துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

நீதியின் பக்கம் நிற்பவர்களே! சுக்ரன் 8ல் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்து நீங்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். ஆனால் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் வீட்டில் அமர்வதால் சச்சரவுகள் நீங்கி சமாதானம் உண்டாகும். சகோதரியுடன் இருந்த மனக்கசப்பு மாறும்.

சகோதரரால் ஏற்பட்ட நட்டங்கள் சரியாகும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். நிலம், வீடு வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். புது வேலைக் கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வாய்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. சவால்களில் வெற்றி கிட்டும்.

சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகான்கள், சாதுக்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். குரு 12-ல் நிற்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். வீண் சந்தேகம் வரும்.

யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். காதலில் வெற்றி உண்டு. வியாபாரம் செழிக்கும். தள்ளிப் போன ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்தாகும். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள்.

பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுப்படுத்துவது, சீர்படுத்துவது போன்ற முயற்சிகளும் வெற்றியடையும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும்.

எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். சம்பள பாக்கி தொகையும் கைக்கு வரும். கலைத்துறையினரே! பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். மூத்த கலைஞர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கடின உழைப்பால் இலக்கை எட்டும் மாதமிது.

Comments

comments

Related posts