கும்பம் – ஆடி மாத ராசி பலன்கள் (17.7.2017 முதல் 16.8.2017 வரை)

மனசாட்சிக்கு விரோதமாக நடக்காத கும்ப ராசி அன்பர்களே! உங்களின் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ஜென்மத்தில் கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். கடந்த ஒன்றரை வருட காலமாக சர்ப்ப தோ‌ஷத்தின் பின்னணியில் சிக்கியிருக்கிறீர்கள். எனவே பல காரியங்களில் தடைகள் ஏற்பட்டிருக்கலாம். இனம்புரியாத கவலை இதயத்தைச் சூழ்ந்திருக்கலாம். எதைத் தொட்டாலும் தாமதம் ஏற்படுகின்றதே என்று நினைத்திருக்கலாம். இதற்கெல்லாம் விடிவு காலம் வரப்போகிறது. இம்மாதம் ராகு–கேதுக் களின் பெயர்ச்சி நிகழவிருக்கிறது. ஜென்மத்திலுள்ள கேது பின்னோக்கிச் செல்லப் போகிறார். மகரத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் மனக்கலக்கம் அகலும். மதிப்பும், மரியாதையும் உயரும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு 6–ம் இடத்திற்கு வரப்போகிறார். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் காணப் போகிறீர்கள். உத்தியோகத்திற்காக முயற்சி செய்தவர் களுக்கு அது கைகூடிவரும். புதிய தொழில் தொடங்க…

Read More

இளஞ்செழியனுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் இவை

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய விஷேட அதிரடிப் படையினரின் அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கும் நீதிபதி மா. இளஞ்செழியனுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது, நீதிபதி இளஞ்செழினின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதன் பின்னர், யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை தொடர்பு கொண்டு, நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்துள்ளார். இதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய நீதிபதிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி இளஞ்செழியனுக்கு சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான 8 பேர் அடங்கிய பொலிஸார் பாதுகாப்பு…

Read More

சுவிஸ் குமாருக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி! குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு

சுவிட்ஸர்லாந்தில் வசித்து வந்த சுவிஸ் குமார் என்பருக்கும் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருக்கும் நேரடி தொடர்பு இருக்கும், என்பது குறித்து மன்றுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இருவருக்கு இடையில் இடைத்தரகர்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுத்துள்ளதாகவும், அது குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் தப்பிச் செல்ல உதவியதாக தெரிவித்து யாழ். மாவட்ட முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது சந்தேகநபரான வடமாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித்…

Read More

சாக்கு போட்டு அழைத்து வரப்பட்ட இளஞ்செழியன் விவகார குற்றவாளி – படங்கள் இணைப்பு

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் சரணடைந்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் சதீஸ்கரன் இன்று உத்தரவிட்டுள்ளார். யாழ். நீதிவான் சதீஸ்கரனின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தளத்தில் குறித்த நபரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பிரதான சந்தேகநபரை பொலிஸார் தீவிரமான தேடி வந்த நிலையில், இன்று காலை பிரதான சந்தேகநபர் யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார். 39 வயதான விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சிவராசா ஜயந்தன் என்ற நபரே குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராவார். சரணடைந்த ஜயந்தனிடம் விசாரணைகளை மேற்கொண்ட யாழ். பொலிஸார், இறுதியில் நீதிவான் சதீஸ்கரனின் வாசஸ்தளத்தில் அவரை முன்னிலைப்படுத்தி இருந்தனர். இதன்போது அவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம்…

Read More

மகரம் – ஆடி மாத ராசி பலன்கள் (17.7.2017 முதல் 16.8.2017 வரை)

உழைப்பால் உயர விரும்பும் மகர ராசி அன்பர்களே! ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் குரு பகவானின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே காரியங்களில் தடை இருந்தாலும், கடைசி நேரத்தில் கைகூடி விடும். 5,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் 5–ம் இடத்தில் வலுப்பெற்றிருப்பது யோகம்தான். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆயினும் சுக்ரனின் மீது சனியின் பார்வை பதிவதால் பங்குதாரர்களால் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம். சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒருசேர உங்கள் ராசியைப் பார்க்கிறார்கள். சூரிய பார்வை பதிவதால் அரசு வழிச் சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கிடைக்கும். சுக லாபாதி பதியான செவ்வாய் நீச்சம் பெற்றிருக்கிறார். அவரோடு 6–க்கு அதிபதியான…

Read More

சுடச்சொன்னார் சுட்டேன்! இளஞ்செழியனை சுட்ட சந்தேகநபர் வாக்குமூலம்

“நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்) உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார். நான் சும்மா அவரது பிஸ்டலை எடுத்தேன். அது சுடுபட்டு விட்டது”. இவ்வாறு யாழ். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 08.20 மணியளவில் குறித்த நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தவர் முன்னாள் போராளி என ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர் என்றும் சந்தேக…

