துலாம் – ஆடி மாத ராசி பலன்கள் (17.7.2017 முதல் 16.8.2017 வரை)

பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லும் துலாம் ராசி அன்பர்களே! ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் அஷ்டமத்தில் பலம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை அவர் மீது பதிகிறது. எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அருளாளர்களின் ஆலோசனை அப்போதைக்கப்போது கைகொடுக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர் களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். உங்கள் ராசிக்கு 2–ம் இடத்தில் சனிபகவான் வக்ர இயக்கத்தில் இருக் கிறார். குடும்பச் சனியாக தற்சமயம் நடைபெறுவதால் குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டுமென்று நினைத்தவர்களுக்கு அது கைகூடும். ஏழரைச் சனி முழுமையாக விலகும் வரை பெரிய முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 6–க்கு அதிபதியான குரு பகவான் 12–ம் இடத்தில்…

Read More

(A/L) சோசல் நிகழ்வு – மதுபோதையில் உல்லாசமாக இருந்த மாணவ செல்வங்கள்

தமது பாட­சாலைக் கல்­வியை நிறைவு செய்­வ­தை­யிட்டு மது­பான விருந்து ஏற்­பாடு செய்த இவ்­வ­ருடம் உயர் தரப்­ப­ரீட்சை எழுதும் ஆறு மாண­வர்கள் நேற்று முன்­தினம் மாலைப் பொழுதை சிலாபம் பொலிஸ் நிலை­யத்தில் கழிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர். . பாட­சாலைச் சீரு­டையில் இருந்த பாட­சாலை மாண­வர்கள் சிலர் மது போதையில் கூடாத பேச்­சுக்­களைப் பேசி­ய­வாறு முறை­யற்ற வகையில் நடந்து கொண்டு அய­ல­வர்­க­ளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் நிற்­ப­தாக பொலிஸ் அவ­சர தொலை­பேசி இலக்­கத்­திற்கு சிலாபம் வட்­டக்­களி பிர­தேச மக்கள் வழங்­கிய தக­வ­லை­ய­டுத்து சிலாபம் பொலிஸார் அப்­பி­ர­தே­சத்­திற்குச் சென்­றுள்­ளனர். இதன் போது ஒரு வீட்டில் நின்ற இம்­மா­ண­வர்கள் அதிக போதையில் அய­ல­வர்­க­ளுக்கு தொல்­லை ஏற்­படும் வகையில் நடந்து கொண்­டி­ருந்­ததை அவ­தா­னித்து அம்­மா­ண­வர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். சிலாபம் நகரின் பாட­சாலை ஒன்றில் கல்வி கற்கும் இம்­மா­ண­வர்கள்…

Read More

இலங்கையில் பதப்படுத்தப்பட்ட இயற்கை தலைமுடி வழங்கும் திட்டம்

புற்றுநோயாளர்களின் சிகிச்சை காரணமாக தலைமுடி இழக்கும் நோயாளிகளுக்காக இயற்கை தலைமுடியினால் பதப்படுத்தப்பட்ட செயற்கை தலைமுடியினை, பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டம், இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 8 அடி அல்லது அதற்கு அதிகம் நீளம் கொண்ட தலைமுடியை இவ்வாறு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து மேலதிக விபரங்களை 011 2 363 211 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

Read More

வவுனியா பாடசாலையில் அடிக்கடி கிளம்பும் வெள்ளை நாகம் – படங்கள் இணைப்பு

வவுனியா – இறம்பைக்குளம் நடராஜானந்தா வித்தியாலய ஓலைக் கொட்டகையின் கூரையில் கடந்த சில நாட்களாக வெள்ளை நாகம் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மாணவர்கள் அச்சத்துடனனேயே கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்திருந்த இடத்தில் உள்ள நடராஜானந்தா வித்தியாலயம் போதிய அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் ஒரு ஓலைக் கொட்டகையில் இயங்கி வருகின்றது. இங்கு தரம் 5 வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த பாடசாலையின் ஓலைக் கொட்டகையின் கூரையில் வெள்ளை நிற நாக பாம்பு ஒன்று அடிக்கடி வந்து செல்வதாகவும், இதனால் மாணவர்கள் அச்சத்துடனேயே கல்வி கற்க வேண்டியுள்ளதாகவும், ஆசிரியர்களும் அச்சத்துடனேயே கல்வியைப் கற்பிக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த பாடசாலைக்கு கட்டடம் ஒன்று அமைப்பதற்காக கடந்த…

Read More

யாழ்ப்பாண தனியார் ரியூசன் களில் நடக்கும் தில்லாலங்கடிகள்

கண்டவனும் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து நடாத்தி செல்ல முடியும் என்ற அவல நிலை யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. கல்விநிறுவனங்கள் தொடர்பில் திட்டமிடப்பட்ட கொள்கைகள் எதுவும் வகுக்கப்படாத நிலையில், அப்பாவி மாணவர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். நான்கு தூண்கள், கிடையாக நடப்பட்ட பலகைகள் (அவை மேசை, வாங்குகளாக அந் நிறுவனங்களால் அடையாளப்படுத்தப்படுகின்றன) மற்றும் வெயில் நேரத்தில் சூரிய அடுப்புகளாக தகிக்கும் இரும்பு கூரை தகடுகள்…. இவை தான் பல யாழ்ப்பாண தனியார் ரியூசன் களின் வரைவிலக்கணமாகும். இவை தான் இவ்வாறு இருக்கின்றனவென்றால் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் தகுதிகள் கேளிக்கூத்தாக உள்ளன. க.பொ.த சாதாரண தரத்துக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் பலரில் க.பொ.த உயர்தரப் பரீட்சை கூட சித்தியடையாதவர்கள் பலர் உள்ளனர் என்ற விடயம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்??? அத்துடன் அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள், மேலதிக வருமானம்…

