கன்னி – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017

முயற்சியை முதுகெலும்பாகக் கொண்டவர்களே! குடிசையில் வாழ்ந்தாலும், கோபுரமாய் சிந்திப்பவர்களே! எதிலும் அழகையும், நேர்த்தியையும் விரும்பும் நீங்கள், பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். பணம், பதவி பார்த்து பழகாமல் அனைவரையும் அளவுக்கு அதிகமாக நேசிப்பீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் என்ன மாற்றத்தைத் தருவார்கள் என்று பார்ப்போம். ராகுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு பன்னிரெண்டில் அமர்ந்து கொண்டு காரியத் தடைகளையும், மன உளைச்சல்களையும், அடுத்தடுத்த பயணங்களால் செலவுகளையும் தந்து கொண்டிருந்த ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு லாப வீடான 11ம் வீட்டிற்கு வருவதால் உங்களின் வசதி, வாய்ப்புகள் பெருகும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். நீங்கள் கடனாக கொடுத்த பணமும் கைக்கு வரும். குடும்பத்தில் சந்தோஷம்…

Read More

தென்னிந்திய ஹீரோ ரேஞ்சில் தன்னை கற்பனை பண்ணி வைத்திருந்த ஶ்ரீகஜன் – ஆதாரம் அழிப்பு

வித்தியா வழக்கில் சுவீஸ்குமாரை கைதாகாமல் தப்பிக்க உதவியதாக முன்னாள் தமிழ் பொலீஸ் உப பரிசோதகர் ஶ்ரீகஜன் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். அவரை பொலீஸ்குழுக்கள் தேடி வரும் நிலையில் அவரை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக யாழ்ப்பாணம் வந்த பொலீஸ்மா அதிபர் தெரிவித்தார். கடந்த வாரம் வரை செயற்பாட்டில் இருந்த ஶ்ரீ கஜனின் முகப்புத்தக கணக்கு தற்போது முடங்கியுள்ளது. கணக்கை ஶ்ரீ கஜனே முடக்கினாரா, இல்லை பொலீஸாரால் முடக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஶ்ரீ கஜனின் பொலீஸ் அத்தியாயம் மூடப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பான பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இவரின் முகப்புத்தக கணக்கு செயற்பாட்டில் இருந்த வேளை தென்னிந்திய சினிமா ஹீரோக்கள் பாணியில் பிஸ்டல்கள், மெஷின் துவக்குகள் என்பவற்றோடு வித விதமாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்டிருந்த படங்கள் பதிவிடப்பட்டிருந்தன. அத்துடன் பணிகாலங்களில் தனது அதிகாரத்துக்கு மீறியவாறு மெத்தனமாக இவர் நடந்து…

Read More

நாளை ரயிலில் பயணிக்க இருப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாளை நள்ளிரவு தொடக்கம் பணிபகிஷ்கரிப்பொன்றில் ஈடுபட தொடரூந்து சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன் செயலாளர் இந்திக தொடம்கொட இதனை தெரிவித்திருந்தார். தொடரூந்துகளுக்கு உதவி சாரதிகளை இணைத்துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தல் உட்பட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Read More

வடக்கில் அதிகரித்துள்ள வன்முறைகளுக்கு காரணம் இதுவே! – புதிய கண்டுபிடிப்பு

தென்னிலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே வடக்கில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ். பருத்தித்துறை திக்கம் கலாச்சார மண்டபத்தில் இளையோர்களை சந்தித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “வடக்கில் தற்போது குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள், துப்பாக்கிப் பிரயோகங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் இதனை எடுத்துக் காட்டுகின்றன. தென்னிலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே வடக்கில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிடும் கருத்துக்கள் இதனுடன் தொடர்புபடுகின்றன. வடக்கில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அவர் தீவிர…

Read More

14 வயது மாணவியை கற்பழிக்க வீட்டில் அறை கொடுத்து உதவிய 19 வயது இளைஞனின் பெற்றோர்

பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயதான இளைஞன் மற்றும் அவருக்கு உதவிய இளைஞனின் பெற்றோரையும் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெற்றோரின் பொறுப்பில் இருந்த 14 வயதான பாடசாலை மாணவியை தனது வீட்டுக்கு கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்காக பயாகலை பிரதேசத்தை சேர்ந்த இளைஞரும் அவரது பெற்றோருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயதான பாடசாலை மாணவி பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார். இளைஞனும் குறித்த மாணவியும் உறவினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் குறித்த இளைஞனை அவரது வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More

தமிழ் பொலீஸ் எஸ்.ஐ சிறீகஜனை தூக்கி அடித்தார் பொலீஸ்மா அதிபர்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தேடப்பட்டு வரும் நபரான உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பொலிஸ்மா அதிபர் அங்கு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “யாழ். கோப்பாய் பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். கை, கால் உள்ளிட்ட இடங்களில் வாள்வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவருக்கும் சற்று பலத்த காயங்களே ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், சந்தேகநபர்களை கைது…

