பெற்றோலிய சங்க பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது ஆனால்…

கனிய எண்ணெய் தொழிற்சங்க பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை மட்டுமே பணிப்புறக்கணிப்பை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

10 நாள் கால அவகாசம் கோரினார் சம்பந்தர்

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு பத்து நாள் கால அவகாசம் வேண்டும் என கேப்பாப்புலவு மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். கேப்பாப்புலவில் 3ம் கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய 111 ஏக்கர் காணி தொடர்பிலும் 4ம் கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய 70 ஏக்கர் காணி அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில், இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, உள்ளிட்டவர்களுடன் கேப்பாப்புலவு மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதன்போது 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இராணுவம் இணங்கியுள்ளதாகவும், இராணுவம் அங்கிருந்து விலகிச் செல்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், இந்த பணிகளை நிறைவேற்றி முடிக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் தேவை என…

Read More

நீதிபதி இளஞ்செழியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ள விடயம்

பொலிஸ் ஊடகபேச்சாளரின் பொறுப்பற்ற செயற்பாடு குறித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கண்டனம் வெளியிட்டுள்ளார். யாழ் நல்லூரில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் இறுதி நிகழ்வு சிலாபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று சென்ற போது, நீதிபதி இளஞ்செழியன் தனது கண்டனத்தை வெளியிட்டார். தன்னை கொலை செய்யும் நோக்கிலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தில் பிரதானமாக பாதிக்கப்பட்டவர் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளுக்கமைய இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். அங்கு பொலிஸ் அதிகாரிகள் இருவரும் முடிந்தளவு தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு முயற்சித்ததாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை நல்லூரில் வைத்து, நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் மெய்ப்பாதுகாவலர்களினால் நீதிபதியின் உயிர் பாதுகாக்கப்பட்டது. எனினும் இந்த அனர்த்தத்தில் 51 வயதான சரத் ஹேமச்சந்திர துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி…

Read More

கதிர்காமத்திற்கு சென்ற மட்டக்களப்பு இளைஞர் சடலமாக வீடு திரும்பிய சோகம்

கதிர்காமத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் மஹியங்கனையில் நீராடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, மட்டக்களப்பு, வாழைச்சேனை, பேத்தாழை, முருகன் கோயில் வீதியை சேர்ந்த கணேசன் யசோராஜ் (வயது 26) என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் வீட்டில் இருந்து கதிர்காமத்திற்கு செல்வதற்காக மஹியங்கனை வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது மாலை மூன்று மணியளவில் இளைப்பாறுவதற்காக மஹியங்கனை பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றில் நீராடியுள்ளார் இதன்போது திடீரென நீர்மட்டம் அதிகரித்தமையாலும் நீரோட்ட வேகம் அதிகரித்ததாலும் குறித்த இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் உயிரிழந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் இன்று(26) காலை கண்டெடுக்கப்பட்டது. சடலம் பிரேத பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பிரேதப் பரிசோதனையின்…

Read More

இளஞ்செழியன் இன்று செய்த மனதை நெகிழவைக்கும் செயல் இது

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தினருக்கு யாரும் எதிர்பாராத உதவியை நீதிபதி இளஞ்செழியன் செய்துள்ளார். தன்னுடன் 15 வருடங்களாக சேவையாற்றி தன்னுயிரை காப்பாற்றிவிட்டு உயிர்நீத்தவரின் இரு பிள்ளைகளையும் நீதிபதி இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். இரு பிள்ளைகளையும் தனது சொந்த பிள்ளைகளைப் போல் பராமரித்து, தான் இறக்கும் வரை அவர்களது எதிர்காலத்திற்கு தேவையான சகல விடயங்களையும் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து செய்வதாக நீதிபதி இளஞ்செழியன் உறுதியளித்துள்ளார். கடந்த சனிக்கிழமை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நீதிபதியின் உயிரை காப்பாற்றுவதில் தாக்குதல் தாரியுடன் சண்டையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையல் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் சிலாபம் பகுதியைச்சேர்ந்த 51 வயதாகிய சரத் ஹேமச்சந்திர என்ற மெய்ப்பாதுகாவலர்…

