வித்தியாவின் சடலம் சிதைக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்த சாட்சி

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் சடலம் சிதைக்கப்பட்டிருந்த இருந்த நிலையினைப் பார்த்து இராணுவம் மற்றும் கடற்படையினர் மீது திசை திருப்புவதற்கான சந்தேகங்கள் இருந்ததாக குற்றப் புலனாய்வு பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் ஏ.ஜே. நிஷாந்த சில்வா தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் கடற்படை முகாம் இருந்த காரணத்தினால் இந்த சந்தேகம் எழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு நீதாய தீர்ப்பாயத்தில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், குறித்த படுகொலை வழக்கின் நான்காம் கட்ட விசாரணைகள் இன்று யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர், பா.சசிமகேந்திரன் மற்றும் மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்றது. கடந்த மாதம் 25ஆம் திகதி 35வது சாட்சியான குற்றப்புலனாய்வு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகரின் சாட்சியம்…

Read More

ஓகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்

2017ஆ‌ம் ஆ‌ண்டு ஆகஸ்டு மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. வி‌த்யாதர‌ண் அவர்கள் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர். 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் எங்குச் சென்றாலும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். வி. ஐ. பிகள் உதவுவார்கள். ஓரளவு பணவரவு உண்டு. என்றாலும் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். பிள்ளைகளால் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். அவர்களுடன் மனத்தாங்கல் வரக்கூடும். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் எச்சரிக்கையாக இருங்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையை இப்போது தவிர்ப்பது நல்லது. மாதத்தின் மையப் பகுதி முதல் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும். மாதத்தின் பிற்பகுதியில் வாகன விபத்துகள், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும்….

Read More

5, 14, 23 ஆம் திகதிகளில் பிறந்தோருக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017

27.7.2017 முதல் 13.2.2019 வரை புதனின் ஆதிக்கத்தில் பிறந்து, அறிவால் காரியத்தில் வெற்றி கொள்ளும் ஐந்தாம் எண் அன்பர்களே, நீங்கள் ஆற்றல், அதிக உழைப்பு மனித நேயம், எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள். எதிலும் வேகத்தை காட்டுவீர்கள். தங்களின் உத்வேக செயல்பாட்டிற்கு மற்றவர்கள் ஒத்து வரவில்லையானால் அவர்களை சோம்பேறி’ என்று வசைபாடுவீர்கள். உங்களின் மூளை, சாட்டிலைட்டிலிருந்து சக்தி பெற்றதுபோல் செயல்படும். எதிலும் பரபரப்பாக இயங்குபவர். ஏதாவது ஒன்றை கண்டுபிடித்த வண்ணமிருப்பர். முடியாத சில காரியங்களைக்கூட சாதித்து விடுவேன் என்று குழந்தை போல் சவால் விடுவீர்கள். மொத்தத்தில் பிடிவாதம் அதிகம். அடுத்தவரால் செய்ய முடியாத காரியங்களை செய்து பெயர்பெற விரும்புபவர். ஒரே இடத்தில் இருக்கப் பிடிக்காத நீங்கள் வெளியூர் பயணத்தை அதிகம் விரும்புவீர்கள். இயற்கைச் சூழ்நிலைகள் மிகவும் ஈர்க்கும். இந்த ராகுகேது பெயர்ச்சியில், எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்….

Read More

ரஷ்யா இலங்கைக்கு திருப்பி கொடுத்த வாள் – என்ன சிறப்பு இருக்கிறது அவ் வாளிள்..?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்த போது ரஷ்ய ஜனாதிபதி விளடீமீர் புட்டின் வழங்கிய, அரச வாள் கண்டி அரச காலத்திற்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டைய கால ஆயுதங்கள் சம்பந்தமான விசேட நிபுணரான இஸ்ரேலியர் எலோக்ஸ் பஃர்கர்கே இதனை குறிப்பிட்டுள்ளார். இவர் ரஷ்ய அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சின் தொல் பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். இந்த வாள் குறித்து எலோக்ஸ் பஃர்கர்கே மேலும் தெரிவிக்கையில், “இந்த வாள் கூரிய கத்தியுடன் கூடிய வாள். உருக்கில் செய்யப்பட்டுள்ள இந்த வாளின் பிடி தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது. வாள் கடந்த காலத்தில் போருக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். வாளின் நுனிப்பகுதி நன்கு கூர்மையாக உள்ளது. வாளின் படி தங்க நிறத்திலான உலோகத்தில் செய்யப்பட்டுள்ளதுடன் அது உயர் தரமான வடிவமைப்பு. வாளின் பிடியில் கற்பனையான மிருகத்தின் முகம் காணப்படுகிறது. சிங்கத்தின் உருவமும் உள்ளது. சிங்கத்தின்…

