இலங்கையில் ஸ்கூட்டி, செல்போன் வைத்து பிஸ்னஸ் செய்த 25, 19 வயது இரு பெண்கள்

ஸ்கூட்டர் உந்துளியில் ஹம்பாந்தோட்டை தொடக்கம் மாத்தறை வரையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி தங்காலை பிரிவின் குற்ற விசாரணைப்பிரிவால் குறித்த பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பெலிஹத்த காவற்துறையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் போது , குறித்த இருவரையும் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தங்காலை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

25 மற்றும் 19 வயதுடைய யுவதிகளே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெலிஹத்த , ரம்புக்கெடிய பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த போது குறித்த இரு பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது , சந்தேகநபர்களான குறித்த பெண்களிடம் இருந்து 3 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , நான்கு கைப்பேசிகள், வங்கி வைப்பு சீட்டுகள் இரண்டு மற்றும் 81 ஆயிரத்து 190 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , குறித்த பெண்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் சில நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Comments

comments

Related posts