யாழ்ப்பாண கோட்டையில் இனி கடலில் இறங்கி நடக்கலாம்

யாழ். கோட்டை பகுதியின் பின்புறமாகவுள்ள பண்ணை கடற்கரை அழகாக்கப்பட்டு பொழுது போக்கு இடமாக மாற்றப்பட்டு வருகின்றது.

தற்போது பண்ணை கடலில் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடலினுள் இறங்கி நடப்பதற்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக 40 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு, யாழ். மாவட்ட செயலகம் மற்றும் யாழ். மாநகர சபை என்பன முழு அளவிலான பங்களிப்பை வழங்கியுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு மாலை வேளைகளில் அதிகளவான மக்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது கடற்கரை அழகை ரசிப்பதுடன், நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளிலும் பொது மக்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

comments

Related posts