இலங்கையில் அரசியல் நோக்கங்களோடு வேலைநிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்

அரசியல் நோக்கங்களோடு முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டங்களின் பின்னணியில் செயற்படுபவர்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, தொழிற்சங்கப் போராட்டங்கள் பலவடிவங்களில் முன்னெடுக்கப்படும். வேலைநிறுத்தம் என்பது அதன் இறுதி வடிவமாகவே இருக்கும்.

ஆனால், இன்று எதற்கெடுத்தாலும் தொழிற்சங்கங்கள், முன்னறிவித்தல் எதுவுமின்றி இறுதி வடிவத்தையே கையில் எடுக்கின்றன என கூறியுள்ளார்.

இதனால், மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றதாகவும், அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கத்தினரும் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவதால் நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க அரசு இத்துறையை அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடக்கூடாது.

அரசியல் நோக்கங்களோடு முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டங்களின் பின்னணியில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments

Related posts