தின பலன் – 16 ஜூலை 2017

தின பலன்

ராசி மேஷம்
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. சகோதரங்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ராசி ரிஷபம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பணபலம் உயரும். பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகை அதிகரிக்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

ராசி மிதுனம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடன் பிரச்னை தீரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

ராசி கடகம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

ராசி சிம்மம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ராசி கன்னி
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி துலாம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

ராசி விருச்சிகம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

ராசி தனுசு
திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ராசி மகரம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சகோதரங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

ராசி கும்பம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வராது என்றிருந்த பணம் வரும். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிட்டும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

ராசி மீனம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி எந்த முதலீடும் செய்ய வேண்டாம். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

Comments

comments

Related posts