நல்லூர் முருகனின் 1ம் நாள் திருவிழாவின் மாலை நேர திருவீதியுலா புகைப்பட தொகுப்பு

நல்லூர் முருகனின் 1ம் நாள் திருவிழாவின் மாலை நேர திருவீதியுலா புகைப்பட தொகுப்பு. படங்கள்: நல்லூரான்

Read More

சுகாதார அமைச்சில் முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல் – விண்ணப்ப படிவம் இணைப்பு

சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவுகின்ற பின்வரும் பதவி நிலைகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முகாமைத்துவ உதவியாளர் – மருத்துவ விநியோக உதவியாளர் முகாமைத்துவ உதவியாளர் – உணவு மேற்பார்வையாளர் முகாமைத்துவ உதவியாளர் – ஆண் / பெண் விடுதிப் பொறுப்பாளர் விண்ணப்பப் படிவம், கடிதவுறை தயாரிப்பதற்கான முகவரியிட்ட தாள், குறித்த பதவி தொடர்பான வர்த்தமானப் பத்திரிக்கை அறிவிப்பு என்பன இங்கு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தரவிறக்கம் செய்வதற்கு : கடிதவுறை தபால் முகவரி விண்ணப்பப் படிவம் வர்த்தமானிப் பத்திரிக்கை அறிவிப்பு

Read More

தென்மராட்சி மிருசுவிலில் மனைவி மீது கட்டி வைத்து கடும் தாக்குதல்

தென்மராட்சி மிருசுவில் மனைவியைக் கட்டி வைத்து கணவன் கொடூரமாக தாக்கியுள்ளார். விடத்தற்பளைப் பகுதியிலுள்ள வீடொன்றில் மனைவியைக் கட்டி வைத்து நேற்று இரவிரவாகத் கணவன் தாக்கியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காயங்களுக்கு இலக்கான நிலையில் மரத்துடன் கட்டப்பட்டிருந்த பெண்ணை இன்று அதிகாலை அயலவர்கள் மீட்டுச் சென்று மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு வழங்கிய சிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

ஶ்ரீலங்கன் விமானத்தில் பரிமாறப்பட்ட பெற்றா பெட்டிக்கடை உணவுகள் – படம் இணைப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கு தரமற்ற உணவுகள் வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமான சேவையின் போது, புறக்கோட்டையிலுள்ள வீதிக்கடைகளின் உணவுகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமகால அரசாங்கத்தின் கீழ் புதிய நிர்வாகம் ஏற்படுத்தப்பட்ட போதிலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றமடையவில்லை. இந்த நிலையில் அண்மையில் ஸ்ரீலங்கன் விமான சேவையில் பயணித்த பயணி ஒருவருக்கு தரம் குறைவான உணவு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தின் விமான சேவை நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உணவு புகைப்படத்துடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாழைப்பழம், பனிஸ் என்பன தலா ஒவ்வொன்றும், இஞ்சி தேனீர் ஒரு கோப்பை மற்றும் ஒரு தேக்கரண்டி சீனி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் சிறந்த 10 விமான சேவை நிறுவனங்களில், ஸ்ரீலங்கன் எயார்லைன் விமான சேவையும் ஒன்றாகும். எனினும் இலங்கையின்…

Read More

மிதுனம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017

தும்பைப் பூ சிரிப்பும், பலரை வழி நடத்தும் அளவுக்குப் பட்டறிவும், எடுத்த காரியத்தை முடிக்கும் வல்லமையும் கொண்ட நீங்கள். காசு பணத்திற்காக கௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார் என்பதை பார்ப்போம். ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு சவால்களில் வெற்றியையும், அதிரடி முன்னேற்றங்களையும் தந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் வந்தமர்வதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்படப் பாருங்கள். வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைவதால் வெகுளித்தனமாகப் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். சிலருக்கு நீங்கள் நல்லதே சொன்னாலும் அதை தவறாகப் புரிந்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஒரு விஷயத்தை செய்வதென்றால் அது முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசித்து செய்வது…

Read More

வவுனியாவில் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வவுனியாவில் பொலிஸார் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக முதியவரொருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். அதில், முறைப்பாடொன்றினை பதிவு செய்யச் சென்ற போது 3 தினங்கள் அலைக்களித்ததுடன், முறைப்பாட்டினையும் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பொலிஸாருக்கு எதிராக முறைப்பாட்டினை மேற்கொண்ட குறித்த 70 வயது முதியவரது, மருமகன் முறையான உறவினரொருவர் தனது இரண்டு பிள்ளைகள், மனைவி, மாமியார் ஆகியோரை கடந்த 04.07.2017 தனது வீட்டை விட்டு விரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தொடர்பில் தெரியாத நிலையில் அவர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைபாடொன்றை பதிவு செய்வதற்காக சென்றுள்ளார். இருப்பினும், அவரது முறைப்பாட்டினை செட்டிகுளம் பொலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லை என அந்த முதியவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தனது உறவு முறையான மருமகன் பொலிஸாரை தனது வலையில் சிக்க வைத்து…

Read More

இலங்கையில் அரசியல் நோக்கங்களோடு வேலைநிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்

அரசியல் நோக்கங்களோடு முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டங்களின் பின்னணியில் செயற்படுபவர்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, தொழிற்சங்கப் போராட்டங்கள் பலவடிவங்களில் முன்னெடுக்கப்படும். வேலைநிறுத்தம் என்பது அதன் இறுதி வடிவமாகவே இருக்கும். ஆனால், இன்று எதற்கெடுத்தாலும் தொழிற்சங்கங்கள், முன்னறிவித்தல் எதுவுமின்றி இறுதி வடிவத்தையே கையில் எடுக்கின்றன என கூறியுள்ளார். இதனால், மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றதாகவும், அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கத்தினரும் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவதால் நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க அரசு இத்துறையை அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடக்கூடாது. அரசியல் நோக்கங்களோடு முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டங்களின் பின்னணியில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையும்…

Read More

18 வயது யாழ்ப்பாண இளம் பெண்ணை காணவில்லை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று வருவதாகக் கூறி வீட்டிலிருந்து சென்ற 18 வயதான இளம் யுவதியை காணவில்லை என்று ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்தாம் வட்டாரம் வேலணைப் பகுதியைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுவருவதாக நேற்று முன்தினம் புதன்கிழமை காலை 08 மணிக்கு கூறிச் சென்ற யுவதி இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் யுவதியின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஊர்காவற்துறை தலைமைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More

கொழும்பு மக்களே உங்களை தயாராக்கி கொள்ளுங்கள் – 11 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

களனி, பேலியகொடை, வத்தளை உள்ளிட்ட கொழும்பின் சில பகுதிகளிலும், கம்பஹாவிலும் 11 மணி நேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மின்சார சபையில் அத்தியாவசியமான பழுதுபார்க்கும் வேலைத்திட்டம் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயற்றுகிழமை இவ்வாறு 11 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய குறித்த தினத்தில் காலை 8 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மன்னார் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் எதிர்வரும் 31 ஆம் திகதி 9 மணிநேர நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அத்துடன், 31ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை குறித்த நீர்…

Read More

இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்கியவருக்கு சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் தனிச்சிறை கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் கடந்த சனிக்கிழமை நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிரதான சந்தேகநபர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, நீதிவான் வீட்டில் முன்னிலைப் படுத்திய போது சந்தேகநபரை எதிர்வரும், 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், குறித்த நபர் யாழ். சிறைச்சாலையில், தனி அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை அவரது இரண்டாவது மனைவி சந்திதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வேறு யாரும் குறித்த நபரை சந்தித்து பேசவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்த துப்பாக்கிப்…

Read More