Read More

3, 12, 21, 30 ஆம் திகதிகளில் பிறந்தோருக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017

27.7.2017 முதல் 13.2.2019 வரை தனகாரகனான குருவை நாயகனாகக் கொண்ட மூன்றாம் எண் அன்பர்களே, நீங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறாதவர்கள். நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, இறைப்பற்று, மூத்தவரை மதித்தல் ஆகிய குணங்களால் உயர்வடைபவர்கள். நீங்கள் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள். ஆலோசனை வழங்குவதில் ஆதவன். பல இடங்களில் நீங்கள் சொல்வதே முடிவாகும். சிறு வயதிலிருந்தே பல செயற்கரிய காரியங்களை எளிதாகச் செய்து பெயர் பெறுபவர்கள். மதிநுட்பத்தால் மாட்சிமை பெறும் உங்களுக்கு உடல் உழைப்பு ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. உங்களின் உடல் மிகவும் மென்மையானது. பல உணவுவகைகள் அலர்ஜியையும் கூடவே இழுத்துக் கொண்டு வந்துவிடும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். யாருடைய பணமாவது உங்கள் கையில் இருந்து கொண்டே இருக்கும். பொன் ஆபரணங்களை அதிகம் விரும்புவர்கள். மத நம்பிக்கை அதிகம். தன் விஷயங்களை பிறரிடம் சொல்ல மாட்டீர்கள். பொதுக் காரியங்களை நிறைய எடுத்துக்கொண்டு…

Read More

இலங்கை அரச வேலைவாய்ப்புக்கள் (25 -30 ஜூலை 2017 காலத்தில் வெளியிடப்பட்டவை)

இந்த வாரம் வெளியான அரச, வங்கி மற்றும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்களின் தொகுப்பு குறிப்பு: இப் பகுதியில் ஏதாவது தெளிவின்மை காணப்படுமாயின் எங்களுடன் facebook message மூலம் இணைந்து தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

Read More

2, 11, 20, 29 ஆம் திகதிகளில் பிறந்தோருக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017

27.7.2017 முதல் 13.2.2019 வரை மனதுக்கு அதிபதியான சந்திரனை நாயகனாகக் கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே, நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை எக்காலத்திலும் செய்ய மாட்டீர்கள். அன்பு, அடக்கம், பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் பிரதிநிதியாக இருப்பீர்கள். மக்களால் வெகுவாகப் போற்றப்படுவீர்கள். அனைவரையும் அன்பு எனும் ஆயுதத்தால் அடக்கி விடுவீர்கள். ஆராய்ச்சி எண்ணம் அதிகம் உடையவர்கள். வீட்டின் மீதும் உறவுகளின் மீதும் அதிக பாசம் உள்ளவர்கள். இறை நம்பிக்கை மிக அதிகம். கண்கள் காந்தசக்தியுடையவை. ஏதேனும் இறை நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பீர்கள். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க மாட்டீர்கள். ஒரு புள்ளி கிடைத்தால் போதும், பெரிய கோலமே போட்டுவிடுவதில் வல்லவர்கள். பிறருக்கு எப்போதும் ஏதேனும் கருத்துகளை போதித்துக் கொண்டே இருப்பீர்கள். மகோன்னதமான, செயற்கரிய காரியங்களைச் செய்து, பேரும் புகழும் பெறுவீர்கள். இந்த ராகுகேது பெயர்ச்சியால் குடும்பத்தில்…

Read More

சிம்மம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017

எடுத்த எடுப்பிலேயே எதையும் முடிக்க விரும்பும் நீங்கள் வெற்றி ஒன்றையே இலக்காக வைத்திருப்பீர்கள். ஒரு குடும்பத்தையோ, இயக்கத்தையோ, தொழிற் கூடத்தையோ திறம்பட வழி நடத்தும் தலைமைப் பண்பு உங்களிடம் உண்டு. பேச்சிலே காரத்தைத் தூவினாலும் உங்கள் இதயத்தில் ஈரம் இருந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம். ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ஜென்ம ராசியிலேயே அமர்ந்துகொண்டு வாழ்க்கை மீது ஒருபிடிப்பும் இல்லாமல் செய்தாரே! எந்தவிதமான சுகங்களையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் திணறடித்தாரே! எப்போதும் சோகக் கடலில் மூழ்கடித்தாரே! எதையும் ஆர, அமர யோசிக்க விடாமல் ஒருவித அச்சத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தினாரே! உங்கள் குடும்பத்தினர் கூட உங்களை புரிந்து கொள்ளாமல் அவமதித்தார்களே! அடிக்கடி தலைச்சுற்றல், முதுகு வலி, கால் வலி…

Read More