டொல்பின் மீன்களை கொன்றவர்களை மடக்கிப் பிடித்த பொலிஸார்!

இரண்டு டொல்பின் மீன்களை கொன்று மோட்டார் சைக்கிள்களில் கொண்டு சென்ற இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தங்காலை – குடாவெல்ல பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் குறித்த டொல்பின்களை கொண்டு சென்ற போதே அவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ள இந்த டொல்பின்களை டிங்கி படகுகள் மூலம் மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இறந்த நிலையிலுள்ள இரண்டு டொல்பின்களுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக கலமெட்டிய வனஜீவிகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

Comments

comments

Related posts