இளஞ்செழியனின் கண்ணீர் இருண்ட யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்

தனது பாதுகாப்பிற்காக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தமை குறித்து நீதிபதி இளஞ்செழியன் கண்ணீருடன் மன்னிப்பு கோரினார்.

இந்த சம்பவம் உள்நாடு மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையின் பிரபல நீதிபதியும் எழுத்தாளரும் கவிஞரும் மனித உரிமை ஆர்வலருமான பசில் பெர்னாண்டோ விளக்கமளித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கட்டுரையில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிபதி எம்.இளஞ்செழியன் கடந்த பல தசாப்த காலங்களில் இலங்கையில் உருவாகிய சிரேஷ்ட நீதிபதி ஒருவராகும். சமகாலத்தில் மேல் நீதிமன்ற நீதிபதியாக செயற்படும் அவருக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகும் அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியானால் அவர் நாட்டின் சிறந்த சொத்தாக காணப்படுவது மாத்திரமின்றி, இலங்கையின் சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பில் காணப்படும் இருண்ட யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நபராக காணப்படுவார்.

நீதி, சட்டம் மற்றும் நீதி வழங்கல் நிலைப்பாட்டை நிறுவுவது என்ற கருத்தை ஒரு போதும் விட்டுக்கொடுக்காமல் நீண்ட காலமாக நீதிபதி இளஞ்செழியன் போராடி வருகின்றார்.

அண்மையில் அவருக்கு மிகவும் நம்பிக்கையுடன் பாதுகாப்பு வழங்கிய அவரது மெய்ப்பாதுகாவலர் சரத் ஹேமச்சந்திர கொலை செய்யப்பட்ட சம்பவம் முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது

நீதிபதி இளஞ்செழியன் அந்தச் சம்பவத்திற்கு பிரதிபலித்த விதம் மிகவும் பொருத்தமானது மற்றும் அது பேச வேண்டிய ஒரு விடயமாகும்.

உயிரிழந்த தனது பாதுகாவலரின் மனைவியின் காலில் விழுந்து மிகவும் தாழ்வான முறையில் அவரை வணங்கினார்.

இந்த சோகமாக சந்தர்ப்பத்தில் அவர் கண்ணீர் விட்டு அழுதார். கண்ணீர் வடிக்கும் நீதிபதி ஒருவர் தொலைக்காட்சியில் முதல் முறையாக காட்டப்பட்டார்.

“கண்ணீர் வடிக்க முடியாத நீதிபதி ஒரு நீதிபதியாக இருப்பதற்கு தகுதியற்றவர்” என இந்தியாவின் சிரேஷ்ட நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ண அய்யர் தெரிவித்திருந்தார்.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்தை மிகவும் சாதாரண ஒரு விடயமாக கருதும் வகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட கருத்துக்கள் திகைப்பூட்டும் விடயமாகும்.

சம்பவம் தொடர்பில் மிக குறுகிய நேரத்தில் அது குடிபோதையில் இருந்த இரண்டு நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் என அறிவித்து சம்பவத்தின் முக்கியத்துவத்தை நிராகரிக்க முயன்றார். சம்பவம் தொடர்பில் இன்னமும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.

பொது மக்களை குழப்பி விடுவது மற்றும் சம்பவத்தை திசை திருப்புவதே பொலிஸாரின் கருத்துக்களின் நோக்கமாக காணப்படுகின்றது.

குற்றவாளிக்கு பாதுகாப்பு வழங்கியமையினால் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்குள் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால், இது வேண்டும் என்றே மறைக்கப்படுவதாக கருதப்படுகின்றது.

இந்த சம்பவத்தை குற்ற விசாரணை திணைக்களத்தின் விசேட விசாரணை பிரிவு விசாரிக்க வேண்டும். அது உள்ளூர் பொலிஸாரின் கைகளில் ஒப்படைக்க கூடாது.

தகுதி வாய்ந்த மற்றும் ஒரு பாரபட்சமற்ற குழு விசாரணை மேற்கொள்வதற்கு முன்னர் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் இவ்வாறான கருத்து வெளியிடுவது என்பது தகுதியற்ற செயற்பாடாகும்.

இந்த சம்பவம் சிறந்த ஆராய்ச்சியாளர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

முழு சம்பவமும் கிட்டத்தட்ட ஒரு Kafkaesque எபிசோட் போல காட்சியளிக்கின்றது. நீதித்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பது இந்த சம்பவத்தால் அடையாளப்படுத்தப்படுகின்றது.

நீண்ட காலமாக இலங்கை மக்கள் அனுபவித்த துன்பகரமான நாடகத்தின் ஒரு பகுதியாக இது காணப்படுகின்றது.

நீதிபதி இளஞ்செழியன் உயிரிழந்த வீரர் ஒருவருக்காக மாத்திரம் கண்ணீர் விட்டு அழவில்லை. இலங்கையினுள் முழுமையான நீதி அமைப்பு எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடி பற்றிய ஒரு கூக்குரலாகும். இது ஒரு மாற்றத்திற்காக அழைப்பு விடுக்கும் அழுகை. இது மக்கள் விரக்தியை பிரதிபலிக்கும் ஒரு அழுகையாகும்.

இறந்த பொலிஸ் அதிகாரி சரத் ஹேமச்சந்திர கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக நீதிபதிக்கு அருகில் நின்றுவிட்டார். உண்மையாகவும், விசுவாசமாகவும் ஒரு மகிழ்ச்சியான உதாரணமாக இது காணப்படுகின்றது.

இன பேதங்களை தாண்டி மக்களுக்காக பணியாற்றுவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள் என உணர்த்துகின்றது.” என நீதிபதி தனது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments

Related posts