Read More

உயர்தர பரீட்சைக்கான கருத்தரங்குகள் முன்னோடிப் பரீட்சைகள் நடத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

ஆகஸ்ட் மாதம் 2 ம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடத்த பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியினுள் முன்னோடி பரீட்சை வினாத்தாள் வழங்குதல் மற்றும் மேலதிக வகுப்புக்கள் நடத்துதல் என்பனவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இந்த நிலையில், பரீட்சைகள் திணைக்களம் மேற்படி தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Read More

இலங்கை மக்களே எச்சரிக்கை! வருகிறது புதிய அவசர கால சட்டம்

கொழும்பு மற்றும் சனநெருக்கடியான பிரதேசங்களில் முறையற்ற முறையில் திண்மக் கழிவுகளை அகற்றுவதை தடுத்தல் மற்றும் டெங்கு நோய் தொற்றல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைளை அரசாங்கம் மேற்கொள்ள உள்ளது. அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு மற்றும் சனநெருக்கடி மிகுந்த பிரதேசங்களில் அமைந்துள்ள அனைத்து நிர்மாண கட்டடங்களிலும், அந்நிர்மாண நடவடிக்கைகளின் சட்ட ரீதியான உரிமையாளர், ஒப்பந்தக்காரர் மற்றும் ஏனைய உரிய தகவல்கள் அடங்கிய பெயர் பலகையினை தயாரித்தல் அவசியமாகும். பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் இடம் கொடுக்கும் நபர்களுக்கு எதிராக அவர்களின் பெயர்களிலேயே தனியார் வழக்கு தொடரல். உள்நுழைவதற்கு கடினமாக முறையில் முடி காணப்படும் வீடுகள் மற்றும் சொத்துக்களினுள் உள்நுழைந்து பரிட்சிப்பதற்கும், அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கும்…

Read More

26 வயது இளம் யாழ்ப்பாண ஆசிரியரை கம்பியால் அடித்தவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை

வவுனியாவில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணா எனும் 29 வயதான ஆசிரியர் அண்மையில் பாடசாலை நிறைவடைந்ததும் செட்டிக்குளம் ஆசிரியர் விடுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதன்போது 25 முதல் 30 இற்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு இளைஞர்கள் செட்டிக்குளம் முதலியார்குளம் அவர் மீது இரும்புக்கம்பியால் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வவுனியா நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட…

Read More

உங்க பிறந்த தேதி சொல்லுங்க!! நீங்க காதல்ல கில்லாடியான்னு சொல்றோம்!!

காதல், அன்பு இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் நினைத்து பார்க்க முடியுமா. கண்டிப்பாக முடியாது ஏனெனில் இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவையானதாகவும் மாற்றுகிறது. அன்புடன் கூடிய காதல் இல்லாத வாழ்க்கை என்றும் ஒரு சுமை தான். நம்மளை சுற்றியுள்ளவர்களை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. ஏனெனில் எல்லாருடைய குணங்களும் பழக்க வழக்கங்களும் வேறுபடுகின்றன . எனவே தான் காதல் கடந்த உறவுக்குள் நுழைவதற்கு முன் அதற்கு நாம் பொருத்தமாக இருப்பமா என்பதை பார்த்துக் கொள்வது நல்லது. இதற்கு திருமணப் பொருத்தம் மாதிரியே காதல் பொருத்தமும் உங்களுக்கு தேவைப்படுகிறது. இந்த பொருத்தம் உங்கள் உறவுகளுக்கு நீண்ட ஆயுள் தருவதோடு சண்டை சச்சரவுகளை தவிர்த்து உறவுகளில் இன்பத்தை நீடிக்கவும் செய்யும் நீங்கள் காதல் மன்னாகவோ அல்லது காதல் ராணியாகவோ திகழ்வீர்களா என்பதை உங்கள் பிறந்த தேதியை…

Read More

வித்தியா கொலை வழக்கு விசாரணை! சுவிஸ் குமார் தொடர்பில் புதிய தகவல் வெளியீடு

மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் யாழ் தலைமை பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பாலசூரிய நேற்று சாட்சியம் அளித்தார். இதன்போது யாழ் தலைமை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உதவி ஆய்வாளர் ஸ்ரீகன், சுவிஸ் குமார் என்பவரை கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக அழைத்து வரவில்லை எனத் தெரிவித்துள்ளார் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டிற்காகவே சுவிஸ் குமார் அழைத்து வரப்பட்டதாக மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் அவர் நேற்றைய தினம் சாட்சி வழங்கியுள்ளார். அவ்வாறான முறைப்பாடு ஒன்று மேற்கொண்டு சுவிஸ் குமார் என்பவரை யாழ் சட்ட வைத்திய அதிகாரி முன்னால் ஆஜர்படுத்துமாறு வடமாகாண பொறுப்பதிகாரியான சிரேஷ் பிரதி பொலிஸ் மா அதிபர், தன்னிடம் ஆலோசனை வழங்கியதாக ஸ்ரீகஜன் தன்னிடம் குறிப்பிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு விசாரணையின் இரண்டாம்…

Read More