Read More

இலங்கையில் மனைவியின் தங்கையை மனைவியாக பயன்படுத்திய நபர் கைது

மனைவி பிரசவத்திற்காக மருத்துவனையில் அனுமதியான போது மனைவியின் சகோதரியை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து வன்புணர்வுக்கு உட்படுத்திய 31 வயதான நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 20 வயதான குறித்த யுவதியை பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வரவழைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது சகோதரி பிரசவத்திற்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் கணவர் தன்னை ஹோட்டல் ஒன்றுக்கு வருமாறு அழைத்ததாக, அந்த யுவதி காவல்துறை உத்தியோகத்தர்களிடம் தெரிவித்துள்ளார். குறித்த நபரிடம் தான் கடன் தொகையொன்றை கோரியதுடன் அதனை பெற்றுக்கொள்ள குறித்த ஹோட்டலுக்கு சென்றாகவும் யுவதி கூறியுள்ளார். பணத்தை தனது நண்பரிடம் இருந்து பெற்று கொடுக்க வேண்டும் என கூறிய சகோதரியின் கணவன், தான் பணிபுரியும் ஹோட்டலுக்கு வருமாறு யுவதியிடம் கோரியுள்ளார். பணத்தை எதிர்பார்த்து சென்ற அந்த யுவதி அங்கு வேறு ஒரு விபரீதத்திற்கு முகம் கொடுத்துள்ளார். அங்கு…

Read More

விருச்சிகம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017

மனதில் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசும் நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள். மற்றவர்களை உடனே நம்பி உதவி செய்து, தர்மசங்கடத்தில் சிக்கிக் கொள்வீர்கள். சட்ட திட்டங்களை சரியாக பின்பற்றும் நீங்கள், வரம்பு மீறிப் பழக மாட்டீர்கள். இலவசமாக எதையும் பெற மாட்டீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம். ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையையும், உத்யோகத்தில் இடமாற்றங்களையும், சிறுசிறு அவமானங்களையும் தந்த ராகுபகவான் இப்பொழுது ஒன்பதாம் வீட்டில் வந்தமர்கிறார். செயற்கரிய காரியங்களையும் இனி முடித்துக் காட்டுவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்….

Read More

மட்டக்களப்பு – பிள்ளையாரடி 28 வயது இளைஞர் பரிதாப பலி

மட்டக்களப்பு – பிள்ளையாரடியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் வாழைச்சேனை, மாணிக்கபுரம் எனும் இடத்தை சேர்ந்த சிறிதரன் நிஷாந்தன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞர் இன்று அதிகாலையளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது குறுக்கே சென்ற மாடு மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இலங்கை பாஸ்போர்ட்டில் இனி இந்த மாற்றம் வரப்போகின்றது

இலங்கை பிரஜைகளுக்கு இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றினை அறிமுகம் செய்வது தொடர்பிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் அனைத்து வகை தகவல்களையும் உள்ளடக்கிய சிம் அட்டை வடிவிலான இலத்திரனியல் மாதிரி ஒன்று வெளியிடப்படவுள்ளது. அதனடிப்படையில் இலத்திரனியல் வெளிநாட்டு பயண கடவுச்சீட்டினை அறிமுகப்படுத்தல் மற்றும் வெளியிடல் வேலைத்திட்டத்தினை முறையான ஆய்வின் பின்னர் அரச மற்றும் தனியார் இணைப்பின் கீழ் செயற்படுத்துவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன மற்றும் தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் அமைச்சர் ஹரின் பிரனாந்து ஆகியோர் இணைந்து குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர். மேலும், இந்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

யாழில் கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது ஏன்? காரணம் வெளியானது

அண்மையில் யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியமைக்கான காரணம் வெளியாகி உள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கோப்பாய் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். ஆவா குழுவில் இருந்து விலகிய உறுப்பினர் மீது வாள் வெட்டு மேற்கொண்டதன் பின்னர் தப்பியோடினோம். அதன்போது இந்த பொலிஸார் தம்மை சுற்றி வளைப்பதாக எண்ணி அவர்களை வாளினால் வெட்டினோம் என சந்தேக நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தேக நபர்களினால் ஆவா குழு உறுப்பினர் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டு காயமடைந்த நிலையில், காயத்துடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

இலங்கை மக்களுக்கு இனிய செய்தியை அறிவித்தார் மின்வலு அமைச்சர்

மின்சாரத் தடையோ அல்லது கட்டண அதிகரிப்போ மேற்கொள்ளப்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வறட்சியான காலநிலை காரணமாக மின் கட்டண அதிகரிப்போ அல்லது மின் துண்டிப்போ மேற்கொள்ளப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்… கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் நாளாந்த மின் தேவை பத்து வீதத்தினால் அதிகரித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தின் தேவை உயர்வடைந்துள்ளது. நீர் மின் உற்பத்தி மேற்கொள்ளும் நீர்நிலைகளின் நீர் மட்டம் 36 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. சில நீர்நிலைகளின் நீர் மட்டம் 20 வீதம் வரையில் குறைவடைந்துள்ளது. பிரதான மின் உற்பத்தி நிலையமான நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 300 மெகாவோட் மின் உற்பத்தி செய்யும் ஓர் இயந்திரம் பழுதடைந்துள்ளது. இவ்வாறு பல்வேறு சவால்களை…

Read More