Read More

`அந்த அறுவறுக்கத்தக்க சம்பவத்தால் அன்பு, உறவு என்ற வார்த்தைகளே அலர்ஜியாகிவிட்டது’

ரோஷ்னி, 22 வயது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (BBC இல் தவறான தொடுதல் காரணமாக, சிறு வயதில் பாதிக்கப்பட்ட அனுபவங்களைப் பெண்கள் பகிர்ந்து கொள்ளும் தொடரின் நான்காம் பகுதி.) குழந்தைப் பருவம் விளையாட்டுத்தனமும், குறும்பும் நிறைந்தது. சிரித்து கலகலப்பாக இருக்கவேண்டிய அந்தப் பருவத்தில் சந்தித்த ஓர் அசம்பாவிதம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. பல ஆண்டுகள் ஆனபோதிலும், அந்த அறுவறுக்கத்தக்க சம்பவத்தால் ஏற்பட்ட மனத்தடைகளில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறேன். விளைவு? அன்பு, உறவுகள், திருமணம் என்ற வார்த்தைகளே அலர்ஜியாகிவிட்டது. எனக்கு 11-12 வயது இருக்கும்போது, வெளியூரில் இருந்து படிப்பதற்காக வந்த அவன், பக்கத்து வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தான். என் குடும்பத்தினருக்கு அவன் மீது நல்ல அபிப்ராயம், அவனை முழுமையாக நம்பினார்கள். நானும், என்னுடைய ஒன்றுவிட்ட தம்பியும் அவனிடம் டியூஷன் படித்தோம். டெஸ்டில் மதிப்பெண்கள் குறைவாக பெற்ற என்னை, ஒரு…

Read More

வித்தியா கொலைவழக்கில் பெண்கள் அணியும் ஜீன்ஸ் இல் சுற்றி மறைக்கப்பட்டிருந்த ஆதாரம் வெளியானது

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடி ஆறாம் இலக்க சந்தேகநபரான பெரியாம்பி எனப்படும் துசாந்தனின் வீட்டில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ். மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. யாழில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு தீர்ப்பாய விசாரணை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்ன லிங்கம் பிறேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ் மேல் நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்றது விசேட வழக்கு தொடுநரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியிருந்தனர். இந்த கொலை வழக்கின் சந்கேநபர்களை விசாரணை செய்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிசாந்த…

Read More

நீதிபதி இளஞ்செழியனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!

துணிச்சல் மிகு நீதிபதி என்னும் பெயரை சம்பாதித்துக் கொண்டவர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன். செம்மணிப் படுகொலை வழக்கு அவரின் துணிச்சலான செயற்பாட்டை புடம்போட்டுக் காட்டியிருந்தது. வடக்கில் வன்முறைச் சம்பவங்களும், அடிதடிகளும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்க, அவற்றை தன்னுடைய அதிரடி தீர்ப்புக்களாலும், உத்தரவுகளாலும் தடுத்து நிறுத்தவும், மக்களின் நம்பிக்கைக்கும் வழி வகுத்திருந்தார். இன்று அவரை இலக்கு வைப்பதற்கும் அவை தான் காரணமாக இருக்கின்றன. செம்மணியில் யாரால் படுகொலை நடத்தப்பட்டதோ அவர்களைக் கொண்டே அதனை தோண்டுவதற்கும் நடவடிக்கை எடுத்த போது தமிழ் மக்களின் மனங்களில் அவர் நம்பிக்கையை விதைத்திருந்தார். அன்றே எதிரிகள் அவரை இலக்கு வைக்கத் தொடங்கி விட்டனர். ஒரு வகையில் சொன்னால், நம்பிக்கை ஒளிக்கீற்றாக தமிழினத்திற்கு தென்பட்டார் என்றால் மிகையாகாது. அப்படிப்பட்ட ஒரு நீதிபதியை இன்று தென்னிலங்கையும் மெச்சி உச்சி குளிர்கின்றதெனில், அவரிடம் ஏதோவொன்று இருக்கின்றது என்பதை…

Read More

300 ஆண்டுகள் வாழக்கூடிய அரிய வகை உயிரினம் கண்டுபிடிப்பு!! – படங்கள் இணைப்பு

உலகிலேயே அதிக ஆயுள் கொண்ட உரிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினம் சுமார் 300 ஆண்டுகள் வாழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆயுட்காலத்தை கொண்ட உயிரினங்களாக ஆமைகளும், திமிங்கிலங்களும் கருதப்பட்டு வந்த நிலையில் குழாயுருவான புழுக்கள் (Tube Worms) 300 ஆண்டுகள் வாழும் என கண்டறியப்பட்டுள்ளது. இவை மெக்ஸிக்கோ வளைகுடா பகுதியில் காணப்புகின்றன. இதற்கு முன்னர் Galapagos என்ற ராட்சத ஆமை 177 வருடங்களும், Bowhead எனும் திமிங்கிலம் 211 வருடங்களும் அதிகபட்சமாக வாழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More