Read More

இளஞ்செழியன் மீதான கொலை முயற்சி நபர் – LTTE இன் முகாமில் சமையல் வேலை செய்தவர்

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் நாடு பூராகவும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அந்த அனர்த்தத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இந்தத் தாக்குதலை புனர்வாழ்வு பெறாத விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த போராளி ஒருவர் நடத்தியிருந்தார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதனை அனைத்து ஊடகங்களும் முன்னிலைப் படுத்திய செய்திகள் வெளியிட்டிருந்தன. எனினும் தாக்குதல் சம்பவத்தை நடத்தியவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை முன்னாள் போராளி என குறிப்பிடுவது தவறான விடயம் என சந்தேகநபரின் மனைவி தெரிவித்துள்ளார். 39 வயதான சிவராசா ஜெயந்தன் என்பவர், நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலை மேற்கொண்டதாக நேற்று பொலிஸில் சரணடைந்தார். சிவராசா ஜெயந்தன் 1995…

Read More

சுடலையில் படுத்திருந்த இளஞ்செழியன் விவகார நபர் – முழுமையான வாக்குமூலம் இதோ

“நல்­லூ­ரில் உள்ள வீட்­டில் தண்­ணி­ய­டிச்­சுட்டு (மது­போதை) அந்­தச் சந்­தி­யில் வந்து நின்­றம். பொலிஸ்­கா­ரன் வரேக்க, உனக்கு தைரி­யம் இருந்தா அவன்ர துவக்கை எடுத்­துச் சுடடா பார்ப்­பம் என்று மச்­சான் சொன்­னான். பொலிஸ்­கா­ரன்ர துவக்கை எடுக்­கேக்க தெரி­யா­மல் சுடு­பட்­டுட்­டு­து”­ இவ்­வாறு நல்­லூர் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­தாக பொலி­ஸா­ரால் தேடப்­பட்டு வந்த முதன்­மைச் சந்­தே­க­ந­பர், பொலி­ஸில் நேற்­றுச் சர­ண­டைந்து வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தில் தெரி­வித்­தார். சந்­தே­க­ந­பர் யாழ்ப்­பாண நீதி­வான் எஸ்.சதீஸ்­த­ர­னின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தில் நேற்று மாலை முற்­ப­டுத்­தப்­பட்­டார். அவரை எதிர்­வ­ரும் 8ஆம் திகதி வரை­யில் விளக்­க­ம­றி­ய­லில் வைக்க நீதி­வான் உத்­த­ர­விட்­டார். நல்­லூ­ரில் கடந்த சனிக்­கி­ழமை மாலை 5.15 மணி­ய­ள­வில் துப்­பாக்­கிச்­சூட்­டுச் சம்­ப­வம் இடம்­பெற்­றி­ருந்­தது. யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப்­பா­து­கா­வ­ல­ரது பிஸ்­டலை பறித்தே துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­டி­ருந்­தது. தன்னை இலக்கு நோக்­கி­ய­தாக இந்­தச் சம்­ப­வம் இருக்­கக் கூடும் என்று சந்­தே­கிப்­ப­தாக…

Read More

கணவன் மீன்பிடிக்க சென்றதும் சுயதொழிலில் ஈடுபட்ட குடும்பப் பெண் கைது

அங்குலான பிரதேசத்தில் காணப்பட்ட சூதாட்ட நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில், 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. காவல்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவர் மீனவ தொழிலுக்கு சென்ற பின்னர், அவருக்கு தெரியாமல் மனைவி, இந்த சூதாட்ட நிலையத்துக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட பெண்கள் 30, 35 மற்றும் 40 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Read More

பெற்றோல் விநியோகிக்கும் இராணுவத்தினரின் நற்பணிக்கு இடையூறு – மக்களின் கோபத்துக்கு ஆளாகும் பெற்றோலிய சங்கம்

எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் பவுசர்கள் வெளியேற முடியாத வகையில் வீதிகள் மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல பகுதியின் நுழைவாயிலில் பாரியளவில் பவுசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த பவுசர்களின் டயர்களில் காற்று வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த தடைகளை தகர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More