வலுப்படும் தமிழ் – சிங்கள உறவின் அடுத்த சம்பவம் இது

தமிழ் இந்து மதத்தைச் சேர்ந்த சாவகச்சேரி நீதவானின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என தேசிய புத்திஜீகள் சங்க சபையின் ஆலோசகர் கொட்டபொல அமரகீர்த்தி தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படும் ஒரே விஹாரையான நாவற்குளி சமுர்த்தி சுமன விஹாரையின் தாதுகோபுரத்தை நிர்மாணிப்பது தொடர்பான சர்ச்சையின் போது, சாவகச்சேரி நீதவான் எஸ்.சந்திரசேகரனின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

அரசியல் அமைப்பின் 9ம் சரத்தின் அடிப்படையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதனால் தாதுகோபுரத்தை நிர்மாணிக்க அனுமதியளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தமிழ் இந்து மதத்தைச் சேர்ந்த நீதவான் சந்திரசேகரனின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என அமரகீர்த்தி தேரர் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Related posts