மகர ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

வீரியத்தை விட காரியத்தில் கண்ணாக இருப்பவர்களே! 14-ந் தேதி வரை சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் எதிர்பாராத திடீர் யோகம் உண்டாகும். பெரிய பதவி கூடி வரும். சொத்து வாங்குவீர்கள். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும்.

திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டு. மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாட்களாக தடைப்பட்ட வெளிநாட்டு பயணம் சாதகமாக அமையும். தாயாரின் உடல் நலம் சீராகும். 11ம் தேதி வரை செவ்வாய் 6-ல் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளிடம் இருந்து வந்த அலட்சியம், பிடிவாதம், முன்கோபம் பொறுப்பற்ற போக்கெல்லாம் விலகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மூத்த சகோதரங்களால் பயனடைவீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும். குரு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்வையிடுவதால் மனக்குழப்பம் நீங்கும்.

வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். தந்தைவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். பிதுர்வழி சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சனி லாப வீட்டில் நிற்பதால் அயல்நாடு, அண்டை மாநிலத்தவரால் ஆதாயம் அடைவீர்கள். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் அந்தரங்க விஷயங்களை வெளியிட வேண்டாம். அதிரடியாக செயல்படாமல் சில காரியங்களை யோசித்து செய்யப் பாருங்கள்.

கன்னிப் பெண்களே! கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தை பெருக்குவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின்தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். கடையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.

உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினர்களே! கௌரவிக்கப்படுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். வி.ஐ.பிகளின் ஆதரவால் வெற்றி பெறும் மாதமிது.

Comments

comments

Related posts