிதநேயர்களே. மனசாட்சிக்கு பயந்தவர்களே. உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார் என்பதை பார்ப்போம். ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து கொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் தட்டிவிட்டதுடன், உங்களுக்கும் உங்கள் தகப்பனாருக்கும் இடைவெளியை ஏற்படுத்தி, கையில் ஒரு காசு கூட தங்கவிடாமல் துடைத்தெடுத்த ராகு பகவான் இப்பொழுது எட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல்பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும். இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும். தந்தையின் ஆரோக்யம் சீராகும். பிதுர்வழிச்…

Read More

யாழ்ப்பாணத்தில் பெண் மருத்துவரின் காரை பதம் பார்த்த ஏசி புகையிரதம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு பின்புறம், ஆத்திச்சூடி விநாயகர் ஒழுங்கையிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையிலேயே இவ்விபத்து இன்று பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடப்பதற்கு எதிரெதிர் திசையில் கார் ஒன்றும் முச்சக்ரவண்டியொன்றும் முயற்சித்துள்ளது. அச்சமயம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற விசேட அதிசொகுசு புகையிரதம் கடவையை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் முச்சக்கரவண்டியின் சாரதி வண்டியை பின்னால் இயக்கியுள்ளார். இதையடுத்து காரிலிருந்த பெண் காரை நிறுத்திவிட்டு காரிலிருந்து சடுதியாக வெளியேறினார். இதனால் கார் புகையிரதத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளதுடன், காரை செலுத்திய மருத்துவரான குறித்த பெண் தப்பித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Read More

7, 16, 25 ஆம் திகதிகளில் பிறந்தோருக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017

27.7.2017 முதல் 13.2.2019 வரை ஏழாம் எண்ணில் பிறந்த நீங்கள் கேதுவை நாயகனாகக் கொண்டவர்கள். சர்வ ஞானமும், கல்வியும், நளினமும், நல்வார்த்தைகளும், நற்செயலும், இமயம் போன்ற தெய்வீகத் தன்மையும் கூடவே குழப்பங்களுக்கு ஆளாகும் குணமும் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் அறிவுரையால் உயர்ந்தவர்கள் பலர். வசீகரமான முகமும் மென்மையான குணமும் கொண்டவர்கள். தொட்டாற்சிணுங்கிபோல் அடிக்கடி நாணிக்கோணிக் கொள்பவர். நண்பர்கள் மிகக் குறைவு. நேர்த்தியான ஆடை, அணிகலன்கள் மிகவும் பிடிக்கும். துன்பங்களை மனதிற்குள்ளேயே வைத்துப் புழுங்குவதால், ரத்த அழுத்த நோய்க்கு மிக இலகுவாக ஆட்படுபவர்கள். பலநேரங்களில் மாபெரும் வெற்றிகளை மிகச்சாதாரணமாகப் பெறுவீர்கள். மனம், ஞானத்தைத் தேடி அலையும். பின்னாளில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெளிவாக எடுத்துரைப்பவர் நீங்கள். போதனை, குறிசொல்வது, பொருள் வரவழைத்தல், யாருக்கும் புலப்படாத விஷயங்களை ஆராய்வது போன்றவற்றால் பிறரை எளிதில் கவர்வீர்கள். அமைதி, ஈகைகுணம், மனோபலம், நாட்டுப்பற்று…

Read More

கொழும்பு – யாழ்ப்பாணம் அன்னை முத்துமாரி ஏசி பஸ் விபத்து

கிளிநொச்சியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி உட்பட காயமடைந்த ஆறுபேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் அறையுக்குள் மின்சார கம்பங்களையும் அருகில் இருந்த கடைத்தொகுதியையும் உடைத்துக்கொண்டு புகுந்ததில் சாரதி உட்பட ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளமையால் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். அத்துடன் இவ் விபத்து அதிவேகத்தினாலோ அல்லது சாரதி நித்திரை தூங்கியதனாலோ இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

தின பலன் – 4 ஆகஸ்டு 2017

தின பலன் ராசி மேஷம் கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன் ராசி ரிஷபம் சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை ராசி மிதுனம் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு….

Read More