ஹட்டனில் வீதியிலிருந்து வீட்டின் கூரைக்கு பாய்ந்த முச்சக்கரவண்டி!

ஹட்டனில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி வீட்டின் கூரை மீது பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த 56 வயதுடைய பெண் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹட்டனிலிருந்து ஹட்டன் காமினிபுர பகுதியை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி காமினிபுர பிரதேச நுழைவாயிலில் சுமார் 35அடி பள்ளத்தில் உள்ள வீடு ஒன்றின் கூரையின் மீது பாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில் சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என்பதோடு வீட்டிற்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments

Related posts