கூட்டமைப்பின் முடிவால் மகிழ்ச்சியடைந்துள்ள அஸ்கிரியபீடம் – விக்கி மீது கடுப்பில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மகாநாயக்கர்களை சந்திப்பதாக எடுத்துள்ள தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாக அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலாளர் வண.மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கு அவசியமில்லை என மகாநாயக்கர்கள் அண்மையில் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மகாநாயக்கர்களை சந்தித்து அரசியலமைப்பின் அவசியம் குறித்து தெளிவுபடுத்தவுள்ளதாக கூறியிருந்தனர்.

கூட்டமைப்பினரின் இந்த முடிவு குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும், ஏதேனும் தவறான புரிதல்கள் ஏற்பட்டிருக்குமாயின் குறித்த சந்திப்பில் அவற்றை நிவர்த்திக்கலாம் என்றும் அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலாளர் வண.மெதகம தம்மானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் சில விடயங்களில் தீவிர நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும், அது குறித்து தாம் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Related posts